Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தயிர் சாதத்திற்கு பதில் மட்டன் பிரியாணியா??? – அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

தயிர்சாதத்திற்கு பதில் மட்டன்  பிரியாணியா – அதி ர்ச்சி கர தகவல்கள்

உலகம் முழுவதும் மருத்து வர்கள் தங்கள் நோயாளிக ளுக்கு நோய்களின் தன்மை க்கேற்ப சில உணவுக் கட்டு ப்பாடுகளை அறிவுறுத்தி வருகின்றனர். இந்த உணவு க் கட்டுப்பாடு களில் மருத்து வர் பரிந்துரைக்கும் உணவு ப் பொருட்கள் நமக்குச்

சுவையிலோ அல்லது வேறு வகையிலோ பிடிக்காமல் போய் விட்டால், அதற்கு இணையான அல்லது சம அளவு சத்துக்களைக் கொண்ட, நமக்குப் பிடித்த மாற்று உணவு ஏதும் இருக்காதா என்ற ஏக்கத்துடன் பிறஉணவுப்பொருட் களைத் தேடத்தொடங்குகிறோம்.

உதாரணத்துக்கு மருத்துவர் தயிர் சாதம் சாப்பிடச் சொன்னால், மனது மட்டன் பிரியாணியின் பின்னா ல் செல்லும். மருத்துவர் பரிந் துரைத்த உணவுப் பொருளில் என்னெ ன்ன சத்துக்கள் உள்ளன – நமக்குப் பிடித்த உணவுப் பொருளில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்று ஒப்பிட்டுப் பார்க்க விரும்பு கிறோம். நம் தேடலை எளிதாக்கு கிறது ஓர் இணையதளம்.

TWO FOODS 2

ஒப்பிட்டு அறியலாம்

இந்த இணையதளத்தில் இரண்டு காலிப் பெட்டிகள் இருக்கின்றன. ஒரு காலிப் பெட்டியில் மருத்து வர் பரிந்துரைத்த உணவுப் பொ ருளின் பெயரை உள்ளீடு செய்து கொள்ளலாம். அடுத்த காலிப் பெட்டியி ல் நமக்குப் பிடித்தமான உணவுப் பொருளை உள்ளீடு செய்யலாம்.

அதன் பிறகு கீழுள்ள ஒப்பிடு (Compare) என்னும் பெட்டியை க்ளிக் செய்தால், புதிய பக்கம் ஒன்று பார்வைக்குக் கிடைக்கி றது. இப்பக்கத்தில் நாம் உள்ளீ டு செய்த இரண்டு உணவுப் பொருட்களின் சத்துப்பொருட்க ள் குறித்த விவரங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

ஒவ்வொரு உணவுப் பொருளு க்கும் பரிமாறப்படும் அளவு (Serving) மற்றும் அந்த அளவுக் கேற்ப உணவுப் பொருளிலுள்ள கலோரிகள் (Calories), மாவுச் சத்து (Carbohydrates), கொழுப்புச் சத்து (Fat), புரதச்சத்து (Protein) போன்ற அளவுகள் நமக்குக் கிடை க்கும்.

இதன் கீழ்ப்பகுதியில் குறிப்பிட்ட உணவுப் பொருளின் வேறு சில வகைகளும் அவற்றின் கலோரி அளவும் கொடுக்கப்பட்டிருக்கும்.

உங்களுக்குப் பிடித்த இரண்டு உணவுப் பொருட்களின் சத்துக்களை ஒப்பிட்டு அறிந்துகொள்ள விரும்பினால் www.twofoods.com/ என்னும் இணைய முகவரிக்குச் செல்லலாம்.

அறுசுவை விருந்தில். . .

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: