Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கெடு தேதி முடிந்தும் ஐ.டி. ரிட்டர்ன் சமர்ப்பிக்கத் தவறினால் ஏற்படும் பாதிப்புகள் – விழிப்புணர்வுக்காக‌

கெடு தேதி முடிந்தும் ஐ.டி. ரிட்டர்ன் சமர்ப்பிக்கத் தவறினால் ஏற் படும் பாதிப்புகள் – விழிப்புணர்வுக்காக‌

ஐ.டி ரிட்டர்ன்… கெடு தேதி தவறினால்.. என்னென்ன பாதிப்புகள்?

மாதச் சம்பளக்காரர்கள் வருமான வரி க் கணக்குத்தாக்கல் செய்ய கடைசி தே தி ஜூலை 31. இந்த தேதியை பல்வேறு காரணங்களுக்காகப் பலரும் தவற விட்டிருப்பார்கள். அவர்கள் இனி

வரிக்கணக்குத் தாக்கலை எப்படிசெய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

ஜூலை 31-ம் தேதிக்குள் வரிக் கணக்குத் தாக்கல் செய்யாதவர்கள், 2015 மார்ச் வரை வரிக் கணக்குத் தாக்கல் செய்யலா ம். அபராதம் எதுவும் கிடையாது. இதை ஆங்கிலத்தில் காலதாமதமாக ரிட்டர்ன் தாக்கல் (Belated Return) செய்வது என் பார்கள்.

பாதிப்புகள் என்னென்ன?

வருமானவரி எதுவும் கட்டவேண் டும் எனில், மாதத்துக்கு 1% வட்டி கணக்கிட்டு கட்ட வேண்டும்.

ஜூலை 31-ம் தேதிக்குள் வரிக் கணக்குத் தாக்கல் செய்யவில் லை எனில், ரீஃபண்ட் கிடைக்க வேண்டி இருந்தால் தாமதம் ஏற்ப டும்.

மூலதன ஆதாய இழப்பு மற்றும் வணிக இழப்பு ஏதும் இருந்தால், அதனை அடுத்துவரும் ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்படும்.

உங்கள் வரிக் கணக்கில் ஏதாவ து தவறு இருந்தால், அதனை சரிசெய்து மீண்டும் வரிக் கண க்குத் தாக்கல் செய்ய முடியாது.

வெளிநாட்டுக்கு செல்ல விசா வுக்கு விண் ணப்பிக்கும்பட்சத் தில், வீட்டுக்கடன்/ கார் கடனுக் கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், கடந்த மூன்றாண்டுகளின் வருமா ன வரிக் கணக்குத்தாக்கல் விவரத்தைக் கேட்பார்கள். எனவே, சரி யான நேரத்தில் வரிக் கணக்குத் தாக்க ல் செய்திருப்பது அவசியம்.

ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகு வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்கள் மிகவும் கவனத்துடன் வரிக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். காரணம், இதில் ஏதாவது தவறு இ ருந்தால் சரிசெய்துகொள்ள வாய்ப்புக்கிடையா து.

னவே, படிவம் 16-ல் உள்ள விவரங்கள், வங்கிக் கண க்கு விவரங் கள், வரிச் சலுகைக்கான முதலீடு மற்றும் செலவு விவரங்களை மிகச்சரியாக ஒருமுறைக்கு இரு முறை சரிபார்த்து வரிக் கணக்கைத் தாக்கல் செய் யவும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: