Tuesday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அமெரிக்கா கண்ட அபூர்வ நிகழ்வுகள் – அதிசயம் ஆனால் உண்மை! – ஆதாரபூர்வ தகவல்களுடன்

அமெரிக்கா கண்ட அபூர்வ நிகழ்வுகள் – அதிசயம் ஆனால் உண்மை ! – ஆதாரபூர்வ தகவல்களுடன்

தற்செயலாக நடப்பதுபோல் இருக்கு ம் சில சம்பவங்களைப்பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல்தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்துவிடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதி களுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக் கெட்டாத ஏதோ ஒரு ’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதார

பூர்வ மான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா?

முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இரு ந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்-

1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானா திபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.

2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அரு கில் இருக்கும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

3. இருவர் மனைவிகளும் வெள் ளை மாளிகையில் வாழும்போ து பிள்ளை பெற்றனர். பிறந்தவு டன் குழந்தை இறந்தும் போனது.

4. இருவரும் தலையின் பின்பகு தியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.

5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண் டன் ஜான்சன்)

6. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடை வெளி.

7. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்க ள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வா ல்டு 1939.

8. இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்கு த் தொடுப்பதற்குமுன் சுட்டுக் கொல்லப்பட் டார்கள்.

9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொ ன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொ ன்றுவிட்டு தியேட்டர்நோக்கி ஓடினான்.

10.லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.

:: =>: என். கணேசன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: