அன்புடன் அந்தரங்கம்-31-8-14 தங்கையை காதலித்து, சித்தப்பனிட ம் பொண்ணுக் கேட்கப் போவா யா?
அன்புள்ள அம்மாவிற்கு,
என் வயது 18. நான் நகரத்தில் பிறந்து வளர்ந்தவன்; அன்பான குடு ம்பம். சில மாதங்களுக்கு முன், என் சொந்த ஊரில் நடந்த கும்பா பிஷேகத்திற்கு சென்றி ருந்தேன்; அங்கு ஒரு பெண்ணை பார்த்தேன். மிகவும் பிடித்திருந்த து; காதலில் விழுந்தேன். மீண்டும் நகரத்துக்கு திரும்பினேன்; என் காதல் மறையவில்லை. இரண்டு மாதம் கடந்த பின், அவளைப் பார்க்க
மீண்டும் ஊருக்கு சென்றேன். அப்போது தான் தெரிந்தது, அவள் உறவு முறையில் எனக்கு சித்தப்பா மகள் என்று! இது தெரிந்தும் என்னால் அவளை மறக்க முடியவில்லை. அவள் ஞாபகம் என்னை கலங்கடிக்கிறது; காதல் திருமணத்திற்கு என்தந்தை மறுப்பு தெரி விக்க மாட்டார். ஆனால், இந்த உறவுமுறை சிக்கலால் தயங்குகி றேன்.
என் பிரச்னை:
* அவளை எப்படியாவது காதலிக்க வைத்து விட்டாலும், கல்யாண ம் என்பது சாத்தியமா?
* என்னென்ன பிரச்னை வரலாம்?
* என் தந்தை மற்றும் அவளது தந்தைக்கும் மான இழுக்காகுமா?
உங்களது தீர்ப்பையே, என் வாழ்க்கையின் தலையெழுத்தாக எண்ணுகிறேன்.
— உங்களது பதிலை ஆர்வமுடன் எதிர்பார்க்கும் உங்கள் மகன்.
அன்புள்ள மகனுக்கு,
உன் சுருக்கமான கடிதம் கிடைத்தது. 18 வயதான நீ, படித்துக் கொ ண்டிருக்கிறாயா இல்லை படிப்பை நிறுத்தி விட்டாயா என, உன் கடி தத்தில் குறிப்பிடவில்லை. எது எப்படி என்றாலும், இந்த வயது உட ல் ரீதியாய் காதலிக்க சரியான வயது தான் என்றாலும், தனிப் பட்ட வாழ்க்கையை தீர்மானிக்கக் கூடிய வயது அல்ல!
மகனே… ௧௮ வயது என்பது ஆண், பெண் பிள்ளைகள் எல்லாருமே, தங்களை கதாநாயகன், கதாநாயகிகளாக கற்பனை செய்து கொள் ளும் வயது. இந்த வயதில், அழகான இளம் பெண்ணைக் கண்டால், சைக்கிள் ஹேண்டில் பாரை பிடிக்காமல், கையை மேலே தூக்கி, சர்க்கஸ்காரன் மாதிரி போகத் தூண்டும்; நண்பனிடம் இரவல் பைக் வாங்கி, ‘சைட்’ அடிக்கும் பெண் முன் வித்தை காட்டத் தோன்றும். நம் அண்ணன் மாதிரி இருக்கானே என்றோ தன் கூடப் படித்த பை யன் மாதிரி இருக்கானே என்று நினைத்தோ யாராவது ஒரு பெண் தப்பி தவறி இரண்டு முறை திரும்பிப் பார்த்து விட்டால், ‘அவள் ஏன் என்னை உத்துப் பாத்தா மச்சி… அதுவும் ரெண்டு தடவ பார்த்துட்டா மச்சான்… அவ என்ன சைட் அடிக்கிறாடா…’ என நண்பர்களிடம் ,’கெத்’ செய்யும்.
ரயில், பஸ் நிலையங்களில் ஏதாவது ஒரு இளம் கன்னி, லேசாக இடித்து விட்டாலோ, பஸ் ஸ்டாண்டில், ‘அந்த ௧பி பஸ் போயிரு ச் சா…’ என எதேச்சையாக கேட்டு விட்டாலோ மனசுக்குள் பட்டாம் பூச்சி படபடத்து, ‘இத்தனை ஆம்பளங்க நிற்கையில என்கிட்ட மட்டும் எப்படிடா அவளுக்கு கேட்கத் தோணுச்சு…’ என்று பெரிய பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்யத் தோன்றும். இது எல்லாமே நம்ம உடம்புக்குள் இருந்து நம்மை தூண்டி விடுற பருவத்தோட அழ கான குறும்பு கண்ணா. இதை ரசிக்கணுமே தவிர காதல்ன்னு நினைச்சு, அதுக்குள் ஆழ்ந்து வாழ்க்கைய தொலைச்சிடக் கூடாது. இது மாதிரி நிறைய காதல்கள், இந்த வயதில் வந்து கொண்டுதான் இருக்கும். அதற்கெல்லாம் நீ முக்கியத்துவம் கொடுத்து கொண்டே இருந்தால், நீ எப்பத்தான் வாழ்க்கையில் சாதிக்கிறது சொல்?
அண்ணன் மனைவி தாயிற்கு சமம், தாய்மாமன் தந்தைக்கு இணை; தம்பி மனைவி மகளுக்கு சமம் என்று ஒவ்வொரு உறவுகளையும், மனதில் களங்கமில்லாமல் அணுக வேண்டும் என்பதற்குத்தான் உறவுகளைச் சொல்லி, அதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டி னர் நம்ம முற்பாட்டன், பூட்டிகள். உன் வீட்டிலும் அப்பா, அம்மா, பாட்டி, தாத்தாவிடம் அவர்களது கிராமத்து கதையைக் கேட்டுப் பார். எங்கோ தொட்டு தொக்கி நிற்கும் உறவுகளைக் கூட சித்தப்பா, பெரியம்மா, அக்கா, அண்ணி என உரிமையோட உறவு கொண்டாடு வர். ஆனால், நீ என்ன சொல்கிறாய்… கும்பாபிஷேக விழாவில் ஒரு பெண்ணைப் பார்த்தேன்; அவள் தங்கை முறை; ஆனாலும், எப்படி யாவது காதலிக்க வைத்து விடுவேன் என்று ஜம்பமாக கூறுகிறாய்!
சரி.. தங்கையை காதலித்து, சித்தப்பனிடம் பொண்ணுக் கேட்கப் போவாயா? அவர் வெட்டரிவாளைத் தூக்கினால், தங்கையைக் கூட்டிக் கொண்டு ஊரை விட்டு ஓடுவாயா… உன் உருப்படாத காத லால் உறவுகள் மோதிக் கொள்ளும்; காவல் நிலையத்தில் பஞ்சா யத்து வைப்பர். உன் தந்தையும், அவளது தந்தையும் கூனி குறுகி நிற்பர். இதற்கா நீ ஆசைப்படுகிறாய்?
இப்படி நினைத்துப் பார்… உனக்கு ஒரு தங்கை இருந்து, அவள் உன் பெரியப்பா மகனை காதலித்து வீட்டை விட்டு ஓடி விட்டாள் என வைத்துக் கொள்வோம். நீயும், உன் குடும்பமும் எத்தனை வேதனை ப்படுவீர்கள்? அந்த வேதனையை உன் பெற்றோருக்கும், சித்தப்பாவு க்கும் கொடுக்கப் போகிறாயா மகனே?
குழந்தே! பூக்கள் எல்லாமே அழகானவைதான்; ஆனால், அது ஜாதி ப்பூவா, ஊமத்தம் பூவான்னு தரம் பிரித்து அறிய, நீ முதலில் பூக்க ளைப் பற்றி தெரிந்தவனாய் இருக்க வேண்டும்; அதன்பின் தான் அதை சூட நினைக்க வேண்டும். அதற்கு இது வயது அல்ல மகனே! இன்னும் ஏழு, எட்டு வருடங்கள் பொறுத்திரு; நீ படிக்கும் மாணவன் என்றால், படித்து நல்ல வேலைக்கு போய் சுய காலில் நில்; படிப்பை பாதியிலேயே கோட்டை விட்டவன் என்றால், ஏதாவது சுய தொழில் செய்து, பொருளாதாரத்தில் உன்னை நிலை நிறுத்தி, நீ யார் என்ப தை இந்த சமூகத்திற்கு நிரூபி. அதற்கு பின்பும் காதல் வரும்… பூக் களோட மணமும், குணமும் அறியும் அறிவும் வரும்; அப்போது காதலித்துப் பார்… காதலின் உண்மையான தாத்பர்யத்தை உன்னால் உணர முடியும்.
அந்தக் காதல் புறத்தோற்றத்தில் மயங்கி புலம்பாது; எதிர்காலத்தை இவளுடன் எப்படி அமைக்கலாம்; நம்மை நம்பி வரும் பெண்ணை நம்மால் சந்தோஷமாக வைத்திருக்க முடியுமா என்றெல்லாம் சிந் திக்கும். அப்போது, உன் காதல் மட்டுமல்ல, உன் திருமணமும் வெற் றி அடையும். சமுதாயத்திற்கும் நீ ஒரு நல்ல முன்மாதிரியாக இருப் பாய்.
— என்றும் தாய்மையுடன்,
சகுந்தலாகோபிநாத். தினமலர்
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்