Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதிரவைக்கும் ஆறு வகையான மாரடைப்புகளும் – அவற்றிற்கான சிகிச்சை முறைகளும்!

அதிரவைக்கும் ஆறு வகையான மாரடைப்புகளும்- அவற்றிற்கான சிகிச்சை முறைகளும்-பயனுள்ள பதிவு

மாரடைப்பா… இல்லையா என்ப தை ஐந்தே நிமிடத்தில் கண்டு பிடித்துவிடலாம். இதை உடனடி யாக கவனிக்காவிட்டால் இதயத் தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப்பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என் று அடுத்தடுத்து தொடர்ந்து,

கடைசியில் திடீர் மரணம் சம் பவித்துவிடும். உலகஇதயகுழு , ஐரோப்பிய இதயக் கழகம், அமெரிக்க இதயக் கழகம், அ மெரிக்க ஹார்ட் சங்கம் இந் த நான்கும் சேர்ந்து, உலக ஆய்வு கூட்டமைப்பு அமைத்து, மார டைப்பின் வகைகளை வகுத்து ள்ளன.

கோல்டன் அவர் – Golden Hour

முதல் 2 மணி நேரம் “கோல்டன் அவர்’ என்று அழைக்கப் படுகிறது. கரோனரி ரத்தக்குழாயில் முழு அடைப்புக்கு காரணமான ரத்தக் கட் டியை 2 மணி நேரத்தில் கரைக் கவேண்டும். இல்லையேல் அந்த ரத்த நாளம் ரத்தம் செலுத்தும் இதயத்தசைகள் அழிந்து (நெக் ரோசில்) இதயத்தின் ரத்தத்தைச் செலுத்தும் திறன் இஜச்சன் பிரா க்ஸன் (இ.எப்) குறைந்து, மூச்சு திணறல், படபடப்பு, ரத்த அழுத்தம் குறைதல், பலவித சிக்கலை ஏற் படுத்தி மரணத்தை ஏற்படுத்தும். அதனால், தான் நேரம் விரயமா காமல் 2 மணி நேரத்தில் சிகிச் சையைத் தொடங்கி இதயத்தை காப்பாற்ற வேண்டும். இதை முத ன்மை பலூன் சிகிச்சை என்று கூறுகிறோம்.

ஆறு வகை மாரடைப்பு

மாரடைப்புகள் மொத்தம் ஆறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது;

முதல் வகை மாரடைப்பு

முதல் வகை, மாரடைப்பு ரத்த நாளத்தில் கெட்ட கொழுப்பினால் அடைப்பு ஏற்பட்டு, இறுதி கட்ட த்தில் ரத்தம் உறைந்து முழு அடைப்பு ஏற்படுவ து. இதனால், இ.சி.ஜி.யில் மாற்றம் ஏற்படுகிறது. இதை ஸ்டெமி மாரடைப்பு என்று அழைக்கின்ற னர்; இதை உறுதி செய்ய டிரோப்டி டெஸ்ட், செய்ய வே ண்டும். அருகில் உள்ள மூன்றாம் நிலை மருத்துவ மனையாக இருந்தாலும், 2 மணி நேரத் திற்குள் ஆஞ் சியோகிராம், பிளாஸ்டி ஸ்டென்ட், பைபாஸ் செய்ய வேண்டும். மாரடைப்புக் காரண மான ரத்தக்கட்டியை கரைக்க பல்வேறு ஊசி களை போடுவதுண்டு. கட்டியை கரைத் தவுடன் மீதியுள்ள அடைப்பை பலூன் ஸ்டென்ட் வைத்து குணப்படுத்த வேண் டும்.

இரண்டாவது வகை

இந்த இரண்டாவது வகை மாரடைப்பு க்கு காரணம் வேறு விதமானது; இதயத்தசை களுக்கு பிராண வாயுத்தேவை. அதற்கு ஈடு கொடு த்து சமமாக பிராண வாயுவை கொடுக்க வேண்டிய சம நிலையில் வேறு பட்டால், குறை ஏற்பட்டு முழு அளவு தடை ப்பட்டால் மாரடை ப்பு மரணம் ஏற்படு ம். ரத்தம் தடைபட்டால் ரத்தம் உறைந்து விடு ம். இந்தவகை மாரடைப்பு மரணம், இளம் வயதினருக்கும் வரும்; ஆஞ்சியோகிராம் செ ய்து பார்த்தால், கரோனரி ரத்தக்கு ழாய்கள் அடைப்பு இன்றி இருக்கும். நடுத்தர இளம் பெண்களுக்கு சாதாரணமாக வரும்.

மூன்றாவது வகை

நீண்ட நேரம் ரத்த நாளம் சுருங்கினால், ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பட்டு அதன் மூலம் மாரடைப்பு உண்டாவது தான் இந்த வகை.

நான்காவது வகை

மாரடைப்பு வந்த பின், பலூன் ஸ்டென்ட் சிகிச்சை செய்யும் போது ஸ்டென்டில் ரத்தம் உறைந்து அடை ப்பு ஏற்படும் இது, இன்ஸ்டென்ட் அ டைப்பு எனப்படும். அதனால் வரும் மாரடைப்பு மூலம், விளைவுகளை ஏற்படுத்தும். நல்ல மருந்துகளால், இதை உடனடியாக தடுத்து விடலா ம். கேத்லேப்பில் நல்ல உயிர்காக் கும் வசதிகளும் உள்ளன.

ஐந்தாவது வகை

ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும்போது அதைச் சரிப்படுத்தி, ரத்த ஓட்டத்தைச் சீராக்க உருவாக்கப்ப ட்டதுதான் ஸ்டென்ட். இது உலோ கத்தால்ஆன வலைபோன்ற அமை ப்பைக்கொண்டது.

ர‌த்தக் குழாய் வழியே சிறிய கம்பி போன்ற கருவியைச் செலுத்தி, இ தயத்தில் ஏற்படும் அடைப்பு உள்ளி ட்ட பிரச்னைக ளுக்குத் தீர்வு அளிக்கும் ‘இன்டர்வென்ஷனல் கார்டி யாலஜி’ துறையில், கரையக்கூடி ய (Bioabsorbable Stent) ஸ்டென் ட்களின் வருகை ஒரு புதிய புரட்சி. இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் இந்த ஸ்டென்டைப் பயன்படுத்தி அறுவைசிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது.

சென்னையின் மூத்த இன்டர்வென்ஷனல் இதய நோய் சிகிச்சை நிபுணர் செங்கோட்டுவேலு தெரிவிப்ப தாவது; ‘இதயத் திசுக்களுக்குச் செல்லு ம் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும் போது, மாரடைப்பு வருகிறது. ரத்தக் குழாயில் கொழுப்புப் படிவது, ரத்தம் உறைவது உள்ளிட்ட காரணங்களால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.

இந்த ரத்தக் குழாய்களைச் சரிசெய்யும் வகையில், 1977-ல் பலூன் ஆஞ்ஜியோபிளாஸ்டி முறை வந்த து. இந்த சிகிச்சையின் போது, தொ டையில் உள்ள ரத்த நாளத்தில் சிறி ய துளையிட்டு அதன் வழியே கம்பி போன்ற கருவி ஒன்றை அனுப்பி, அடைப்பு உள்ள இடத்தில்

பலூன் போன்ற அமைப்பு ஒன்றை வீங்கச் செய்து அடைப்பு சரிசெய்யப் பட்டது. 1988-ம் ஆண்டில், இதயத் திசுக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத் தாத உலோகத்தால் ஆன வலை போன்ற அமைப்பை உள்ளே செலுத்தி, குறிப்பிட்ட இடத்தை பலூன் துணையுடன் விரிவாக்கும் தொழில்நுட்பம் அறிமுகம் ஆனது. வலை அமைப்பு விரிவாக்கப்பட்ட தும் பலூன் சிறிதாக்கப்பட்டு வெளி யே எடுக்கப்பட்டுவிடும். இதனால், ரத்தம் செல்வதில் இருந்த தடை சரிசெய்யப்படும். இந்த உலோகத்தி ல் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே வந்தன. இதன் அடுத்தக் கட்டமாக, 2002ம் ஆண்டில், மருந் து தடவப்பட்ட ஸ்டென்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் அந்த இடத்தில் மீண்டும் அடைப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டது தற்போது முதன்முறையாக உலோக ஸ் டென்ட்டுக்கு மாற்றாக, இதயத் திசுவோடு திசுவாகக் கலந்துவி டும் ஸ்கேஃபோல்டு என்கிற புதி ய ஸ்டென்ட் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

பொதுவாக உலோக ஸ்டென்ட் என்பது கூண்டு போன்ற நிரந்தர அமைப்பு. நம்முடைய இதயத்தில் அது எப்போதும் இருக்கும். இந்த ஸ்டென்ட்டைப் பயன்படுத்தும் போது, அந்த இடத்தில் ரத்தம் உறைய வாய்ப்பு உள்ளது. இதனால் ரத்தம் கட்டியாவ தைத் தடுக்க, பல ஆண்டுக ளுக்கு மாத்திரை எடுத்துக் கொள்ளப் பரிந்துரைப்போம். புதிய கரையக் கூடிய இதய ஸ்டென்ட் தற்காலிகமானது. ரத்தக் குழாய் தன்னுடைய இயல்பு நிலைக்குத் திரும்பும் வரையி ல்தான் இது இருக்கும். இதன் பிறகு 12 முதல் 24 மாதங்களில் இந்த ஸ்டென்ட் இதயத் திசுவோடு திசுவா கக் கலந்துவிடும். இதனால், இந்த புதிய ஸ்டென்ட் பயன்படுத்துவதன் மூலம் 6 மாதங்களிலேயே மாத்திரை எடுத்துக்கொள்ளும் அளவைக் குறைத்துவிடலாம்.

ரத்தக் குழாயானது சுருங்கி விரியும் தன்மைகொண்டது. அப்படி சுருங்கி விரியும்போதுதான் அது ஆரோக்கிய மாக இருக்கும். பழைய ஸ்டென்ட் நிரந்தர அமைப்பு என்பதால், ரத்தக் குழாயின் தன்மை பாதிக்க ப்பட்டது. ஆனால், புதிய ஸ்டென்ட் ரத்தக் குழாயின் இயற்கையானத் தன்மையைப் பாதுகாக்கிறது. மே லும், எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன் பரி சோதனைகள் செய்து சிகிச்சை அ ளிக்க முடியும் என்பது இந்த ஸ் டென்ட்டின் மற்றொரு சிறப்பம்ச ம்” என்கிறார் ஆர்வமும் நம்பிக் கையுமாக.

ஸ்டென்ட் சிகிச்சைக்கு பிறகு அந் த ஸ்டென்ட் என்ன வகை எப்படிப்பட்டது போன்ற முக்கிய குறிப்புக ளை நன்கு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி தெரிந்து கொண்டு, கண்ணும் கருத்து மாக பாதுகாத்து வர வேண்டு ம். அதாவது ஸ்டென்ட் வைத் த டாக்டர் அல்லது ஸ்டென் டைப் பற்றி நல்ல தெளிவாக வும் தெரிந்த ஊருடுவல் நிபு ணரிடம் ஆலோசனைப் பெற் று, ஸ்டென்டின் இன்றைய நி லை. அதில், கொழுப்பு படிந் துள்ளது என்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

ஸ்டென்ட் மூடி மாரடைப்பு வராமல் தடுக்க நிபுணரின் கண்காணி ப்பில் பரிசோதனைகள் செய் து காத்துக் கொள்ள வேண் டும். ஸ்டென்ட் சிகிச்சை செ ய்து, இருபது ஆண்டுகள் என் னிடம் மருத்துவம் பார்த்து நலமாக உள்ளவரும் உண்டு . இரண்டு ஆண்டுகளில் ஸ் டென்ட் மூடி மாரடைப்புடன் வந்தவரும் உண்டு. முதலா மவர் நல்ல வாழ்க்கை முறையை கடைபிடிப்பவர்; இரண்டாமவர், தான் தோன் றிய முறையில் வாழ்பவர்; ஸ்டென்ட் முழுவதும் மூடி னால் மாரடைப்பு, மூச்சு இரைப்பு, படபடப்பு, இனம் தெரியாத அசதி, இது வராம ல் தடுக்க பல கட்டங்களில் பரிசோதனைகள் செய்துக் கொள்ள வேண்டும்.

ஆறாவது வகை- பைபாஸ் சர்ஜரி

பைபாஸ் சர்ஜரி என்பது இதய ரத்தக்குழாய் முழுவதும் அடைபடுவ தால் உண்டாகக்கூடிய மாரடைப் பு நோய்க்கு செய்யக்கூடிய இதய ஆபரேஷன். இந்த ஆபரேஷனை திறந்த முறை இதய ஆபரேஷன் மூலம், செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோ கப்படுத்தி இதய துடிப்பை நிறுத்தி யும் ஆபரேஷன் செய்யலாம். இதய த்துடிப்பை நிறுத்தாமலும், செயற் கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகிக்காமலும் ஆபரேஷன் செய்யலாம்.

பைபாஸ்சர்ஜரி செய்வதற்கு காலில் உள்ள அசுத்த ரத்தத்தை இதயத்திற் கு கொண்டு செல்லும் செபனஸ் ரத்தக்குழாய் மற்றும் மார்புக்கூட்டி ன் உட்புறமுள்ள இடது மற்றும் வலது உள்மார்பு ரத்தக்குழாய்கள் ம ற்றும் முன் கையில் உள்ள ரேடியல் ரத்தக்குழாய்கள் போன்றவற்றை உபயோகித்து மேற்கூறிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரத்தக்குழாய்களின் அடைப்பின் தன்மை யைப் பொறுத்து மகாதமனியின் ஆரம்பத்திலும், இதய ரத்தக்குழா ய் அடைப்பின் கீழும் இணைத்து பைபாஸ் சர்ஜரி செய்யப்படுகிறது.

பைபாஸ் சர்ஜரி என்பது ஓபன் ஹார்ட் சர்ஜரியின் மூலமும் செய்யக்கூடிய ஒரு தனிப்பட்ட இதய அறுவைச்சிகிச்சைமு றை. பொதுவாக பொதுமக்களுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரியும், பைபாஸ் சர்ஜரியும் ஒன்று என்ற குழப்பத்திற்கு மேற்கூறிய விளக்கம் பொருத்தமானதாக இருக்கும்.

மாரடைப்புக்கு பின், பைபாஸ் சர்ஜரி செய் தவர்களுக்கு வரும் மாரடைப்பு இங்கு பைபாஸ் செய்த பல கிராப்டுகளில் அடை ப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும். பைபா ஸ் செய்தவர்கள் நமக்கு பைபாஸ் கிராப் டுகள் வைக்கப்பட்டுள்ளது. இது ரத்தநாளம் போன்ற ரத்த ஓட்டமி ல்லை. கிராப்ட் வெறும் இணைப்பு தான். ஆகையால் இதை அதி ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

எத்தனை கிராப்ட்கள் எந்தெந்த இடங்க ளில் உள்ளது போன்றவற்றை வைத்து கண்காணிக்க வேண்டும். இதற்கு தே வையான பலபரிசோதனை கிராம்களை செய்து டி.எட்.டி., எக்கேகாடியோ கிராம் செக் ஆஞ்சியோ கிராம் செய்ய வேண் டும். ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், கொழுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இவர்கள் தனது இதயம் பை பாசால் 100 சதவீதம் நலமாக உள்ளது என்று எண்ணாமல், கிராப்ட்களை கண் காணிக்க வேண்டும்.

என்ன செய்யணும்?

ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், அதிக கெட்டக் கொழுப்புகள் உள் ளவர்களும், ரத்தக்குழாய் அடைப்புள்ள வர்களும் ஸ்டென்ட் சிகிச்சை செய்து ஸ்டென்ட் வைத்துள்ளவர்களும், பைபா ஸ் கிராப்ட் வைத்துள்ளவர்களும் தங்க ளது வாழ்க்கைமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

தனி மனித ஒழுக்கம், மது, மங்கை, பல மனைவிகள், புகை பிடித்தல் இல்லாம ல் இயற்கை உணவு வகையிலும் ஒழுக் க நெறியோடும் உடற்பயிற்சி, யோகாவும், இதய ஊடுருவல் வல்லு னர் ஆலோசனையின்படி இதயத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

‘பளீச்’அறிகுறிகள்

மார்பின்மையப்பகுதியில் வலி ஆரம்பமாகும்; அல்லது, இடதுபக்  கம் வலி ஏற்படும். அந்த வ லி, இடது கையில் பரவலாம்.

வயிற்றின்மேல் பகுதியில்ஒரு வித எரிச்சல் இருக்கும். இதை த்தான் பலரும், காஸ் டிரபிள் என்று நினைத்து , டைஜின் போட்டு ஏமாந்து விடுகின்றன ர்.

திடீரென மூச்சுத்திணறல் ஏற்ப டும்; திணறலும் இருக்கும். புழுக்கம் தெரியும்.

உடலில் வியர்வை பெருக்கெடுக்கும்; அதுவும் குளிர்ந்த வியர்வை யாக இருக்கும்.

தவிர்க்கலாம் நிச்சயம்

என்ன தான் அறிகுறிகள் இருந்தாலும், அதை நோயாளியால் தான் கண்டுபிடிக் க முடியும். சில சமயம் இந்த அறிகுறிகள் இல்லாமல் கூட பிரச்னை வரலாம். அ தை தவிர்க்க முடியும்… அதற்கு…

* சிகரெட் பிடிப்பதை விட வேண்டும்.

*உடல்எடையை அதிகரிக்கவிடக்கூடா து.

* சர்க்கரை , ரத்த அழுத்தம் மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* கொழுப்பு, பால், கிரீம், அசைவ உணவை கைவிட வேண்டும்.

டென்ஷனாவதை தடுத்துக் கொ ள்ளவும்.

டென்ஷன் இல்லாமல் வாழ கற் றுக்கொள்ள வேண்டும்; யோகா , தியானம் செய்தால் எந்த டென்ஷனும் போய்விடும். தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சியும் மிகவும் நல்லது; கலோரி குறைந்து, உடல் ஒபிசிட்டி இல்லாமல் “ஸ்லிம்’மாக இருக்கும்.

பொன்னான நேரம்:

ஒருவருக்கு குருதிக் குழாய் அடைப்பு காரண மாக தலை சுற்றல், நினைவிழப்பு ஆகியவை ஏற்படும் நிலை யில், உறவினர்கள் காலதாமதம் ஏதுமின் றி 3 மணி நேரத்துக்குள் சிகிச்சை வசதிக ள் கொண்ட மருத்துவ மனைக்கு நோயா ளியை அழைத்துச் செல்ல வேண்டும். இவ் வாறு செய்தால் பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப உடனடியாக மருத்துவ சிகிச்சை அல் லது புதிய சிகிச்சை அளித்து நோயாளிக்கு பக்கவாதம் அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

ஸ்டென்ட் சிகிச்சையும் மாரடைப்பும்

யாருக்காவது மாரடைப்பு வந்து விட்டால் நோயாளியை பரிசோதிக்கும் டாக்டர் ஆஞ்சியோ பண்ணிடலாம், ஸ்டென்ட்வை த்து விட்டால் போதும் என்பார். ஸ்டென்ட்சிகிச்சை உண்மையில் வரப்பிரசாதம் என்று தான் கூற வேண்டும். மூளைக்கு செல்லு ம் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்படுவதை தடுக் க ஸ்டென்ட் சிகிச்சை கைகொ டுக்கிறது என்று அமெ ரிக்க ஐ ரோப்பிய நாடுகளில் உறுதி செய்துள்ளனர்.

இந்தியாவில் பெரும்பாலும் இதயரத்த நாளங்களில் அடைப்பை நீக்க ஸ்டென்ட் டாக்டர்கள் பயன்படுத்துகி ன்றனர். அதில் நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. அதன் பின் தேவைப்ப ட்டால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்கி ன்றனர். பெரும்பாலானோருக்கு ஸ்டேன்ட் பொருத்திய பின் மருந்து மாத்திரையில் சீராக்கி விட முடிகிறது.

ஸ்டென்ட் என்றால் என்ன?

ஸ்டென்ட் என்பது மிகச்சிறிய வலைகுழா ய், உடலில் எந்த பாகத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டாலும், ரத்த ஓட்டத்தை சீராக்க இந்த வரை டியூப் ரத்த குழாயில் செருகப்படுகிறது. இதற்காக தான் ஆஞ்சியோ பிளா ஸ்டி என்ற சிகிச்சை மேற் கொள்ளப்படுகிறது.

ஆஞ்சியோவின் முக்கிய கட் டம்தான் ஸ்டென்ட் வைப்ப து. ரத்தக்குழாயின் ரத்தம் ஓட்டம் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு மட்டுமின்றி ரத் தக்குழாய் பலவீனமாக இரு ந்து அது வெடிப்பதை தடுக்க வும் ஸ்டென்ட் தயாரிக்கப்டுகிறது. சிலவகை ஸ்டென்ட்கள் மருந்து தடவியதாகவும் இருக்கும்.

இதயத்துக்கு பாதுகாப்பு அவசியம். இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்கள் சீராக இருப்பது முக்கியம். அதில் ரத்த ம் செலுத்தப்பட்டு, பின்னரே மற்ற உறு ப்புகளுக்கு செல்கிறது. இதய ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேர்ந்து அடை ப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் போது நெ ஞ்சுவலி, அதைத்தொடர்ந்து மாரடை ப்பு ஏற்படுகிறது.

இதைத்தான் ஆஞ்சினோ என்று டாக்டர்கள் கூறுகின்றனர். இதை த்தடுக்க ஆஞ்சியோ பிளாஸ்டிக் செய்யப்படுகிறது. ஸ்மென்ட் பொ ருத்தப்பட்டவுடன் ரத்த நாளத்தில் அடைப்பு நீக்கப்படுகிறது. வலை டியூப்வழியாக ரத்தம் சீராக பாய் கிறது. ஸ்டென்ட் பொருத்தா விட் டால் மீண்டும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.

பக்கவாதத்தையும் தடுக்கும் வலது இடது கழுத்தில் கரோடைட் என்ற ரத்தக்குழாய்கள் உள்ளன. இதயத்தில் இருந்து செலுத்தப் படும் ரத்தம் இந்த ரத்தநாளங்கள் வழியா கத்தான் மூளைக்கு செல்கின்றன. இதிலு ம் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதைத்தடுக்கவும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை பயன்படுகிறது. ஸ்டென்ட் வைத் தவுடன் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகி பக்கவாதம் தவிர்க்கப்படுகிறது. இதய ரத்த க்குழாய்களில் பலன் தரும் ஸ்டென்ட் பக்க வாதம் ஏற்படுவதை தடுக்கிறது என்ப தை அமெரிக்க,ஐரோப்பிய நிபுணர்கள் சமீபத் தில் உறுதி செய்துள்ளனர்.

மாரடைப்பு என்றால் என்ன?

இதயத்திற்கு ரத்தத்தைக் கொடுக்கும் ரத்தக் குழாய் முழு அடைப்பு ஏற்பட்டால் மார்பு வலி வரும். சிலருக்கு மரணத்தை கொடுக்கும். அஞ்சைனா என்ற மார்பு வலி, ரத்தக்குழாயில் 70 சத வீதம் முதல் 90 சதவீதம் வ ரை அடைப்பு ஏற்பட்டால் வரும். இந்த அடைப்புகளா ல் இதய தசைகள் செயல் குறைந்து, நலிவடைகிறது.

இ.எப். என்ற இதய தசைகள் இயக்கத்தின் செயலை குறிக்கும் குறியீடு. இது 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை இருக்க வேண்டும். இதுதான் முதலில் ஏற்படுகி றது.

அதன்பின் தான் மார்புவலி. கரோ னரி ரத்தக்குழாயின் முழு அடைப் புதான் மாரடைப்புக்குக் காரணம். முன் கூட்டியே, 70 முதல் 90 சதவீ தம் அடைப்புள்ள குழாயில், மீதியு ள்ள குழாயில் ரத்தம் உறைந்து முழு அடைப்பாகிறது.

இந்த நேரத்தில், மார்புக் கூடு முன் கடுமையான வலி, இந்த வலி இடது தோல் பட்டைக்கு பரவுதல், முதுகுக்குப்பின் வலி வருதல், சில சமயங்களில் பல் வலி, பகட்டு வலி, கழு த்து வலி, விழுங்க கஷ்டம், காஸ் அடைப்பு போன்று பல அறிகுறிகள் தென்படலாம்.

மவுனமான மாரடைப்பு:

இந்த அறிகுறிகள் இல்லாமல், பரிசோதனைக்கு வரும் போது மாரடைப்பு கண்டு பிடிக்கப் படுகிறது. இது மவு னமான மாரடைப்பு. இதை இ.சி.ஜி., மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த மாரடைப்பை ஊர்ஜிதம் செய்ய, என்சைம் பரிசோதனை செய்யலாம். தற்போது டிராப்ட் டெஸ்ட் என்ற பரிசோதனை இதய தசைகள் பழுதடைந் ததை காட்டும். அதன்பின், எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை.

மார்புவலி, மாரடைப்பு என்று அறிந்த பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவி ல் சேர்க்க வேண்டும். இல்லை யென்றால், அன்ஸ்டேபில் ஆஞ் ஜினாவால் (UNSTABLE ANGINA) ஒருநாள் கண்காணித் து, அடுத்த நாள் அனுப்பலாம். இல்லை யென்றால், தேவையில் லாமல் ஐ.சி.யு., அட்மிஷன் என் று பல ஆயிரம் செலவழிக்க வே ண்டி வரும். அடைப்புக்கு காரண மான ஆஞ்ஜியோகிராம் செலவு, ஐ.சி.யு., செலவைவிடக் குறைவு தான்.

வேறுபாடு என்ன?

ஆஞ்ஜியோகிராம் பரிசோதனைக் கும், டி.எம்.டி., எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனைகளுக்கும் உள் ள வேறுபாடுகள் டி.எம்.டி., என்ற பயிற்சி இ.சி.ஜி., இதில் ரத்தக்குழா ய் அடைப்பு, இதய தசைகள் செயல் பாடு, தாறுமாறாக இல்லாமல், இத யம் மூச்சிரைப்பு, படபடப்பு, மார்பு வலி கண்டறியலாம். அனுமானமா க அடைப்பை காட்டும்.

எக்கோ கார்டியோகிராம் இதய நான்கு அறைகள், நான்கு வால்வு கள், ரத்த ஓட்டம், இதய தசைகளி ன் செயல்பாடு இவைகளை குறி க்கும். கொலஸ்டிரால் என்ற லிப்ட் புரபைல், இதில் நல்ல கொ ழுப்பு (HDL),கெட்டக் கொழுப்புக ளால் LDL, VLDL, டிரை இளரைடு இவை கண்டு பிடித்து அடைப்பின் அனுமானத்தோடு கூறலாம்.

கரோனரி ஆஞ்ஜியோகிராம் என்ற ஊடுருவல் பரிசோதனை, துல்லி யமாக ரத்தக்குழாய் அடைப்பை காட்டு ம். இதற்கு, மருந்தை உட் செலுத்தி பட மெடுத்து காட்டலாம். இதில் ரத்த ஓட்டத் தை மூன்று ரத்தக்குழாயில் கண்டுகொ ள்ளலாம். இதில் இதய துடிப்பையும், ரத் த ஓட்டமும் டைனமிக் என்ற செயல்பா ட்டில் பார்க்கலாம்.

மற்ற 64, 120, சி.டி., ஆஞ்ஜியோகிராமில் கரோனரி வரைபடம் பார்க்கலாம். ஆனா ல், ரத்த ஓட்டம், சிஸ்டலி, டியஸ்டலி போன்றவற்றுக்கு படத்தைப் பார்க்க முடியாது. இதுதான் சிறந்தது. பை-பாஸ் சர்ஜரி, ஆஞ்சியோ பிளாஸ்டி, ஸ்டென்ட் சிகிச்சைக்கு இதுதான் முக்கிய டெஸ்ட்.

யார் யாருக்கு எப்போது தீவிர சிகிச் சை (ICC)

மாரடைப்பு, இ.சி.ஜி.,யில் மாற்றம், டிராப்ட் டெஸ்ட் பாசிடிவ் ஐ.சி.யு., தேவை .

மூச்சுத்திணறல், இதய பம்பிங்குறை வினால் நுரையீரலில் தண்ணீர் சேர்தல்.

படபடப்பு, மயக்கம், தலைசுற்றல், இ.சி.ஜி.,யில் மாற்றம்.

மயக்கம், மூச்சு பேச்சு இல்லாத நிலை.

ரத்த அழுத்தம் குறைதல், இதய த்துடிப்பு குறைதல்.

மேற்கூறியவைகள் தான் முக் கிய ஐ.சி.யு., அனுமதிக்கு கார ணமாகிறது. இந்நிலையில், ந ல்ல முன்னேற்றம் வந்த பிறகு ஆஞ்ஜியோகிராம் செய்ய வே ண்டும். சில நேரங்களில், மேற் கூறிய நிலையில் முன்னேற்றம் இல்லையென்றால், உயிரை க் காப்பாற்ற ரெஸ்க்யூ (Rescue Angyogram plasty) ஆஞ்சியோ கி ராம் செய்ய வேண்டும். முன்கூட்டியே அடைப்பை அறிய, யார் யாரு க்கு கரோனரி ஆஞ்ஜியோகிராம் செ ய்ய வேண்டும்.

அ) ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியா தி, அதிக கொதிப்பு உள்ளவர்கள், பாரம்பரிய தன்மை, புகைப்பிடிப்ப வர், அதிக எடை உள்ளவர்கள்.

ஆ) நெஞ்சு எரிச்சலுள்ளவர்கள், சிறிது தூரம் நடந்தால் மூச்சிரைப்பு, படபடப்பு ள்ளவர், நாளாக நாளாக இனம் புரியா தளர்ச்சி.

இ) ரிஸ்க் உள்ள பணியாளர்கள் நடுத்தர வயதி னர். வருடத்திற்கு ஒருமுறை குடும்பத் தலை வர் தனது குடும்பத்தினருக்காகவாவது இந்த மாரடைப்பு வர காரணமான அடைப்பை கண் டறிய வேண்டும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: