Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திரு. மோடி அவர்களின் 100 நாட்கள் செயல்பாடுகள் எப்ப‍டி இருக்கு? ஓர்ஆய்வு

திரு. மோடியின் 100 நாட்கள் செயல்பாடுகள்!

மோடியின் தலைமையிலான அரசின் 100 நாள் செயல்பாட்டை ப் பற்றி இப்போது எல்லோரும் பேசுகிறார்கள். ஓர் அரசாங்கத்தி ன் செயல்பாடுகள் பற்றி சரியான தொரு முடிவினை எடுக்க 100 நாட்கள் என்பது நிச்சயம் போதா து. மோடி அரசின் செயல்பாடுகள் பற்றி சொல்லப்படுகிற கருத்துக ள் அனைத்தும் தனிமனிதர்களின் விருப்பு, வெறுப்பு அடிப்படையி லேயே அமைந்திருக்கிறது. விருப்பு, வெறுப்புகளைத் தாண்டி மோ டி அரசின் செயல்பாட்டை கணிப்பதே

இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

மோடி பதவியேற்றபின், கடந்த மூன்று மாத காலத்தில், நாட்டின் ஜிடிபி வளர்ச்சி மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. நிதிப் பற் றாக்குறை கணிசமாகக் குறைந் திருக்கிறது. பணவீக்கமும் தொ டர்ந்து குறைந்து வருகிறது. தொ ழில் துறை முக்கியஸ்தர்கள் பல ரும் இனி வளர்ச்சி நிச்சயம் என்று நம்பிக்கையாக இருக்கிறார்கள். இதுநாள் வரை கிடப்பில் கிடந்த பல மசோதாக்களை சட்டமாக மாற்றும் நடவடிக்கைகள் வேகமாக நடக்கின்றன. அதிகார வர்க்க த்துக்கு முன்னுரிமை தருவதன் விளைவாக, அரசியல்வாதிகளின் முக்கியத்துவம் குறைந்திருக்கிறது. அரசு நிர்வாக மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவ ம் தருகிறார் மோடி.

கடந்த 100 நாட்களில் இப்படி பல நல்ல விஷயங்கள் நடந்திருந்தா லும், நலிந்துகிடக்கும் நாட்டின் பொ ருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத் த இவை மட்டுமே போதாது. நாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்த தெளிவா ன திட்டம் எதையும் இந்த அரசு இதுவரை முன் வைக்கவில்லை. உள்கட்டமைப்புத் துறையில் குறைந்தபட்சமாக செய்துமுடிக்கப்பட வேண்டிய வேலைகள்கூட ஆரம்பித்ததற்கான அறிகுறிக ள் தென்படவில்லை. விவசாய த் துறையில் உற்பத்தி பெருக்கு வதாகட்டும், தொழில் துறையி ல் வேலைவாய்ப்பை அதிகரிப் பதாகட்டும், அடுத்த ஓராண்டு காலத்திலாவது பெரிய மாற்ற ம் ஏற்படுமா என்பது சந்தேக மாகவே உள்ளது. என்றாலும் இனிவரும் நாட்களிலும் இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் இப்படியே இரு ந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. கடந்த ஆட்சியின் மோசமான நிர்வாகத்தி னால் சீர்குலைந்துபோன பொரு ளாதாரத்தை சீர் செய்துவிட்டுதா ன் மீண்டும் வளர்ச்சியைக் கொ ண்டுவர வேண்டிய நிர்பந்தம் இந் த அரசாங்கத்துக்கு இருப்பதை மறுக்க முடியாது.

நாட்டைநிச்சயம் முன்னேற்றுவா ர் என்கிற மக்களின் நம்பிக்கை யை மோடி இன்னும் இழந்துவிடவி ல்லை. ஓர் அரசாங்கம் மக்களின் நம்பிக்கையிலேதான் நடக்கிறது என்று கூறும் மோடி, மக்களின் பொ ருளாதார வளர்ச்சிக்கு போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக் காவிட்டால் நம்பிக்கை அவ நம்பிக் கையாக மாற வெகு காலமாகாது என்பதை உணரும் நேரமிது!

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

  • M.Mani

    ஐயா.
    ஒரு வருடமாவது அவகாசம் வேண்டும். நாட்டை முன்னேற்றுகிறார்களோ இல்லையோ. கொள்ளையடித்து வெளிநாட்டில் வைக்கமாட்டார்கள். சென்ற பா.ஜ.க. ஆட்சியில் முக்கிய தலைவர்கள் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. ஆனால் ராஜிவ் காந்தி, சோனியா காந்தி மீது ஊழல் வெளிநாட்டு வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் பணம் குறித்து எவ்வளவு கூப்பாடுபோட்டாலும் எந்த பதிலும் கூறாமல், அதைப்பற்றி சட்டையே பண்ணாமல் நாட்களை ஓட்டினர்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: