Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

செக்ஸில் உச்ச‍க்கட்ட‍ அனார்கஸ்மியா பிரச்சனைகள், பாலியல் ஆய்வுகள் – குழப்பங்கள் தீர்வுகள் – அலசல்

செக்ஸில் உச்ச‍க்கட்ட‍ (ஆர்கஸம்) பிரச்சனைகள், பாலியல் ஆய்வு கள்-குழப்பங்கள் தீர்வுகள்-அலசல்

உச்சகட்டத்தை விரும்பும் பெண்க ள்;ஆய்வுகள்?

நாம எல்லாரும் தெரிஞ்சிக்க, புரி ஞ்சிக்க, விவாதிக்க விரும்புற ஆனா இப்படியெல்லாம் செய்ய ஏனோ தயங்குற ஒரு விஷயமாத் தான் இருக்கு “செக்ஸ்” சம்பந்தப் பட்ட எல்லாவிதமான

கருத்துகளுமே நம்ம சமுதாயத்துல இது வரைக்கும்! அளவான எல்லா விஷயங்க ளுமே நல்லதுதான்னு நம்ம எல்லாருக்கு மே தெரியும்! அப்படிப்பட்ட ஒரு விஷயம் தான் செக்ஸ்கூட!

ஆனா செக்ஸை சுத்தி நாம மூட நம்பிக்கை கள், தயக்கங்கள், பயங்கள், தவறான புரித ல்கள் இப்படி எத்தனையோ சுவர்கள எழுப் பி, செக்ஸை பத்தின அடிப்படை உண்மை கள், யதார்த்தங்கள் இப்படி எதுவுமே வெ ளியில் தெரியாமலும், விளங்காமலும் போவதற்கான ஒரு சூழ்நி லையை உருவாக்கிட்டோம்! விளைவு, செக்ஸை எப்படி அணுகுவ தென்று தெரியாமல், செக்ஸ் குற்றங்கள், கற்பழிப்புகள், கள்ள உறவுகள் இப்படி பலவகையான சிக்கல்களையும், குழப்பங்களை யும் தொடர்ந்து சேர்த்துக்கிட்டே வர்றோம்.

இதெல்லாம் என்னைக்கு பூதாகர மா வெடிக்கப்போவுதோ தெரியல

செக்ஸ் சம்பந்தப்பட்ட எத்தனையோ குழப்பங்கள்ல ஒன்னுதான் இந்த உச்சக்கட்டம்! உச்சக்கட்டம் அப்படீன்னா என்னன்னு கேட்டா, ஒரு பதில் இல்ல, கிட்டத்த ட்ட ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான பதிலைத்தான் சொல்வாங்க! ஏன்னா, உச்சக் கட்டம் என்பது விவரிக்கமுடியாத, அனுபவித்து மட்டுமே உணரக்கூடிய ஒரு சிக்கலான உணர் வு! ஆனா, விஞ்ஞானமும், உளவியலும் உச்சக் கட்டத்துக்கு வெவ்வேறு விளக்கங்களைக் கொடுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது! அந்த விளக்கங்கள நாம இன்னொரு சந்தர்ப்ப த்துல பார்ப்போம். இப்போ இன்றைய பதிவுச் செய்தியை பார்ப்போம் வாங்க….

உச்சக்கட்டம் அப்படீங்கிறது அடிப்படை யில், பால் உறுப்புகளின் தூண்டுதலில் தொடங்கி, உடலளவிலான பலவகையா ன மாற்றங்களையும், மனதளவிலான சில மாற்றங்களையும் உள்ளடக்கிய ஒரு எழு ச்சி நிலை. இந்த எழுச்சி நிலைக்கு உடலி ன் பல்வேறு பாலுறுப்புகளிலிருந்து மூ ளைக்கு செல்லும் ரசாயன சமிக்ஞைகளு ம், அதற்க்கான மூளையின் எதிர்வினை யாய் உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற் படும் உடலியக்க மாற்றங்களுமே காரண ம்!

ஆர்கஸம்/அனார்கஸ்மியா பிரச்சினைகளும் சில பாலியல் ஆய்வு களும்!

இந்த உச்சக்கட்டத்தை ஆங்கில த்தில் ஆர்கஸம் என்கிறார்கள். உலகில் செக்ஸில் ஈடுபடும் எல் லாருக்குமே, உடலுறவின் போது உச்சக்கட்டத்தை அடைவதுதான் குறிக்கோள். ஆனாலும், உச்சக் கட்டத்தை அடைவது என்பது பல ருக்கு கைவராத ஒரு கலையாக த் தான் இருக்கிறது என்கிறது விஞ்ஞானம்! உச்சக்கட்டத்தை அடைந் தால் சந்தோஷம் இல்லைன்னா என்ன உசுரா போய்விடும் அப்படீ ன்னு நீங்க யோசிக்கலாம். செக்ஸில் ஈடுபடுவோரால் தொடர்ந்து உச்சக்கட்டத்தை அடையமுடியவில்லையென்றால் அது அனார் கஸ்மியா (anorgasmia) எனும் செக்ஸ் குறை பாட்டில்தான் முடியும் என்கிறார்கள் பாலியல் துறை ஆய்வாளர்கள்!

இந்தப் பிரச்சினை அதுபாட்டுக்கு இருந்துட்டுப் போய்டா ஒன்னும் பிரச்சினையில்ல. ஆனா, ஒருத்தரோட வாழ்க் கைத் தரத்தையும், உறவுகளையும் பாதிக்கக்கூடியது இந்தக் குறை பாடு என்கிறார் அமெரிக்காவின், லா ஸ் ஏஞ்ஜலீஸிலுள்ள செடார் சினாய் மருத்துவ மையத்தின் உளவியல் ஆய்வாளர் வாகி வில்லியம் இஷக்!

உச்சக்கட்டத்தை எட்டமுடியாமை என்பது பெண்களிடையே ஒரு பொது வான பிரச்சினையாக இருக்கிறது என்கிறார் இஷக். கடந்த 2001 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 20  முதல் 40 வயதான பெண்களில், சுமார் 24% பெண்களுக்கு மாதக்க ணக்கில் உச்சக்க ட்டத்தை எட்ட முடி யாமை இருப்பது கண்டறியப்பட்டது என்றும், அனார்கஸ்மியா குறைபாட்டினால் அவதிப்படும் இவர்களில் ஒரு சிலரே மருத்துவ ரை நாடுகிறார்கள் என்றும் கூறுகிறார் விஞ் ஞானி இஷக்! காரணம், சமுதாயத்தில் செக் ஸ் செயல்பாடில் திறமையின் மை என்பது ஒரு அவமானமாக கருதப்படுகிறது என்பதே என்கிறா ர்!

உளவியல் விஞ்ஞானி திரு.இஷக் அவர்களி ன் தலைமையிலான சமீபத்திய ஒரு ஆய்வி ல், நான்கில் ஒரு பெண்ணுக்கு ஒரு பகல்கன வாகவேஇருக்கும் உடலுறவின்போது உச்சக் கட்டம் என்னும் குறை பாட்டை தீர்க்க மருத் துவமும், இதுவரையிலான ஆய்வுகளும் போதவில்லை என்று தெரியவந்துள்ளது! பெண்களின் உச்சக்கட்டக் குறைபாடு குறித்து இதுவரை நடத்த ப்பட்ட சுமார் 101 ஆய்வுகளை அலசிய இந்த ஆய்வில், பெண்களின் செக்ஸ் பிரச்சினைகளிலேயே இரண்டாவது தலையாய பிரச்சனையான உச்சக்கட்டத்தை எட்ட முடியாமை என்பதற்க்கான சிகிச்சை கள் மிக மிகக் குறைவாக இருப்பது தெரிய வந்துள் ளது என்கிறார்கள் இஷக் தலைமையிலான  ஆய்வுக்குழுவினர்!

பலவகையான செக்ஸ் தெரபிகளை மேற்கொ ள்ளக்கூடிய திறமை சாலியான் பல பாலியல் மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்றபோதும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் மருந்துகள் என்று பார்க்கையில், ஒரு மருந்து சரியா, தவறா என்றறியும் சோதனை முயற்ச்சிக ளே என்கிறார் இஷக்!

ஆர்கஸம் குறித்த குழப்பங்களும், அனார்கஸ்மியாவுக்கான தீர்வு களும்!

உச்சக்கட்டம் தொடர்பான பிரச் சனை காரணமாக ஒருவர் மருத் துவரை அணுகினாலும், தீர்வுக் கான சிகிச்சை சிக்கலானது. காரணம், உச்சக்கட்டத்தைப் பொருத் தவரை இத்தனை நாட்களில், இத்தனை தரம் உச்சக்கட்டத்தை அ டைவதுதான் இயல்பானது என்று சொல்லும் ஒரு திட்டவட்டமான வரையரை கிடையாது! ஆக, மருத்துவர்கள் நோயாளிகளின் வய து, செக்ஸ் அனுபவம் மற்றும் திருப்தி ஆகியவற்றைக் கொண் டே ஒரு தீர்வை காண முயலவே ண்டும் என்கிறார் இஷக்!

ஆர்கஸம் தொடர்பான குழப்பம் ஒரு பக்கமென்றால், அனார்கஸம் ஏன் ஏற்படுகிறது என்பதற்க்கான அடிப்ப டைக் காரணங்களை கண்டறிவது என் பது இன்னொரு பெரிய பிரச்சினை! அனா ர்கஸம் குறை பாடுள்ளவர்களில் பலருக் கு குறைபாட்டுக்கு காரணம் உளவியல் பூர்வமானது. உதாரணமாக, கடந்தகால பாலியல் துன்புறுத்தல்கள், செக்ஸ் தொ டர்பான குற்ற உணர்வு மற்றும் தோற்றம் குறித்த குற்ற உணர்வு! முறிந்துபோன திருமண உறவுகள் மற்றும் செக்ஸ் குறித்த விவாத மின்மை ஆகியவை வேறு சில கா ரணங்கள்! உறவுகள் குறித்த கௌ ன்சிலிங் மற்றும் சைக்கோ தெரபி ஆகியவை இவர்களுக்கான சிறந்த சிகிச்சைகள்!

வேறு சில பெண்களுக்கு, அனார்க ஸ்மியாவுக்கான காரணங்கள் மருத்துவ ரீதியானது! உதாரணமா க, சிறுநீரகக் கோளாறுகள், ஃபைப்ரோமயால்ஜியா மற்றும் அத்தீ ரோஸ்க்ளீரோசிஸ் என்னும் கொலஸ்டிரால் மூலம் ரத்த நாளங்களில் ஏற்படும் அ டைப்பு ஆகியவை என்கிற து ஒரு ஆய்வு! குழந்தைப் பிறப்புக்குப் பின்னான விலா எலும்புகளின் உறுதியின் மையும் மற்றுமோர் காரண மாம். இம்மாதி ரியானவர்களுக்கு, ஹார்மோன் மாத்திரைகளான டெஸ்டோஸ்டீரோன் மற்றும் ஈஸ்ட்ரஜன் பலன் தரக்கூடுமெ ன்றாலும், டெஸ்டோ ஸ்டீரோ னால் ஆண்தன்மை அதிகரிக் கும் ஆபத்தும், ஈஸ்ட்ரஜனால் கேன்சர் வரும் ஆபத்தும் இரு க்கிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டியவை!!

அனார்கஸ்மியாவுக்கு தீர்வு காண வேண்டும் பல ஆய்வு கள்!

பெண்களின் உச்சக்கட்டம் தொடர்பான குறைபாடு களைக் குணப் படுத்துவதற்க்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பான எஃப்.டி.ஏ வின் தரச் சான்றிதழ் மற்றும் ஒப்புதல்பெற்ற மருந்து கள் இது வரை இல்லை!! இப்பிரச்சினைக் கான தீர்வு என்று கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஃப்லிபான்செரி ன் (flibanserin) என்னும் மருந்து தரமானதி ல்லை என்று எஃப்.டி.ஏ வால் நிராகரிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது!

இஷக் அவர்களின் சமீபத்திய ஆய்வில், ஹார்மோன் தெரபிகள், வயாக்ரா போன்ற மருந்துகள் உச்சக்கட்டம் தொடர்பான குறைபாடு களுக்கு பலனளிக்க க்கூடியவை என்று முந்தைய சில ஆய்வுகள் சொல்லியிருந்தாலும், அந்த ஆய்வுகள் முழு மையானதாக இல்லை என்று கண்டறியப்பட் டது! கடந்த 2003 ஆம் ஆண்டு, தாவரங்களிலி ருந்து எடுக்கப்பட்ட செஸ்ட்ரா (Zestra) என்னும் எண்ணை பெண்களுக்கு உச்சக்கட்டத்தை ஏற்படுத்தியது என்று ஒரு ஆய்வு சொன்னா லும், ஆய்வில் கலந்துகொண்டவர்களின் எண் ணிக்கை வெறும் 20 பெண்கள் என்றும், அதில் 10 பேருக்கு இந்த எண்ணையு ம், மற்றவர்களுக்கு ப்ளாசிபோ என் னும் மருந்தில்லா பொருளுமே கொடுத்து சோதனை செய்யப்பட்ட து என்பது குறிப்பிடத்தக்கது!மிகச் சிறிய இந்த ஆய்வு ஏற்றுக் கொள்ள க்கூடியதாய் இல்லை என்கிறார் இஷக்!

ஆக, உச்சக்கட்டம் தொடர்பான குறைபாடுகளான அனார்கஸ்மியா போன்றவற்றிற்க்கு தீர்வு காண, புதிய மருந்துகளை சோதிக்கும் போது, பெரிய எண்ணிக்கையில் பெண்களை சோதனைக்கு உட்படுத்தும், பெரிய அளவிலான ஆய்வுகள் மிக வும் அவசியம் என்றும், தரமான வாழ்க்கையை வாழக்கூடிய ஒரு மனிதச் சமுதாயத்தை உரு வாக்க, செக்ஸ் குறைபாடுகளை தீர்க்க வேண்டி யது மிகமிக அவசியம் என்கிறார் ஆய்வாளர் இஷக்!

|=> பத்மஹரி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: