Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பொன்னான நேரத்தை திட்டமிடுதலும் நிர்வகித்தலும்! – உருப்படியான யோசனைகள்

பொன்னான நேரத்தை திட்டமிடுதலும் நிர்வகித்தலும்! – உருப்படி யான யோசனைகள்

நம் எல்லாருக்கும் சரிசமமாக ஆண்டவனால் அளந்து கொடுக்க ப்பட்ட ஒரு நாள் ரேஷன் 24 மணி நேரம்.

நேற்று என்பதுசெல்லாத காசோ லை.

நாளை என்பது பிராமிசரி நோட்டு.

இன்று என்பதே கையிலுள்ள ரொக்கப் பணம்.

எனவே, இன்றைய நேரத்தை

எப்படிச் செலவழிக்கின்றோம் என்பதே முக்கியமான கேள்வி.

1. நேரத்தை திட்டமிடுங்கள் (Time Scheduling)

ஒவ்வொரு நாளும் காலை எழுந்த து முதல் உறங்கச் செல்லும் வரை ஒவ்வொரு 30 நிமிடத்தையும் செய ல்வாரியாக, அட்டவணைப் படுத்து ங்கள். உங்கள் செயல்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

அ. பயனுள்ளவை

ஆ. அன்றாடச் செயல்கள்

இ. பயனில்லாதவை

உங்கள் 24மணிநேரத்தில் எத்தனை மணிகள் பயனில்லாதவையாக செ லவழிக்கப் பட்டிருக்கின்றது என்ப தை கண்கூடாக அறியமுடியும். அவ ற்றைக் குறைத்து பயனுள்ள நேரத் தை அதிகப்படுத்து ங்கள். அன்றாடச் செயல்களிலும் தேவையான அளவு நேரத்தை மட் டுமே உபயோகப்படுத்துங்கள். இவ்வாறு பயனுள்ள நேரத்தை அதி கப்படுத்தினால் நீங்கள் ஒரு சிறந்த மனிதனாக மாறி வருகிறீர்கள் என்பது உறுதியாகிற து.

2. நேரத்தை வீணடிக்கும் நிகழ்ச்சி கள் (Time Wasters)

நேரத்தை வீணடிக்கும் செயல்களு க்கு இரண்டு காரணங்கள் :

நீங்கள் மற்றும் மற்றவர்கள்

அ. நீங்கள் காரணமாக இருக்கும் விஷயங்கள்

1. ஒத்திப்போடுதல் (Procrastination)

2. போதுமான விவரங்கள், தெளிவு இல்லாமை

3. மற்றவர்கள் மேல் பழி கூறுதல்

ஆ. மற்றவர்கள் காரணமாக இருக்கு ம் விஷயங்கள்

1. அன்றாட அலுவல்களில் மற்றவர் களுக்காக தேவைக்கதிகமான நேர ம் செலவழித்தல்.

2. விருந்தினர், சுகமின்மை, மின் தட ங்கள், மற்றும் பல.

3. பிறர் செய்யும் தவறுகள்

4. சூழ்நிலை

உகந்த நேரம் (Preferential / Prime Time)

ஒவ்வொருவருக்கும் காலை முதல் இரவு வரை ஏதாவது ஒரு குறிப்பிட்ட நேரம் உற்சாகமும் சுறு சுறுப்பாகவும் இருக்கும். அந்த வேளையில் மூளையும் சிறப்பாகச் செயல்படும். சிலருக்கு அதி காலை யாக இருக்கலாம். சிலருக்குப் பின்னிரவாக இருக்கலாம். உங்க ளுக்கு உகந்த நேரத்தில் கடினமான, முக்கியமான விஷயங்களை ச் செய்தால் அது சிறப்புப் பெறும்.

காலந்தவறாமை (Punctuality)

கால தாமதம் நமது நேரத்தை மட் டுமின்றி, மற்றவர்களுடைய நேர த்தையும் வீணடிக்கிறது. சிறிது முன்கூட்டியே திட்டமிட்டுத் தயார் நிலையில் இருந்தால். காலதாம தம் ஏற்படாது. மேற்கத்திய நாடுக ளில் காலதாமதம் ஒரு மன்னிக்க முடியாத குற்றமாக, கேவலமாகக் கருதப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் காலந் தவறாமையின் மகத் துவம் இன்னும் பலருக்குப் புரியவில்லை என்பது தான் வேதனை. காலந் தவறாமை ஒரு தலைவ ருக்குள்ள தகுதிகளில் முக்கிய மானது.

நேரத்தை நிர்வகித்தல் (அன்றாட வேலைகள் தவிர)

உங்கள் வேலைகளை 4 வகையாகப்பிரியுங்கள்.

1. செய்தே ஆக வேண்டிய வேலை (Got to do)

இன்றேசெய்ய வேண்டிய முக்கி வேலைகள் – அவசரம்

2 செய் வேண்டிய வேலை (Need to do)

அடுத்த சிலநாட்களில் முடிக்கவேண்டிய வேலைகள் – முக்கியம் ஆனால் அவசர மில்லை.

3. செய்ய விரும்பும் வேலை (Like to do)

உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியவேலை கள் – முக்கியமும் இல்லை – அவசரமும் இல்லை.

4. செய்யக்கூடாத வேலைகள் (Not to do)

வேண்டாத குப்பைகளை, பேப்பர்களை, சேகரித்தல், தேவையற்ற நீண்ட நெடிய உரையாடல்கள், வாக்குவாதங்கள், சிந்தனைகள்.

நேரத்தை பயன்படுத்த சில குறிப்புகள்

1. ஆங்கில அகராதியில் ஓரிரு வார்த்தை களை யாவது சொந்தமா க்கிக் கொள்ள வேண்டும்.

2. 15 அல்லது 30 நிமிடம் மனதிற்குப் பிடித்த நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும்.

3. மறுநாளைக்கு தேவையானவற்றை தயார் படுத்த வேண்டும்.

4. தினமும் நாட்குறிப்பில் மணிவாரி யாக உங்கள் செயல்களைப் பதிவு செய் யுங்கள்.

5. இன்றைய வேலையை இன்றே செய்யுங்கள். நாளைய வேலை யையும் இன்றே செய்யுங்கள். ஆனால், ஒருபோதும் இன்றைய வேலையை நாளை செய்யாதீர்கள்.

6. கடினமாக உழைக்க வேண்டும் என்ப தில்லை; திட்டமிட்டு, அழகாக, கவனமா க, உரிய நேரத்தில் உரிய வேலையை உளமாரச் செய்தால் போதும்

வெற்றி உங்கள் வீடுதேடி வந்து வாழ்த்து ம், நேரத்தை திட்ட மிடுங்கள்! – பயன் படுத்துங்கள்! – கடைப்பிடியுங்கள்!

||==> முஹம்ம‍து அலி

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: