Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரே கணவனுடன் வாழ்பவள் கற்புக்கரசியா? ஐந்து கணவன்களுடன் வாழும் திரௌபதி கற்புக்கரசியா?

ஒரே கணவனுடன் வாழ்பவள் கற்புக்கரசியா? பாண்டவர்கள் ஐவரையும் மணந்து அவர்களுடன் வாழும் திரௌபதி கற்புக்கரசியா? அரியதோர் ஆன்மீக தகவல்

ஒரே கணவனுடன் வாழ்வதே கற்பு என்னும் பட்சத்தில் ஐந்து கணவருடன் வாழ்ந்த திரௌபதி ஏன் கற்புக்கரசியாக போற்றப்படுகிறாள் என்னும் கேள்வி இயற்கையான தாகும். ஆனால் மகாபாரதத்தில் மட்டும் திரௌபதி, ஐவரை மணந்துள்ளாரே அது ஏன் தெரியுமா?

திரௌபதி தனது முந்தைய பிறவியில் ஒரு ரிஷியின்

மகளாக பிறந்து திருமண யோகம் இல்லாமல் இருந்தாள். அதனால் சக்தி வாய்ந்த கணவனை வேண்டி தவமிருக்கத் தொட ங்கினாள் திரௌபதி. அந்த தவத்தினால் ஈர்க்கப் பட்ட சிவபெருமான், அவள் மனம் விரும்பிய வரத்தை அளிக்க, அவள் முன்தோன்றினார். அனைத்து பண்புகள் நிறைந்தவர் தனக்கு கணவ னாக வர வேண்டும் என கோரி அந்த வரத்தை தொடர்ச்சியாக ஐந்து முறை கேட்டதனால்தான் தன் அடுத்த ஜென்மமான இந்த ஜென்மத்தில் திரௌபதி ஐவரை மணக்க வேண்டி வந்தது.

மேலும் எமராஜரின் மனைவியான சியாமளா தேவி, வாயுவின் மனைவியான பாரதி, இந்திரனின் மனைவியான சசி, இரு அஸ்வினி குமாரர்களின் மனைவியான உஷா ஆகிய நால்வரும் திரௌபதியில் அம்ச அவதாரமாக வந்துள்ளனர்.

அதனால், எமராஜரின் அம்சமான யுதிஷ்டிரர், வாயுவின் அம்சமான பீமன், இந்திர னின் அம்சமான அர்ஜுனன்,  அஸ்வினி குமாரர்களின் அம்சங்களான நகுலன், சகா தேவன் ஆகிய ஐவரையும் திரௌபதியை திருமணம் செய்து கொண்டனர்.

மொத்த்த்தில் ஐவருடன் வாழ்ந்தாலும் திரௌபதி கற்புக்கரசியாகவே வேதங்களும் சாத்திரங்களும் ஏற்றுக்கொண்டுள்ள‍ன•

த‌கவல் விதை2விருட்சம் ரா.சத்தியமூர்த்தி

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: