Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விநாயகரைப் பற்றிய வெளிவராத சில அரிய தகவல்களும் இந்து மத கதைகளும்

விநாயகரைப் பற்றிய வெளிவராத சில அரிய தகவல்களும் இந்து மத கதைகளும்!

க‌டந்த வெள்ளி அன்று விநாயகர் சதுர்த்தி திருநாள் அந்நாள் தொடங் கி தொடர்ந்து 9 நாள் பூஜை கோலா கலமாக தொடங்கி நடந்து கொண்டி ருக்கிறது.. ஒவ்வொரு தெருக்களும் , கோவில்களும் விநாயகரின் பிறப் பை கொண்டாடி வருகிறது. இந்து புராணத்தில் யானை முகத்தி னைக் கொண்ட

விநாயக கடவுளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு விசேஷ இடமும் அளிக்கப்பட்டுள்ளது.

விநாயகரின் பிறப்பு மற்றும் வீரத்தை குறிக்கும் கதைகள் பலவற்றை நாம் அறிவோம். அவரின் மணமான தகுநிலை பற்றி புராண கதைகளில் விவரிக்கப்பட் டுள்ளது. தென் இந்தியாவில் விநாயகர் ஒரு பிரம்மச்சாரி, அதாவது திருமணமா காத கடவுளாக பார்க்கப்படுகிறார். ஆனா ல் அவரின் மணமான தகுநிலை பற்றியு ம், அவரின் துணைவிகளை பற்றியும் பல நம்பிக்கைகள் இருக்க தான் செய்கிறது. இரட்டை சகோதரிகளான ரித்தி மற்றும் சித்தியை அவர் மணமுடித்துள்ளார் என நம்பப்படுகிறது.

விநாயகரின் துணைவிகள் பற்றிய கதை!!!

விநாயகர் மற்றும் அவரின் மணமான தகுநிலை பற்றிய புராணங்க ளை பார்க்கையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல வித மான நம்பிக்கைகள் நிலவி வருகிறது. புத்தி (அறிவு), சித்தி (ஆன்மீக சக்தி) மற்றும் ரித்தி (வளமை) ஆகியோரை விநாய கர் மணந்துள்ளார் என பல பக்தர்கள் நம்பி வருகின்றனர். இன்னும் சில இடங்களிலோ சரஸ்வதி தேவியின் கணவராக விநாயகர் அறியப்படுகிறார். விநாயகரை பற்றியும், அவரின் மணமான தகுநிலை பற்றியும் இந்த வட்டார வேறுபாடுகள் உள்ளதால் பலவித குழப்பங்கள் நிலவுகிற து.

சிவபுராணத்தில் விநாயகரின் திருமணம் விவரிக்கப்பட்டுள்ளது. விநாயகரும், அவரு டைய தம்பியுமான கந்தனும் பிரஜாபதியின் புத ல்விகளான சித்தி மற்றும் புத்தியை மணக்க போட்டி போட்டுள்ளனர். தன் சாதூரியத்தால் இந்த சண்டையில் ஜெயித்த விநாயகர், அந்த இரட்டை சகோதிரிகளை தனக்கு மணம் முடி த்து வைக்க தன் பெற்றோரான பரமசிவன் பார் வதியிடம் கோரிக்கை விடுத்தார். விநாயகரு க்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் எனவு ம் குறிப்பிடப்பட்டுள்ளது: சித்திக்கு பிறந்த ஷேமா மற்றும் புத்திக்கு பிறந்த லாபா.

அஷ்டசித்தியுடனான விநாயகரின் உறவும் நன்கு அறியப்பட்டதே. யோகா மூலமாக அடையப்படும் 8 ஆன் மீக ஆற்றல்களே இந்த அஷ்டசித்தியாகு ம். விநாயகரை சுற்றியுள்ள எட்டு பெண்க ள் தான் இந்த 8 ஆன்மீக சக்திகளை குறி க்கிறார்கள். சந்தோஷி மாதாவிற்கு தந் தையாகும் விநாயகரை சிலர் குறிப்பிடுகி ன்றனர்.

மேற்கு வங்காளத்தில் வாழை மரத்துடன் விநாயகரை சம்பந்தப்படுத்துகின்றனர். துர்கை பூஜையின் முதல் நாளன்று, சிவப் பு நிற பார்டர் கொண்ட வெள்ளை நிற சேலையை வாழை மரத்தில் சுற்றி, அதன் இலைகளின் மீது குங்குமம் தெளிக்கப்படும். ‘காலா பௌ’ என அ ழைக்கப்படும் இந்த மரத்தை வணங் கிய பிறகு அதனை விநாயகரின் வலது பக்கம் வைப்பார்கள். இந்த காலா பௌவை விநாயகரின் மனை வியாக பல வங்காள மக்கள் கருதுகி ன்றனர்.

ரித்தி மற்றும் சித்தி என இரண்டு பேர் களுடன் விநாயகர் சம்பந்தப்படுத்தப் பட்டிருந்தாலும், அவரை கல்யாணம் ஆகாத பிரம்மச்சாரியாக பல பக்தர்கள் கருதுவதால், அந்த பெண்களுடனான அவரின் உறவு மு றை தெளிவற்று உள்ளது. இந்த ஜோ டிக்கு புராண சான்று எதுவும் இல் லை; ஆனால் சிவபுராணத்தில் புத்தி மற்றும் சித்தி பற்றியும். மத்ஸ்ய புரா ணாவில் ரித்தி மற்றும் புத்தி பற்றி யும் குறிப்பிடப்ப ட்டுள்ளது.

இந்து மதத்தில், விநாயகரை அவரு டைய துணைவியான ரித்தி மற்றும் சித்தியுடன் சேர்ந்து தான் வணங்கு கின்றனர். இது விநாயகர் சதுர்த்தி என்பதால் ரித்தி மற்றும் சித்தி யையும் சேர்த்து வணங்கி அவர்களின் அருளை பெற்றிடுங்கள்.

இன்னும் சில சுவாரஸ்ய தகவல்கள்

முழுமுதற் பரம்பொருளான கணப தி பூலோகத்திற்கு தன் இரு மனை வியரான சித்தி, புத்தியுடனும் குமாரர்களான லாபம், சுபத்துடனு ம் வருகை தந்த அந்நாள் ஆவணி மாதம் பவுர்ணமி நாளை பூலோக மக்கள் சகோதர உறவின் கையில் ரக்ஷா எனப்படும் கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர்.

லாபம், சுபத்திற்கு மனதில் ஏக்கம் சுபா! நமக்கும் ஒரு சகோதரி இ ருந்தால் இவ்வாறு கயிறு கட்டி மகிழ்ந்திருக்கலாமே! தேவலோ கத்தினராகிய நாம் பூலோக பெண்களை சகோதரிகளாக ஏற் றுக் கொள்ள இயலாது. தேவலோ கத்தில் ஒரு சகோதரியை தேட வேண்டும், என்றார் லாபம்

லாபமும், சுபமும் தாங்கள் பூலோகத்தில் மக்கள் அருகில் உள்ளவ ர்களைக்கூட சகோதர, சகோதரிகளாக பாவி ப்பதையும், அதற்காக விழா எடுப்பதையும் குறிப்பிட்ட அவர்கள், தங்களுக்கு ஒரு சகோ தரி வேண்டுமென கேட்டனர்.

நாரதர், குழந்தைகளின் விருப்பத்தை நிறை வேற்றும்படி விநாயக ரை வேண்டிக் கொண் டார்.

விநாயகர் சித்தி, புத்தி மூவரும் இணைந்து ஒரு பெண் குழந்தை யை உருவாக்கிய குழ ந்தையால் தங்கள் புத்திரர்கள் சந்தோஷம டைவார்கள் என்பதால் அவளுக்கு சந்தோஷி எனப்பெயரிட்டனர்.

தங்களுக்கு சகோதரி பிறந்த செய்தியறிந்த சகோதரர்கள்

உமையன்னையின் சக்தியும்,
லட்சுமியின் செல்வச்செழிப்பும்,
சரஸ்வதியின் கல்வி ஞானமும்

அக்குழந்தைக்கு கிடைக்கட்டும் என சகோ தரியை வாழ்த்தி மகிழ்ந் தனர்.

சந்தோஷி மாதா

சந்தோஷியை வணங்கு வோர் பொன்னும், பொ ருளும் பெற்று அறிவாற் றலுடன் திகழ்வார்கள் என ஆசி கூறினர். வெள் ளிக் கிழமையில் அந்தக் குழந்தை பிறந்தது. எனவே சந்தோஷி மாதாவிற்கு வெள்ளிக் கிழ மை களில் சிறப்பு பூஜை நடத்தப்பட வேண்டு மென சகோதரர்கள் முடிவெடுத்தனர். ஆனந்த நகரம் என்ற ஊரில் போலாநாத் என்ற பக்தர் சுனீதி என்ற சந்தோஷி மாதா பக்தையை மண ந்தார். சுனீதியை கணவன் வீட்டார் கொடுமை ப்படுத்தினர். அவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.
யார் என்ன சொன்னாலும் விடாப்பிடியாக சந்தோஷி மாதா விரதத் தை

Santhoshi Madha

மட்டும் அவள்விடாமல் செய்து வந் தாள்.  அவளது பக்திக்கு மெச்சிய சந்தோஷி மாதா குடும்பத்தினரை திருத்தி சுனீதிக்கு அருள் செய்தா ள். குடும்பம் ஒற்றுமையானது. இப் போதும் சந்தோஷி மாதா விரதம் இருக்கும் இடங்களில் அவளது பக்தையான சுனீதியின் கதை சொ ல்லப்படுகிறது. சந்தோஷி மாதா ஒரு ஒற்றுமை தெய்வமாக போற் றப்படுகிறாள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: