ஆயிரம் ஆண்டுகளாக நீர் வற்றாத அதிசய கிணறு!.- அதிசயம், ஆச்சர்யம்
வரலாற்றின் சுவடுகளை நம் கண்முன் எடுத்துக் காட்டும் ஒரு கிணற்றைப் பற்றித்தான் தற்போது பார்க்கப் போகிறோம்.
ஆயிரம் படிகளைக் கொண்ட கிணறு ஒன்று ஹர்ஷத் மாதா என்ற கோவிலில் கட்டப்பட்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தின்
தலை நகரான ஜெய்ப்பூரின் அருகில் உள்ள அபாநெரி என்ற கிராம த்தில்தான் இந்தக் கோயிலும், ஆயிரம் படிகள் கொண்ட இந்த சாந்த் பவோரி கிணறும் அமைந்துள்ளது.
கி.பி. 800க்கும் 900க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது இக் கிணறு. சாந்த் பவோரி என்றழைக்கப்படும் இக் கிணறை நிகும்ப வம்சத்தைச் சேர்ந்த மன்னர் சந்தா என்பவர் கட்டியதாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின் றன.
இந்த கிணறு 13 அடுக்குகளை உடை யது. 20 மீட்டர் ஆழம் கொண்ட இந்தக் கிணற்றின் அனைத்து படிகளும் ஒரே எண்ணிக்கை கொண் டவை. அவற்றின் நீள, அகலங்களும் எந்த இடத்திலும் மாறுபடாத படி கனகச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 3 ஆயிரத்து 400 படிக ள் இந்த பாவோரி கிணற்றில் உள்ள ன. மிக நேர்த்தியாக வடிவமைக்க ப்பட்டுள்ள இக்கிணறு உலகசாத னைகளில் ஒன்றாக விளங்குகிற து.
இதை விட ஆச்சரியம்
தண்ணீருக்கு தகிடுதத்தம் போடும் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தக் கிணற்றில் மட்டும் இதுவரை தண்ணீர் வற்றியதே கிடையாது. பாவோரி கிணறு இந்தியர்களின் கட்டுமான திறமைக்கும், அறிவி யல் தொழில்நுட்பத்திற்கும் எடு த்துக்காட்டாக கடந்த ஆயிரம் ஆண்டுகளாக தலைநிமிர்ந்து நிற்கிறது….!
ஆயிரம் ஆண்டுகளாக நீர் வற்றாத ஆயிரம் படிகள் கொண்ட அதி சய கிணறு!.
அடேங்கப்பா . . .
அடேங்கப்பா . . .