Tuesday, May 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உறைந்து வரும் கடல்கள் – உறையவைக்கும் உண்மைகள்! – கலக்கத்தில் விஞ்ஞானிகள்

உறைந்து வரும் கடல்கள் – உறையவைக்கும் உண்மைகள்! – கலக்கத்தில் விஞ்ஞானிகள்

பூமியின் தென் துருவம் அண் டார்டிகா கண்டத்தில் அமை ந்துள்ளது. அண்டார்டிகா பெரிய நிலப்பகுதி. ஆனால் வட துருவம் கடல் பகுதி யில் அமைந்துள்ளது. அங்கு கட ல் நீர் உறைந்து பனிக்கட்டி யாக இருந்ததால் ஒருசமயம் அமெரிக்கக் கடற்படை வீரர் கள் நின்றபடி போட்டோ எடு த்துக் கொண்டார்கள். வட துருவப் பகுதிக்கு அவர் கள் சென்ற விதமே அலாதியானது. ஸ்கேட் என்னும் அமெரிக்க

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் (சப்மரீன்) 1959ம் ஆண்டில் வட துரு வத்தையொட்டிய கடல் பகுதியி ல் நீரில் மூழ்கியபடி சென்று கொ ண்டிருந்தது. வட துருவ முனையை எட்டியதும் அந்த நீர்மூழ்கிக் கப்பலானது அங்கு கடலை மூடியபடி இருந்த உறை பனிக்கட்டியைப் பொத்துக் கொ ண்டு மேலே வந்தது. கடலை மூடியிருந்த பனிக் கட்டியின் தடிமன் சுமார் 2 அடி அளவுக்கே இருந்ததால் பனிக்கட்டி யைப் பொத்துக்கொண்டு மேலே வருவது பெரிய பிரச்னையாக இருக்க வில்லை. பனிக்கட்டியைப் பொ த்துக்கொண்டு வட துருவத்துக் குச் சென்ற முதல் நீர்மூழ்கிக் கப்பல் அதுவே.

இதிலிருந்து ஒன்று தெரிகிறது. கடல் பனிக்கட்டியால் மூடப்பட் டா லும் அந்தப் பனிக்கட்டிக்கு அடியில் கடலானது கடலாகத் தான் இருக்கும். கடலின் மேற் புறம் பனிக்கட்டியால் மூடப்படும்போது அங்கு மேலிருந்து அடிமட் டம் வரை கடல் நீர் உறைந்து போய் விடுவதில்லை. இது இயற்கை யில் அதிசயங்களில் ஒன்று. துருவப் பகுதியில் குளிர் நிலைமை பூஜ்ய டிகிரிக்கும் மிகக் குறைவாக இருக்கலா ம். ஆனால் கடல் நீரை மூடி நிற்கும் பனிக்கட்டியானது வெளியே நிலவும் குளிர் அடி யே இருக்கும் நீரைப் பாதிக் காதபடி தடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குளிர்கா லம் கடுமையாக இருந்தால் அமெரிக்காவின் வடஎல்லையில் உள் ள பெரிய ஏரிகளும் உறைந்து போவதுண்டு. இங்கிலாந்தில் லண்ட ன் நகரில் தேம்ஸ் நதி உறை ந்து போனதுண்டு.ஆர்ட்டிக் பகுதியில் கடல் நீர் உறைந் தாலும் உறைந்த பனிக்கட் டிக்கு அடியில் கடல்வாழ் விலங்குகள் பாதிக்கப்படுவ தில்லை.

அதேபோல ஆர்ட்டிக் பகுதி யில் வாழும் பிரபல துருவக் கரடிகளும் இடம்பெயர்ந்து விடுவதில்லை.துருவக் கரடிகளுக்கு ஒரு வகை சீல்தான் பிரதான உணவு. சீல்கள் பனிக்கட்டிக்கு அடி யில் உள்ள நீரில் வாழ்ப வை. நீருக்குள் வாழும் மீன்கள் போன்றவை நீரில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக்கொள்ளும். ஆ னால் சீல்கள் அவ்வப் போது நீருக்குள்ளிருந்து வெளியே வந்து காற்றை சுவாசிப்பவை. பெரிய பரப்பளவை பனிக்கட்டி மூடியிருந்தாலும் சீல்கள் தங்களது நகங்க ளால் உள்ளே இருந்தபடி தலைக்கு மேலே உள்ள பனிக்கட்டியில் ஓட்டை போட்டுவிடும். பனிக்கட் டியில் போட்ட ஓட்டைக ள் வழியே அவ்வப்போது தலையை நீட்டி காற்றை இழுத்துக் கொண்டு உ ள்ளே சென்றுவிடும். சீல் கள் போட்ட ஓட்டைகளுக்கு அருகே துருவக் கரடிகள் காத்துக் கொண்டிருக்கும். சீல்கள் தலை காட்டியதும் ஒரே பாய்ச்சலில் சீல்களைப் பிடிக்க முயற்சி செய்யும். சீல்கள் ஒரு கணம் ஏமாந்தால் துருவக் கரடிகள் அவற்றைக் கவ்வி உணவாக் கிக் கொள்ளும்.

துருவப் பகுதி குறித்து கவனி க்க வேண்டிய இன்னொரு விஷயம் அங்குதான் ஐஸ்பெ ர்க் எனப்படும் பனிக்கட்டி மலைகள் தோன்றுகி ன்றன. கிரீன்லாந்து எனப்படும் பெரிய நிலப் பகுதி துருவப் பகுதியி ல்தான் உள்ளது. கிரீன்லாந்தின் 81 சதவிகிதப் பகுதி பனிக்கட்டி யால் மூடப்பட்டது. இந்த வட் டாரத்தில் மேலும் சில தீவுகளும் உள்ளன. இ வையும் பனிக்கட்டியால் மூடப்பட்டவை. குளிர் கா லத்தில் மேலும் மேலும் பனிக்கட்டிகள் சேருகின்றன. அவ்வித நிலையில் கரையோரமாக உள்ள பனிக்கட்டிப் பாளங்கள் பிதுங்கிக் கொண்டு கடலில் வீழ்ந்து மிதக்க ஆரம்பிக்கின்றன. இயல்பாக இவை தெற்கு நோக்கி அதாவது அட்லாண் டிக் கடலை நோக்கிச் செல் ல முற்படு கின்றன. மிதக்கு ம் பனிக்கட்டிகள் வடிவில் பிரமாண்டமானவை. இவற் றை மிதக்கும் பனிமலைகள் என்றே கூற வேண்டும்.

மிகுந்த எடை காரணமாக மிதக்கும் பனி மலைகளின் பெரும்பகுதி கடல் நீரில் மூழ்கியிருக்கும். சிறு பகுதிதான் வெளியே நீட்டிக் கொ ண்டிருக்கும். அதாவது பத்தில் ஒரு பங்குதான் கடல் நீருக்கு மேலே நீட்டிக் கொண்டிருக்கு ம். கப்பல்கள் மீது மிதக்கும் பனி மலைகள் மோத நேர்ந்தா ல் ஒரு பெரிய குன்று வந்து மோதியது போல கப்பல் மூ ழ்க வேண்டியதுதான். உடைய வே உடையாது என்று வருணி க்கப் பட்ட டைட்டானிக் கப்பல் மீது மிதக்கும் பனிமலை மோ தியபோது அந்தக் கப்பலில் இருந்த பயணிகளில் 1500 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் 1912ம் ஆண்டில் நிகழ்ந்தது. அந்தக் காலத்தில் ராடார் என்ற கருவி கிடையாது. ஆகவே எதிரே மிதக்கும் பனிமலை வந்ததை கப்பல் மாலுமிகளால் கண்டுபிடிக் க முடியாமல் போய்விட்ட து. இப்போதெல்லாம் எல் லா கப்பல்களிலும் ராடார் கருவிகள் உள்ளன. கண் ணுக்குத் தெரியாத தூரத்தில் இருந்தாலும் மிதக்கும் பனிமலைகள் இருப்பதை இந்தக் கருவிகள் கண்டுபிடித்துக் கூறிவிடும்.

வட அமெரிக்கக் கண்டத்துக் கும் ஐரோப்பாவுக்கும் இடை யில் அட்லாண்டிக் கடலின் வடபகுதியானது கப்பல் போக் குவரத்து அதிகம் உள்ளதாகு ம். மிதக்கும் பனிமலைகள் எ ங்காவது தென்படுகின்றனவா என்று வானிலிருந்து கண்கா ணித்து தகவல்கூறும் ஏற்பாடு ம் இப்போது உள்ளது. மிதக்கு ம் பனிமலைகள் மேலும் மேலும் தெற்கு நோக்கி வரும் போது சூரிய வெப்பம் காரணமாக உருகிக் கடல் நீரில் கரைந்து விடும். கடல் நீரில் மிதந்து வந்தா லும் மிதக்கும் பனி மலை முழுவதும் உப்பு இல்லாத நல்ல நீராகும்.அண்டார்டிகா சுற்றியுள்ள கடலிலும் இவ் விதம் கடல் நீர் பனிக்கட்டி யால் மூடப்படுகிறது. அங்கு ம் நிறைய பனிமலைகள் தோன்றுகின்றன. அவை வட க்கு நோக்கி வருகின்றன. ஆனால் அவை நடமாடும் கடல் பகுதி களில் கப்பல் போக்குவரத்து அதிகமில்லை.

|=>என்.ராமதுரை

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: