Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கவுன்சிலிங் & கட்ஆஃப் மதிப்பெண் என்றால் என்ன? – மாணவமணிகளுக்கு ஒரு வழிகாட்டல்! – பகுதி – 1

அட்மிஷன்

பிளஸ் டூ தேர்வு முடிந்து அடுத்தக்கட்டத் திற்கு மாணவர்கள் தற் போது தங்களை தயார்படுத்திக்கொண்டிருப்பார்கள்.

அந்த வகையில் பொறியியல் படிப்பில் எந்தப் படிப்பை தேர்வு செய்ய கவுன்சிலி ங்கில் கலந்துகொண்டு மாணவர்கள் வெற்றி பெற்றால்தான் அவர் கள் விரும்பும் பாடப்பிரிவில் அவர்கள் விரும்பு கல்லூரியிலேயே

சேர்ந்து படிக்க முடியும்.

ஆனால் பல மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்களுக்கும் கவுன்சிலிங் என்றால் என்ன? கட் ஆஃப் மதிப்பெண்கள் என்றால் என்ன? அந்த கவுன்சலிங் அறை யில் எப்படி நடந்துகொள்ள வே ண்டும்? ரேண்டம் எண் என்றால் என்ன‍ என்பது போன்ற பல்வேறு சந் தேகங்கள் மாணவர்களுக்கு ஏற்படும். மாணவர்களின் சந்தேகங்க ளை அவர்களின் நிலையில் இருந்தே யோசித்து இந்தக் கட்டு ரையை தொகுத்திருக்கிறோம்.

கவுன்சலிங் எதற்காக நடத்தப் படுகிறது?

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர்வதற்கு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

கட் ஆஃப் மதிப்பெண்கள் என்றால் என்ன?

இக் கேள்வி மாணவர்கள் மட்டு மல்லாது பெற்றோர்களுக்கும் பதற்றம் இருக்கத்தான் செய்கிறது. கணிதம் பாடத்தில் பெற்ற மதிப் பெண்களை 200க்குப் பதிலாக 100க்கு மாற்றிக்கொள்ள வேண்டு ம். அதேபோல இயற்பியலில் பெற் ற 200க்கான மதிப்பெண்ணை 50 க்கு மாற்ற வேண்டும். இதே போல வேதியியல் மதிப்பெ ண்ணையும் 50க்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்று பாடங்களின் கூடுத லை மொத்தம் 200க்கு மாற் றிக்கொள்வதே கட்ஆஃப் மதி ப்பெண்கள் எனப்படுகிறது. தமிழக அரசின் இட ஒதுக்கீட் டு கொள்கைகளு க்கு ஏற்றவாறு, ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணுக்கு ஏற்றபடி இடம் இருக் கின்ற கல்லூரியில், பிடித்த பாடத்தை தேர்வு செய்யும் முறையே கவுன்சிலிங் என்று அழைக்கப்படுகிறது.

கவுன்சலிங் எப்படி நடைபெறும்?

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை பொறுததவரை வெளிப்படையாக நடைபெறும். அது தொடர்பான விவரங்கள் ஒரு மணிநேரத்துக் கு ஒருமுறை வெப்சைட்டில் அப்டேட் செய்யப்படுகின்றன.

கவுன்சலிங் செல்லும் முன் மாணவர்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன?

கவுன்சிலிங் விண்ணப்பப் படிவம் அனுப்பும் முன், மாணவர் தான் எந்தத் துறையில் படிக்க வேண்டு ம் என்பதை முடிவு செய்ய வேண் டும். பெற்றோருடன் சேர்ந்து அவ ர்கள் முடிவு எடுக்க வேண்டும். இன்ஜினியரிங், விவசாயம், கம்ப்யூட்டர் சயின்ஸ், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் எது தனக்கு பொருத்தமானது என்பதை திட்டமிட வேண்டும்.

மாணவருக்கு கலை மற்றும் அறி வில் நல்ல தேர்வு இல்லை என்று கூறிவிட முடியாது. அதேபோல் இன்ஜினியரிங் மட்டும் தான் சரி யான தேர்வு என்றும் கூறிவிட முடியாது. மாணவருக்கு எதில் தகுதி இருக்கிறதோ அதை சரியா க அடையாளம் கண்டு, அத்துறையில் படிக்க வேண்டும். குடும்பத் துக்கும் மாணவருக்கும் ஏற்ற படிப்பு எது என்பதையும் தேர்வு செய்து படி க்க வேண்டும்.

இதற்கு ஏற்றாற்போல்தான் மாணவ ர் மருத்துவம் செல்ல வேண்டு மா, ஐ.டி.ஐ., செல்ல வேண்டுமா, டிப்ள மோ படிக்க வேண்டுமா என் பதை முடிவு செய்ய வேண்டும். இன்ஜினி யரிங் மட்டும்தான் கல்வி என்பது அல்ல. எந்த படிப்புப் படித்தாலும் அதிலிருந்து முன்னேறுவ தற்கான வாய்ப்புகள் உள்ளன. பெற்றோர்க ளைப் பொறுத்தவரை எப்படியாவது கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் கஷ்டப்பட்டு இன்ஜினியர் ஆக்கிவிட வேண்டும் என்று நினைக்கி றார்களே தவிர, நான்கு ஆண்டு கள் படிப்பை தொடர்வதில் சிக் கல் இருக்குமா என்பதைப் பற்றி அவர்கள் யோசிப்பதில்லை.

வங்கிக் கடன் கிடைக்குமா, அப் படிக் கிடைத்தால் எவ்வளவு சத வீதம் கிடைக்கும் என்பதைப் பற்றி அவர்கள் துவக்கத்தில் சிந்திப்பதில்லை. மீதம் எவ்வளவு கட் ட வேண்டியிருக்கும். அதை கட்டி முடித்து விட முடியுமா?

இதையெல்லாம் குடும்பத்தில் முதலில் யோசித்து முடிவு செய் து கொள்ள வேண்டும். இன்ஜி னியரிங் படிப்பை தேர்வு செய்யு ம் முன் இவற்றையெல்லாம் திட் டமிட வேண்டும். பள்ளிப்படிப்பு வரை பொதுவாக பெற்றோர் த ங்களது பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்துவார்கள். அதுவே கல்லூரியில் சேர்ந்த பிறகு அந்தளவுக்கு அக்கறை செலுத்துவதி ல்லை. கல்லூரி, பாடப்பிரிவை தேர்வை செய்த பிறகும் தங்களது பிள்ளைகள்மீது நண்பர்களைப்போன்ற அணு கு முறையுடன் கவனிக்க வேண்டும்.

கவுன்சலிங் வரும்போது சான்றிதழ்க ளை எடுத்து வரவேண்டுமா?

கவுன்சிலிங் நாளில், ஒரிஜினல் சான்றிதழ்க ளை உடன் எடுத்துவர வேண்டும். சான்றிதழ் கள் சரிபார்க்கப்பட்ட பிறகு அவற்றை திரும்ப எடுத்துச் சென்றுவிட வேண்டும்.

தொடரும் . . .!

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: