Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களே! உங்களுக்கு ஏற்படுவது உண்மையான மாதவிடாயா? அல்லது போலி மாதவிடாயா?

பெண்களே! உங்களுக்கு ஏற்படு வது உண்மையான மாதவிடாயா? அல்லது போலி மாதவிடாயா? – அரிய மருத்துவ தகவல்

பெண்களுக்கு மாதவிடாய், ஒரு இயற்கை நிகழ்வு. இதில் வெட்கப் படுவதற்கோ, பேசாமல் மறைப்பத ற்கோ

எதுவும் இல்லை.

ஆரோகியமான, குடும்ப வாழ்வு நடத்த கணவன்; மனைவி, அம்மா; மகன், அப்பா; மகள், தோழர்; தோழியர்,என்று அனைவரும் இது பற்றி வெளிப்படை யாக பேசவேண்டும்.

மாதம் ஒருமுறைவரும் இந்த மாதவிடா ய் பெண்களுக்கு ஆரோக்கியமானதே !

ஆனால், இன்றைக்கு, இதே மாதவிடாய் பலருக்கு பெரும் பிரச்சனையாக உள் ளது. மாதா-மாதம் சரியாக வருவதில் லை. அப்படியே வந்தாலும், சிலருக்கு, ஒரு வாரம் நிற்காமல் வருகிறது. சிலருக்கு ஒரே ஒரு நாள், சில சொட்டுகளுடன் நின்றுவிடுகிறது  

மாதவிடாய் ஏன் பிரச்சனையாகிறது என்று பெண்கள் நேரிடையாக மருத் துவரிடம் பேசுபது நல்லது. இந்த இடு கையில், போலி மாத விடாய் என்றால் என்ன என்று பார்ப்போம்.

இது கர்ப்பப்பையும், அது சார்ந்த பகுதியும், சினை முட்டை (ovum) வெளிப்படுவதை ovulation என்று அழைப்போம். அம்முட்டை fallopian tube வழியாக வரும் அல்லவா?

அதே சமயத்தில், விந்துவுடன் சேர்ந்த கரு, நிலையாக ஒட்டுவதற்கு, கர்ப்பப்பையில், கூடுதல் திசுக்கள் தோன்றும்.

fallopian tube -இல் வரும் முட்டை விந்துவுடன் சேரும். கரு உண் டாகும். அக்கரு மெதுவாக நகர்ந்து கர்ப்பப்பையில் ஒட்டிக்கொள் ளும். இது நாம் அறிந்த ஒன்றே!

சில சமயங்களில், சிலருக்கு, முட்டைதோன்றும். ஆனால், fallopian tube-இல் அது வெளிப்படாது. முட்டை தோன்றிவிட்டதனால், கர்ப்பப்பை, கருவை தாங்க, இயற்கையாகவே கூடுதல் திசுக்கை தயார் படுத்தி விடும்.

ஆனால், முட்டைவரவில் லை. அதாவது ovulation நடைபெறவில்லை. குறி ப்பிட்ட நாள் வரை கரு ஏற்படாததால், கர்ப்பப்பையில்உள்ள கூடுதல் திசுக் கள் உதிர தொட ங்கும். இதுவே ரத்தமா க வெளி வரும்.

முட்டை இல்லாமல் ஏற்படும் இவ்வ கை  உதிரப்போக்கு உண்மையான மாத விடாய் அல்ல. அது வெறும் கர்ப்பப்பை திசுக்களின் வெளிப்பாடு ஆகும்.

அதுதான் போலி மாதவிடாய் .

ந்த போலி மாதவிடாய் வரும் பெண், குழந்த பெற முடியாது.

ஏனென்றால், முட்டைதான் வரவில்லையே!

குழந்தை இல்லாதவர்கள் மருத்துவரிடம் செ ன்றால், மருத்துவர் முதலில், வருவது உண் மையான மாதவிடாயா அல்லது போலி மாத விடாயா என்று கண்டுபிடிப்பார்.

ovulation நடந்தால், அது உண்மையான மாத விடாய்.

ovulation நடக்காமல் ரத்தப் போக்கு வந்தால், அது போலி மாதவிடாய்.

அதனால், ஆண் பெண் அனைவரும் இது பற்றி தெளி வு பெற்றிருக்க வேண்டும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: