Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மோடி நூறு (100) – (ஆட்சியில் இவையும் மாறும் …!)

மோடி நூறு (100)

2014, செப்டம்பர் (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்

நம்பிக்கையுடன் தேர்வு செய்யப்பட் ட‍ பாரதப்பிரதமர் நரேந்திர மோடி யின் 100 நாள் ஆட்சி ஏமாற்ற‍ம் தராத மாற்ற‍ங்களை நோக்கி முன் னேறும் ஆட்சி என்று பரவலாகப் பாராட்ட‍ப்படுகி றது.

ஐம்போ மந்திரி சபைகளையேப் பார்த்து பழகிப் போன நமக்கு… குறைந்த எண்ணிக்கையிலான

மந்திரி சபையை அமைத்து, அதிலும் சிறப் பாக செயல்பட முடியும் என்று மெய்ப்பித் திருக்கிறார் மோடி.

100நாட்களுக்குள் நேப்பாளம், பூடான், பிரேசில், ஜப்பான் நாடுகளுக்கு பிரதமர் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். என்றால் … வெளி யுறவு அமைச்சரான சுஷ்மா சுவ ராஜ் அண்டை நாடுகளான மியான் மர், வங்கதேசம் போன்ற நாடுகளில் நல்லெண் ண‍ப் பயணத்தை முடித்துள்ளார். நேபாள் பூடானுக்கு சென்றதன் வாயிலாக சீனாவு க்கு பயத்தை ஏற்படுத்தி இருக் கிறார். ஜப்பானுடன் மிகப்பெ ரிய ஒப்ப‍ந்த்த்தை ஏற்படுத்தி இருக்கிறது அவரது பயணம்.

தீவிரவாதிகளா? இந்தியாவா? தீர்மானித்துக் கொண்டுவா அதுவரை பேச்சுவார்த்தை இல் லை என்கிற அதிரடி முடிவை எடுத்த‍தன் விளைவு பாகிஸ்தான் ஆட்சி ஆட்ட‍ம் கண்டுள்ள‍து. காஷ்மீ ரத்திற்கும் வட எல்லை மாநிலங்க ளுக்கும் சென்றதன் வாயிலாக மத்தி ய அரசின் மீது அதிருப்தியாளர்களுக் கு இருக்கும் அவநம்பிக்கையை அகற்ற‍ முயன்று வருகிறார் நமது புதிய பிரதமர்

குண்டு துளைக்காத மேடையில்…. பொதுமக்க‍ள் முன்னிலையில்… மனந்திறந்து 72 நிமிடங்கள் அவர் பேசிய பேச்சைக்கேட்டு பாரதம் சிலி ர்த்த‍து. ஏழைகளுக்கு வங்கி கணக் கு தொடங்கப்படும் என்று அறிவித்த 20 நாட்களுக்குள்ளாகவே நாடெங் கும் 2 கோடி ஏழை மக்க‍ளுக்கு எங்கிக் கணக்குகள் தொடங்கப்பட் டிருக்கிறது என்றால் திருவாளர் மோடியை மிஸ்டர் சுறுசுறுப்பு என்று அழைக்கலாம ல்ல‍ வா?

காலை 7.30 மணிக்கே அலுவலகத்திற்கு வந்து இரவு 7 மணிவரை பணியாற்றுவதும், சனிக்கிழமைகளில் கூட பிரதமர் அலுலவக ம் இயங்குவதையும் பார்க்கும்போது அட்டே, நிஜமாகவே வல்ல‍ரசா கிவிடுமோ என்று ஆனந்தப்பட வைக்கிறது.

கருப்புப் பணத்தை கொண்டுவர நடவடிக் கை, மாநில நலன்களுக்கு முன்னுரிமை, நீதிபதிகள் நியமனத்தில் புதிய சட்ட‍முறை, திட்ட‍க் கமிஷன் கலைப்பு, ஈராக்கில் தவித்த இந்திய மக்க‍ள் மீட்பு, 100 நாள் வேலை வாய்ப்பை தூர் வாருதல், சாலைகள் அமைத்தல், விவ சாயத்திற்கு உதவுதல் என்று மாற்றி அமைத்த விதம் திட்ட‍ங்கள் எல்லாவ ற்றிற்கும் கால்கெடு பொ துமக்க‍ளோடு நேரடியாய் இணைய தளத்தில் கருத்து க் கேட்பு… இப்ப‍டி 100 நாட்களில் இந்தியாவின் கதாநாயகனா க காட்சித்தருகிறார் திருவாளர் மோடி.

அந்நிய முதலீடு, விலைவாசி உய ர்வு, ஆங்காங்கே தலைத்தூக்கும் இந்துத்துவா குறுக்கீடு என்ற குறைகள் இருந்தாலும் கூட நரே ந்திர மோடியின் ஆட்சியில் இவை யும் மாறும் என்று நம்புவோம்.

மாறுவோம் மாற்றுவோம் என்கிற மோடியின் உரத்த‍ சிந்தனையால் மாற்ற‍ங்களும் ஏற்ற‍ங்களும் பாரதத்தில் கிடைத்திட காத்திருப்போ ம்.

:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|

இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர் 

உதயம் ராம் (நம் உரத்த‍ சிந்தனை)

தொடர்புக்கு கைபேசி 94440 11105

:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: