பிணங்களுக்கு அலங்காரம் செய்து வழிபடும் விநோத கிராமம் – பீதியில் உறையும் சுற்றுலா பயணிகள்
இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்யாமல் வழிபட்டு வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தீவில் கருகிய பிணங்கள் மம்மி போல் தொங்கப்பட்டு விடுவது அங்கு வரும் சுற்று லா பயணிகளிடையே பீதியை கிளப்பியுள்ளது. இங்கு இறக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் உடலை வெட்டி மூங்கில் கம்பில் கருவாடு போல் தொங்கவிடுவர். அந்த சடலங்களில் இருந்து கொ ழுப்புகளை எடுத்து தங்களது
உறவினர்களின் தோலிலும், முடி யிலும் தடவிக் கொள்கின்றனர்.
மேலும், சதை அழுகாமல் இருக்க உடம்பிற்குள் காற்று போகாமல் தடுக்க காது, கண், வாய், மூக்கு என அனைத்தையு ம் மூடிவிடுகி ன்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் இறந்தவர்களின் சக்தி தங்க ளுக்கு வருவதாக அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் நம்புகின்றன ர். இது கிராம மக்களின் இடையே 200 வருடங்களாக நடந்து வரும் பாரம்பரியமாகும்.
மேலும் இந்த பிணங்களை விழாக்களின் போதும், சிறப்பு நாட்களி லும் எடுத்து வந்து அலங்காரம் செய்து வழிபட்டு வருகின்றனர். இந் த விநோத நிகழ்வு, பப்புவா நியூகினியாவில் உள்ள மோரோப் தீவில் தான் நடந்து கொண்டிருக்கிறது.