குதிக்கால் எலும்புத் துருத்தல் (Heel Spur) ஏற்படுவது ஏன் ?எத னால்? அதற்கு சிகிச்சை உண்டா?
குதிக்கால் எலும்புத் துருத்தல் ஏன் ஏற்படுகிறது என்பது தெளிவாகத் தெரியாது. இது திடீரெனத் தோன்று வதில்லை. படிப்படியாகவே வளர் கிறது. பாதத்தில் உள்ள தசைகளு க்கும் சவ்வுகளுக்கும் வினைப்பளு (Strain) அதிகமாதலால்
அவை நீளவாக்கில் இழுபடுகின்றன. இதனால் அவை எலும்பில் பற்றியிருக்கும் மெல்லிய சவ் வுகளில் நுண்ணிய கிழிவுகளை ஏற்படுகிறது.
இவற்றின் தொடர்ச்சியாகவே அவ்விடங்களில் எலும்பு துருத்தி வளர்கிறது என நம்பப்படுகிற து. கடுமையான ஓடுவது துள்ளுவது போன்ற பயிற்சிகளைச் செய்யும் விளையாட்டு வீரர்களி ல் இதன் காரணமாகவே அதிகளவில் குதி எலு ம்பு துருத்தல் பிரச்சனை காணப்படுகிறது.
குதி எலும்பு துருத்தி (Heel Spur) யாரில் அதிகம் ஏற்படுகிறது.
ஏற்கனவே குறிப்பட்டது போன்ற கடு மையான உடற்பயிற்சிகள் செய்பவர் களுக்கு ஏற்பட வாய்ப்புண்டு. நடையி ன் இயல்பில் பாதிப்பு உள்ளவர்களுக் கும் அவ்வாறே ஏற்பட வாய்ப்புண்டு. நடையின் இயல்பு என்றால் என்ன? பொதுவாக நாம் நடக்கும்போது இர ண்டு பாதங்களிலும் உடற் பாரமானது ஒரே விதமாக விழுமாறு நடக்கிறோம். ஒரு கால் சற்றுக் குட்டை
யாக அல்லது பாதத்தில் வளைவுகள் சீரற்றோ இருந்தால் ஒரு பாதத்தில் அதிக தாக்கம் ஏற்படும். இது எலும்பு துருத்தலுக்கு காரணமாகலாம்.
அதேபோல ஒரு பக்க முழங்காலில், பாதத்தில், அல்லது தொடையில் வலி யிருந்தாலும் நாம் எம்மையறியாது பாரத்தை மற்றக் காலில் அதிகம் பொறு க்க வைப்போம். இதுவும் காரணமாகலாம்.
கடுமையான தரைகளில் ஓடுவது துள்ளல் நடைபோடுவது போன்ற வையும் காரணமாகலாம்.
பொருத்தமற்ற காலணிகள் மற்றொ ரு முக்கிய காரணமாகும். தேய்ந்த காலணிகளும் அவ்வாறு எலும்புத் துருத்தலுக்கு வழிவகுக்கலாம்.
உடல் எடை அதிகமான குண்டு மனி தர்களுக்கும் வாய்ப்பு அதிகமாகும்.
வயது முதிரும்போது குதிக் கால் சவ்வினது நெகிழ்வுத் தன்மை குறைந்து போகிற து. அத்துடன் பாதத்திற்குப் பாதுகாப்பைத் தரும் கொழு ப்பின் அளவு குறைந்து போ வதும் காரணமாகலாம்.
நீரிழிவு நோயுள்ளவர்களின் பாதத்தின் நரம்புகளும் த சைகளும் பவீனமடைவதா லும் ஏற்பட வாய்ப்புண்டு.
சிலரது பாதங்கள் பிறப்பிலேயே தட்டையாக இருப்பதுண்டு. மா றாக வேறு சிலருக்கு பாதத்தின் வளைவு அதீதமாக இருப்துண்டு. இவர்களுக்கும் குதிக்கால் எலும்புத் துருத்தல் ஏற்படக் கூடும்.
சிகிச்சை
குதிக்கால் சவ்வு அழற்சி மற்றும் குதிக் கால் எலும்பு துருத்தல் இரண்டும் வேறு வேறான நோய்களாக இருந்தபோதும் அவை ஏற்படுவதற்கான காரணங்களும் அவற்றின் அறிகுறிகளும் ஒரே விதமானவைதான்
எனவே சிகிச்சையும் ஒரே மாதிரி யானதுதான்.
முக்கியமானது நோய் ஏற்பட்ட பகுதிக்கு சற்று ஓய்வு கொடுப்ப தாகும். குதிக்கால் பகுதியில் உள் ள தசைகளுக்கும் சவ்வுகளுக்கு ம் கடுமையான வேலை கொடுப் பதை சில தினங்களுக்கு தவிர்க் க வேண்டும். இதன் அர்த்தம் படுத்துக் கிடப்பதில்லை. கடுமையான உடற் பயிற்சிகள், அதிக நடை போன்றவற் றைக் குறைக்க வேண்டும்.
வலி அதிகமாக இருந்தால் ஐஸ் பை வைப் பது உதவும்.
அத் தசைநார்களுக்கான சில பயிற்சிகளு ம் உதவும். . .
குதிக்கால்வலி- காலை எழுந்தவுடன் வலி க்கும் பின்பு நடை பயிலச் சற்றுத் தணியும்
வலிநிவாரணி மாத்திரைகளும் அழற்சியை த் தணிப்பதன் மூலம் நோயையும் வலியையு ம் குறைக்கும்.
மிகப்பெரும் பாலனவர்க ளுக்கு மேற்கூறிய சிசிக் சைகள் மூலம் வலி தணிந்து விடும்.
மிகஅரிதாக குதிக்கால் சவ்வினது இறுகத்தை த் தளர்த்துவதற்கு சிறிய அறுவைசிகிச்சை செய்யப்படுவ துண்டு.
ஆரம்பத்தில் நோயாளி கேட்டதுபோல துருத்தி வளரும் எலும்பை வெட்டி எறிவது சிகிச்சையி ன் ஒரு அம்சம் அல்ல.