சுயமதிப்பைப் பெறுவது எப்படி என்பதை பார்ப்போம் சில விசித்திர உண்மைகளு டன் . . .
ஒரு மனிதனின் உடன்பாடில்லாமல் அவ னை யாருமே தாழ்த்திவிட முடியாது. இந்த உலகமே ஒருவனை தாழ்ந்தவன் என்ற முத்திரையைக் குத்தினாலும் தான் தாழ்வானவன் என்ற மன உணர்வு தோன்றாத
வரையிலும் அந்த மனிதன் தாழ்வானவன் அல்ல.
ஆகவே தான் தாழ்ந்தவன் என்ற மன உண ர்வை அவரவரேதான் உண்டாக்கிக் கொ ள்கிறார்கள்.
எல்லா மனிதர்களுக்கும் தோல்விகளும் குறைகளும் அவ்வப்போது வரத்தான் செய்யும். அப்போது ஏன் நிலை குலைய வேண்டும்?
இங்கு சில சரித்திர உண்மைகளைப் பார்ப்போம்.

கால்கள் இரண்டும் செயலிழந்த, ரூஸ்வெல்ட் சக்கர நற்காலியில் நகர்ந்துகொண்டே அமெரி க்க அதிபரானார். உலகம்போற்றும் தலைவரா னார்.
கண், காது இவையிரண்டுமே ஊனமான ஹெல ன்ஹில்லர் பெரிய படிப்பாளியானார். நோபல் பரிசை பெற்றார்.
பத்தாயிரம் முறைதோல்வி அடைந்த எடிசன் மின் விளக்கைக் கண்டுபிடித்தார்.
தன் 47 வயது வரை எல்லாவற்றிலும் தோல்வி யடைந்த லிங்கன் அமெ ரிக்க அதிபரானார்.
ஆகையால் தோல்விகளின் போது சுய மதிப் பை இழக்க வேண்டிய தே இல்லை.
இரண்டாவது தன்னுடைய செயலும் குடும்ப த்திலும், சமூகத்திலும் தனக்குள்ள பொறுப் புகளை தாமே முன்வந்து ஏற்க வேண்டும்.
மூன்றாவது அவரவர் தம்முடைய சுயக்கட் டுப்பாட்டை வளர்க்க வேண்டும்.
நான்காவது மனக்குழப்பமான சூழ்நிலைக ளிலும் நிதானமாகவும், உறுதியாகவும் செயல்பட வேண்டும்.
ஐந்தாவது கடந்த காலங்களில் தவறுகள், குறைகள் ஏமாற்றங்கள் போன்றன ஏற்பட்டிருந்தாலும் மனதிலிருந் து அவைகளை ஒதுக்கி விட்டு நான் தவறானவன் அல்ல. நான் ஏமாளி அல்ல என்ற மன நிலை யை உருவாக்கி நான் உயர்வா னவன் என்றபாசிடிவ் சிந்தனை யை நிலைநிறுத்த வேண்டும்.
இதன்மூலம் சுயமதிப்புபெருகும்.
இங்கு மனதின் ஐந்து அடிப்படை விதிகளை சொல்வது பொருத்த மான இருக்கும் அவை.
எல்லா விளைவுகளுக்கும் காரணங்கள் உண்டு.
மனம் எதற்கு பொறுப்பேற்கிறதோ அதைக் கட்டுப்படுத்த முடியும்.
ஒருமுகப்படுத்திச் செயல்பட்டால் ஆற்றல்கள் மிகும்.
எதை முழுமையாக நம்பினாலு ம் அதை அடைய முடி யும்.
எதை உணரகிறதோ அல்லது முழுமையாக நம்புகிறதோ அதற் கேற்ற சூழ்நிலைகளையும் மனித ர்களையும் ஈர்க்கும்.
இத்தகைய அடிப்படை விதிகைளைக் கொண்ட மனம் எதையும் சாதிக்க வல்லது.
தொழில் உயர்வடைய ஐந்து வழிகள்
1. உங்கள் வேலைக்கு குறித்துள்ள நேரத்திற் கு பத்து நிமிடங்கள் முன்னதாக சென்று, வேலை முடிந்ததும் பத்து நிமிடங்கள் பின்னதாக வேலையைவிட் டு வெளி வருதல்.
2. உங்கள் நிறுவனத்தில் எந்தெந்த வே லைகளை உங்களால் செய்ய முடியுமோ அவைகளை பிறர் சொல்லாமலேயே ஏற் று செய்தல்.
3. ஏதாவது அதிகபடியான வேலையிருந்தால் அவற்றை மனமுவந் தது ஏற்றல்.
4. உங்கள் நிறுவனத்திலுள்ள எல்லா பொருட்களையும் உங்கள் வீட்டுப் பொ ருட்களைப்போல் கவனமுடன் கையா ளுதல்.
5. உங்கள் மேலதிகாரிகளைப் பற்றியு ம், உங்கள் நிறுவனத்தைப் பற்றியும் எல்லா நேரங்களிலும் உயர் வாகப் பேசுதல்.
உங்களுக்கு தாங்க முடியாத கோபம் ஏற்பட்டால் வாயால் சொல்லாதீர்கள். அதையெல் லாம் ஒன்றுவிடாமல் எழுதுங் கள். மணல் பரப்பில் எழுதுங்க ள். அதுவும் அலைகள் வந்து மோதுகின்ற கட லோர மணல் பரப்பில் எழுதுங்கள்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!