Sunday, July 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நில அபகரிப்புச் சட்டம் – 2011 – ஓர் விழிப்புரணர்வுத் தகவல்

நில அபகரிப்புச் சட்டம் – 2011 – ஓர் விழிப்புரணர்வு இடுகை

மண்ணுக்கும் பொன்னுக்கும் தான் உலகில் நிறைய சண்டைகள் நடந்து இருக்கின்றன. அரசுகளுக்கிடையே நடந்த போர்கள் இந்தியா உருவாக்க ப்பட்ட பின்னர் மக்கள் ஒரு புறமும் அரசும் பெரிய நிறுவனங்களும் மறு புறமும் என சண்டை நடந்து கொண் டிருக்கிறது. சில வருடங்களாக

இந்தப் போர் உக்கிரம் அடை ந்து இருக்கிறது.

இப்போரைப் புரிந்து கொள் வதற்கு முன்பு நிலத்தின் முக் கியத் துவத்தை மக்கள் புரிந் துகொள்வது அவசியம். நிலத் தின் மதிப்பு என்பது வெறு ம் பணத்தை மட்டும் வைத்து மதிப்பிடப்படுவது அல்ல. மக்களின் வாழ் வியல், பழக்க வழக்கங்க ள், மொழி, கலாச்சாரம் அனைத்திற்கும் நிலமே அடிப்படையாக இருக்கிற து. இந்தி யாவில் உள்ள ஒவ்வொரு துண்டு நிலத்தி ற்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. குடும்ப ங்களின் வரலாறு இருக்கி றது. எவ்வள வோ ரத்தம் சிந்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலுள்ள நிலங்கள் சமீப காலம் வரை பெரும்பாலும் சிறு விவ சாயிகள் மற்றும் சாதாரண மக் களுக்குத் தான் சொந்தமாக இருந் தன.

சுதந்திரம் அடைந்த பின்னர் முதலாளிகளுக்கு நிலம் தேவைப்பட்ட போதெல்லாம் 1894 இல் இயற்றப்பட்ட ஒரு மோசமான சட்டத்தை பயன்படுத்தி இந்திய அரசு லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியது. இதில் வசித்த மக்களுக்கு ஒழுங்கான நஷ்ட ஈடும் வழங்கப் படவில்லை. இதற்கு நல்ல உதா ரணம் நெய்வேலி நிலக்கரி சுரங் கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள். அப் பகுதியில் வசித்த மக்கள் இன்று நாடோடிகளாக திரிகிறார்கள். பலர் தீவிரவாதிக ள் என முத்திரை குத்தப்பட்டு அர சாலேயே ஒழித்துக் கட்டப்பட்டன ர். அரசு இந்த அளவு மோசமாக நடந்து கொள்வ தற்குக் காரணம் மக்களுக்கு தங்கள் உரிமை குறி த்த விழிப்புணர்வு இல்லாததே.

சமீபத்தில் கட்டப்பட்ட மதுரை உயர்நீதி மன்ற வளாகம் அரசின் இந்த நில அபகரிப்புக்கு மற்று மொரு அருமையான உதாரணம். வெறும் 50 சென்ட் நிலத்தில் அடு க்கு மாடிக் கட்டிட்டத்தில் கட்டி முடித்து இருக்க வேண்டிய உயர் நீதி மன்றத்திற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப்படு த்தப்பட்டன. இது மேலும் ஆயி ரக் கணக்கான ஏக்கர் நிலங்க ளை விவசாயம் செய்ய முடியா த நிலைக்குத் தள்ளியது. இந்த நீதிமன்றத்தின் பின்னர் நீதிபதி கள் குடியிருக்க சொகுசு பங்க ளாக்கள் கட்டப்பட்டன. இவை மட்டும் அல்ல மதுரையில் மா வட்ட ஆட்சியர் , காவல்துறைக் கண்காணிப்பாளர் அனைவரு க்கும் ஒரு ஏக்கருக்கு குறையா த அளவில் சொகுசு பங்களாக்கள் இருக்கின்றன. இவை அத்தனை யும் ஏழை மக்களின் நிலத்தை பிடுங்கி கட்டப்பட்டவை.

சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் சிங்கூரில் டாடா தொழிற்சாலை க்கு எதிராக நடந்த போராட்டமு ம், நாடு முழுவதும் நிலம் குறித்து மக்களிடையே எழுந்து இருக்கும் விழிப்புணர்வும் இப்போது ஏழை களிடம் இருந்து நிலங்களை பிடுங்குவதில் அரசுக்கு சிக்கலை உருவாக்கி இருக்கின்றன. இந்த சிக்கலை சமாளிக்க இந்திய அரசு “வேலை வாய்ப்பு” என்ற மந்திர சொல்லை பயன்படுத்துவது வழக் கம். யார் என்ன சொன்னாலும் சரி, எத்தனை பேர் வாழ்வு இழந்தா லும் சரி ஒரு பத்து பேருக்கு வேலை எனச் சொல்லி விட்டால் எவ் வளவு நிலத்தையும் கையகப்படுத்தலாம் என்பதே இந்திய அரசின் நிலையாக இருக்கிறது.

ஆனால் அரசுக்கு புதிதாக ஒரு சிக்கல் தோன்றி இருக்கிறது. 1894 இல் இயற்றப்பட்ட நில கையகப்ப டுத்துதல் சட்டம் தெளிவில்லாத து. மக்கள் நீதிமன்றங்களுக்கு போகா த வரையில் அந்தச் சட்டத் தை பய ன்படுத்தி அரசால் நிலத்தை கைய கப்படுத்த முடிந்தது. இப் போது மக்கள் பலர் நீதிமன்றங்கள் செல்ல ஆரம்பித்து இருக்கும் நிலையில் அரசுக்கு மக்களின் நிலங்களை கையகப்படுத்த ஒரு வலுவா ன ஆயுதம் தேவைப்படுகிறது. அந்த ஆயுதம் தான் நில கைய கப்படுத்துதல் சட்டம் – 2011 என்ற வடிவில் பாராளுமன்ற த்தில் வைக்கப்பட்டு இருக்கி றது.

ஏழை விவசாயிகளின் நல னை காக்க என உருவாக்கப்படும் இந்த சட்டம் உண்மையில் எந்தச் சிக்கலும் இல்லாமல் ஏழை மக்களிடம் இருந்து நிலங்களை சுலப மாக பிடுங்க வழி செய்கிறது. இனி இந்தச் சட்டம் என்ன சொல்கி றது என்று பார்ப்போம். இந்த சட்டம் பக்கம் பக்கமாக நீண்டாலும் இதன் முக்கியஅம்சங்கள் கீழே உள்ளவை தான்.

இந்தச் சட்டப்படி அரசு அரசுத் திட்ட ங்களுக்காகவும் , தனியார் நிறுவன ங்களுக்காகவும் நிலத்தை மக்களி டம் இருந்து கையகப்படுத்த லாம்.

இந்தச் சட்டம் என்ன காரணங்களு க்காக நிலத்தை கையகப்படுத்த லாம் என ஒரு பெரிய பட்டியல் போட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அடங்காதது எதுவுமே இல்லை. இது போதாது என்று அரசு நினைத்தால் இப்பட்டியலில் எப்போது வேண்டுமானாலு ம் எதையும் சேர்க்கலாம் !!!! என்ற வாசகத்தை அரசு சேர் த்துள்ளது. சுருக்கமாக சொ ல்வதென்றால் உங்கள் நிலத் தை பிடுங்க அரசுக்கு காரண ம் தேவைஇல்லை. இது தான் இந்தச் சட்டத்தின் மூலமாக அரசு அடை ய விரும்பும் அதிகாரம்.

இந்தச் சட்டம் நல்லது எனச் சொல்ல அரசு சொல்லும் காரணம் நில த்தை கையகப்படுத்த எண்பது சதவீத மக்களின் ஒப்புதலை பெ ற வேண்டும் என்பது தான். இது இப்போது அறுபத்தி ஐந்து சதவீ தமாக குறைக்கப்பட்டு இருக்கி றது. ஆனால் இந்தப் பிரிவையும் கூர்ந்து கவனித்தால் அரசின் ஏமாற்றுத்தனம் தெரியும். இந்த அறுபத்தி ஐந்து சதவீதம் பேர் நிலம் வைத்திருப்பவர்கள் இல்லை. இந்த நில கையகப்படுத்தலின் மூலம் பாதிக்கப்படுபவர்கள் சரி என்று சொன்னால் போதும். யார் பாதிக்கப் படுபவர்கள் என்று அரசு விளக்கம் கொடுத்து இருக்கிறது. ஆனால் உண்மை என்ன வென் றால் அரசு எத்தனை நபர்களை வேண்டுமா னாலும் பாதிக்கப்பட்டவர்கள் என செயற்கை யாக தயார் செய்ய முடியும்.

நிலத்துக்கு சொந்தமில்லாத ஒரு நபர் அரசு ஒரு லட்சம் கொடுத்து பாதிக்கப்பட்டவர் என்று சொன்னால் எப்படி மறுக்கப் போகிறார்?. இதன்மூலம் அரசு மக்களுக்கிடையே பிரிவை ஏற்படுத்தி நிலங்க ளுக்கு உண்மையா ன சொந்தக்காரர் யார் என்பதில் குழப்பத்தை ஏற்படுத்த முனைகி றது. இதன் மூலம் யார் விரும்பினாலு ம் சரி விரும்பாவிட்டாலும் சரி அரசா ல் உங்கள் நிலத்தை பிடுங்க முடியும். அதுமட்டுமல்ல. அது பிடுங்கி முடிக்கு ம் போது ஊருக்குள் தீராத பகை உரு வாக்கி இருக்கும்.

நிலம் என்பது மாநிலங்களுக்கு சொந் தம். ஆனால் மாநில அதிகார ங்களை எடுக்கும் மத்திய அரசின் திட்டம் இந்தச் சட்டத்திலும் பிரதி பலிக்கி றது. இந்த சட்டத்தை எப்படி மாநிலங்கள் அமல்படுத்தப்படும் என்ப தை கண்காணிக்க மத்திய அரசு ஒரு குழுவை இந்தச் சட்டத்தின் மூலம் அமைக்கும். இதன் மூலம் நிலங்களை தன்னுடைய கட்டுப் பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிடுகிறது.

நிலம் என்பது மக்களின் சொத்து. நிறுவனங்கள் அதை வாங்க விரு ம்பினாலோ அல்லது அரசு தன்னு டைய திட்டங்களுக்காக வாங்க விரும்பினாலோ முடிந்த அளவு கு றைவாக வாங்க வேண்டும். அதுவும் மக்களின் விருப்பம் இருந்தா ல் மட்டுமே வாங்க வேண்டும். இதுபோன்ற அடக்குமுறைச் சட்டங்கள் மூலமாக ஏற்கன வே தற்கொலை செய்து கொ ண்டிருக்கும் விவசாயிகள் வா ழ்வில் அடிப்பது என்பது இந்தி யாவின் உணவுப் பாதுகாப்புக் கு நிரந்த ஆபத்தை ஏற்படுத்து ம். மக்கள் குறிப்பாக விவசா யிகள் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

=> பிரபு கண்ணன் (சிற(கு)கில் உதிர்த்த இறகு)

Leave a Reply