Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம்-14-9-14: மருமகனும், மனைவியும் படுக்கை அறையில் உல்லாசமாக . . .

அன்புடன் அந்தரங்கம்-14-9-14- மருமகனும், மனைவியும் படுக்கை அறையில் உல்லாசமாக . . .

அன்புள்ள சகோதரி,

என்வயது65: மனைவியின்வயது, 55. திருமணம் நடந்து, 30 ஆண்டு ஆகிறது. எனக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கின்றனர். மகளுக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்கின்றனர்; மகனுக்கு இன் னும் திருமணம் ஆகவில்லை. வரதட்சணை வாங்காமல்,

பெரியவர்களின் தலைமையில் என் திருமணம் நடந்தது.

என் மனைவி சிகப்பாக இருப்பாள்; அந்த நிறத்தால்தான் என் வாழ் க்கை கெட்டு, கடந்த, 15 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம். கார ணம், அவள் பல ஆண்களிடம் செக்ஸ் விஷயத்தில் தவறாக நடந்து கொண்டிருக்கிறாள். நான் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. இதையெல்லாம் சகித்துக் கொண்டு தனியாக வாழ்ந்து கொண்டிரு க்கிறேன். நான், சாதாரண தொழிலாளி.

அவள் மகள் கூட இருக்கிறாள். இப்போது, என் மகள் ஊரில் இல்லா தபோது மருமகனும், மனைவியும் படுக்கை அறையில் உல்லாசமா க இருக்கின்றனர். இதை, மகள் வீட்டின் அருகில் குடியிருப்பவர்கள் கூறினர். நானும் ஒரு நாள், என் மகள், குழந்தைகளை அழைத்துக் கொண்டு இரவு, 12:00 மணிக்கு வீட்டிற்கு சென்றேன். பக்கத்திலிரு ப்பவர்கள் சொன்னது உண்மைதான்; எனக்கு என்ன செய்வது என் றே தெரியவில்லை. உடனே எனக்கு தெரிந்த வீட்டிற்கு சென்று அரு வாளை வாங்கி, இவர்களை கொலை செய்து விடலாம் என்று வந் தேன்; வரும் வழியில் யோசித்து பார்த்தேன். என் மகள் மற்றும் குழ ந்தைகளை நினைத்து, நான் என் இடத்திற்கு திரும்ப வந்துவிட்டே ன்.

என் மனைவியும், மருமகனும் இப்படி தவறாக நடப்பதைப் பார்த்து நான் நிம்மதியில்லாமல், பைத்தியம் பிடித்தவன் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதற்கு நீங்கள் தான் பதில் கூற வேண்டும்.

அன்புள்ள பெரியவருக்கு,

உங்கள் கடிதம் மனநலம் பிழந்த ஒருவரின் கடிதம்போல் இருக்கிற து. உங்களுக்கு நீண்ட நாள் குடிப்பழக்கம், கஞ்சா போன்ற லாகிரி வஸ்துகள் உபயோகிக்கும் பழக்கம் இருக்குமோ என சந்தேகப்படு கிறேன். கருத்து வேற்றுமையால் பிரிந்த மனைவியை, குணக்கொ லை செய்ய முயற்சிக்கிறீர்களோ என அச்சப்படுகிறேன்.

திருமணம் நடந்த முதல் நாளில் இருந்தே மனைவியை, கொடுமை ப்படுத்த ஆரம்பித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஏச்சு பேச்சு, அடி, உதைகளை தாங்கி, 15 ஆண்டுகள் குடும்பம் நடத்தியிருக்கிறா ள். மனைவியின் அழகும், சிவந்த நிறமும் உங்களை பொறாமை க்கு உள்ளாக்கியிருக்கின்றன. அதனால், அவள் மீது வீண் சந்தேகம் கொண்டு, சித்ரவதை செய்திருக்கிறீர்கள். தவறு உங்கள் மீதா, உங் கள் மனைவி மீதா அல்லது இருவரின் மீதுமா என்பதை, உங்கள் குழந்தைகளிடம் தனித்தனியாக விசாரித்தால், அப்பட்டமாக தெரிந் துவிடும். உண்மைகள் என்றாவது ஒருநாள் வெளிப்பட்டே தீரும்.

உங்களுக்கு மனைவி மீது எவ்வளவு கோபம் இருக்கிறதோ அதே அளவுக்கு, மகள் மீதும் கோபம் இருக்கிறது. அவளது திருமண வாழ் வு சீர்குலைய வேண்டும் என்று உங்கள் மனம் அனிச்சையாக விரு ம்புகிறது.

மனைவி – மருமகன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கின்றனர் என்பத னை நிரூபிக்க, செயற்கையான ஆதாரங்களை காட்டுகிறீர்கள். ‘மகள் வீட்டுக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் உறவினர்கள் சொ ன்னார்கள்…’ என்று, நள்ளிரவில் மகள் வீட்டுக்கு சென்றிருக்கிறீர் கள். அப்போதும் நீங்கள் சொல்லும் அவதூறை கண்ணால் பார்க்க வில்லை. மனைவி, மருமகனை கொல்ல புறப்பட்டதாக கூறியிருக் கிறீர்கள். நீங்கள் ஒரு கோழை; உடலாலும், மனதாலும் பலவீனமா னவர். உங்களால், இரு கொலைகள் செய்ய முடியாது; ஏன், இரு கட் டெறும்புகளைக் கூட நசுக்க முடியாது.

உங்களை விட்டு பிரிந்த பின், உங்கள் மனைவி ஒரு ஆண் துணை தேடிக்கொண்டாள் என சொன்னீர்கள் என்றால் யதார்த்தம். ஆனா ல், 55வயது வயோதிகப் பெண்மணி தன் மகன் போன்ற மருமகனுட ன், தவறான உறவு வைத்துள்ளாள் என்பது எளிதில் நம்பமுடியாத விஷயம்.

ஒரு பெண்ணின், 45 வயதிற்குள் அவளது எல்லா தேடல்களும் மடி ந்து விடுகின்றன. 55 வயதுடைய ஒரு பெண் குளிர்சாதனப் பெட்டி யில் ஒரு மாதத்துக்கு மேல் வைக்கப்பட்ட கத்தரிக்காய்போல வற் றி, சுருங்கி கறுத்துப்போய் விடுகிறாள். இதில், அவளுக்கு செக்ஸ் ஆசை எப்படி வரும்… கள்ளத்தொடர்பை எங்கே போய் வைத்துக் கொள்வாள்? அம்மாவையும், கணவனையும் நெருங்க பழகவிட்டு மகள்காரி எப்படி தூரதேசம் போவாள்?

மனைவி வேண்டாம், மகன், மகள் வேண்டாம் என பிரிந்தவர் நீங்க ள், உங்களுக்கு பிடிக்காதோர் இடம் போனால் என்ன… வலம் போ னால் என்ன! அவர்களைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்பட வேண் டும்?

ஒற்றை பனைமரமாய் நிற்கும் நீங்கள், உங்களின் மீதி வாழ்நாளை ஆக்கப்பூர்வமாய் கழிக்க பாருங்கள். நீங்கள், உங்கள் வழியில் போங்கள்; அவர்கள், அவர்கள் வழியில் போகட்டும்.

என்னுடைய யூகங்கள் எல்லாம் தவறு; உங்கள் குற்றச்சாட்டுகள் லட்சம் சதவீதம் உண்மை என சாதித்தீர்கள் என்றால், தவறு செய்த வர்களை இறைவன் தண்டிப்பான் என, பொறுத்து போங்கள்.

— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத், தினமலர்

2 Comments

  • prady

    பெண் என்ற ஒரு காரணத்தினால் அவர்கள் என்ன தவறு செய்தாலும் சமுகம் அவர்களுக்குதான் இசை பாடும்…… பாவம் இந்த ஆண்கள் ……… !!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: