மன அழுத்தம்- விஷத்தைவிட மோசமான நோய். – மருத்துவரின் நீண்ட நெடிய விரிவான அலசல்
1936-ல் டாக்டர்.ஹான்ஸ் செல்யி என்பவர் மன அழுத்தத்தால் ஏற்படு கின்ற மாற்றத்தை அறிவியல் பூர்வமாக நிரூபித்தார்.
அவருடைய பரிசோதனைகளின்படி எலிகளை ஆய்வு கூடத்தில்
வைத்து பல்வேறு மனஅழுத்தங்க ளை உண்டாக்குகின்ற சூழ்நிலைக ளை அவற்றுக்குக் கொடுத்தார். உதாரணத்திற்கு குளிர் மிகுதியான இடத்தில் விடுதல், மோட்டார் ஓடுகி ன்ற பெட்டிக்குள் வைத்தல், அதைக் கொல்லப்போவதாக மிரட்டுகிற சூழ் நிலைகளைக் காட்டுதல் போன்ற பரிசோதனைகளை நிகழ்த்தி, அதன் முடிவில் அந்த எலிகள் இறந்ததும் அவற்றைப் பிரேத பரிசோதனை செய்தார்.
மன அழுத்தம் கொடுக்கப்பட்ட அனைத்து எலி களிலும் பிட்யூட்டரி சுரப்பியில் பாதிப்பு, அட்ரீ னல் சுரப்பி வீக்கம், வயிற்றுப் புண் போன்ற மாற்றங்களைக் கண்டார்.
அதே மாற்றங்களை பார்மால்டிஹைடு என்ற ரசாயனப் பொருளை உடலில் செலுத்தியதால் இறந்துவிட்ட எலிகளிலும் கண்டார்.
பரிசோதனைகளின் இறுதி முடிவு இதுதான். நமது உடலில் விஷப் பொருளை (பார்மால்டிஹைடு) செலுத்தினால் ஏற்படுகின்ற மாற்ற ங்களை மன அழுத்தமும் உண்டாக் குகிறது.
ஆகவே, மனஅழுத்தம் என்பது விஷத்தைவிட மோசமான நோய்.
மனச்சுமைகளை வெல்வது எப்படி?
அதை நீக்கும் வழிகளை எளிதில் அறியலாம்.
*நம்பிக்கைக்குப்பாத்திரமான நல்லவர்களிடம் மனம்விட்டு பேசுத ல்.
* அடுத்தவர் இதே மனச்சுமையுடன் நம்மிடம் வந்தால் என்ன ஆறுதல் சொல்வோமோ அதையே நமக்கு சொல்லிக் கொள்ளுதல்.
* தாங்கமுடியாத சூழ்நிலை என்றால் அவ்விடத்தைவிட்டு அகன்றுவிடுதல்.
* அமைதியான தூக்கத்திற்குப் பிறகு பிரச்சினைகளை ஆராய்ந்தால் தெளிவு கிடைக்கும்.
* நம்முன் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் வரிசைபடுத்தி எழு திவிட்டு, அதில் முக்கியமான ஒன்றுக்கு மட்டும் தீர்வுகாணுத ல், பிரச்சனைகளைப் பிரித்து கையாளுதல் போன்ற வழிகள் தீர்வுக்கு வழிவகுக்கும்.
* இவ்வுலகத்தில் நாம் மட்டும் இப்படி அவதிப்படவில்லை. பல ரும் இப்படி இருக்கிறார்கள்.
* மற்றவர்களுடைய பிரச்சினைகளில் பங்கு கொண்டு தீர்வுக்கு உதவினால், நமது பிரச்சினை சிறியதாகிவிடும்.
* விரக்தியடைவதைவிட பொறுமையுடன் செயல் பட்டால். காலம் எல்லாவற்றையும் நன்றாகக் கையாளும்.
* நமது வலிமையை அறிதல் முக்கியம். நம் எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை ஏற்பதே விவேகம்.
* ஒவ்வொரு பிரச்சினையிலும் ஒரு தீர்வு கிடைக்கும். கணக்குக்கு விடை கிடைப்ப தைப் போல, பூட்டைத் தயாரிக்கும்போதே சாவியை உருவாக்குவது போல.
* சிக்கல்களை துன்பமாக நினைக்காமல் சவால்களாகப் பார்த்தால் வித்தியாசமான உற்சாகமான மனநிலை உருவாகும்.
* வாழ்க்கையே சவால்களின் தொடர்தான். எதிர் கொள்வதில் தான் வெற்றி அமையும்.
*மாற்ற வேண்டியதை மாற்றிக் கொள்ளும் மனநிலை அவசியம்
உடற்பயிற்சி செய்தால் மன உளைச்சல் குறையுமா?
மன உளைச்சலின் போது கார்டிசால் மற்றும் அட்ரீனலின் போன்ற ஹார்மோன்கள் அளவிற் கதிகமாக சுரப்பதால் உடலில் பல்வேறு தீய விளைவுகள் உண்டாகின்ற ன. உடற்பயிற்சி செய்வதால் இ ந்த ஹார்மோன்களால் ஏற்படுகி ன்ற தீய விளைவுகளை உடலின் சக்திகளாக மாற்றிவிட முடியும். அதனால் மனஅழுத்தமும் குறை யும். உடல்வலிமையும்பெருகும்.
மேலும் உடற்பயிற்சியினால்,
* எண்டார்பின் என்ற ஹார்மோன் அதிகமாக சுரந்து உடலையும் மனதையும் சமநிலைப்படுத்துகி றது.
* உடற்பயிற்சியைத் தொடர்ந்து தசைகள் தளர்வு நிலையை அ டைகின்றன. அதனால் மன அழுத்தம் குறையும்.
* அமைதியான தூக்கம் ஏற்படும்.
* உடலும் மனமும் சுறுசுறுப் படையும்.
* நம்பிக்கை வளரும்.
* படிப்பிலும் தொழிலும், மேலும் அதிக கவனம் செலுத்த முடியும்.
* உடல்தோற்றம் பொலிவடையு ம்.
* சுயமதிப்பு பெருகும்.
* ஜீரணத்தன்மை சீரடையும்.
* முதுமைத் தோற்றம் குறையும்.
* மாரடைப்பைத் தடுக்க முடியும்.
* தசைகளின் வலிகள் நீங்கும்.
* எலும்பின் உறுதி அதிகமாகும்.
* நுரையீரல் சக்தி அதிகமாகும்.
* இரத்த ஓட்டம் சீராகும்.
மன உளைச்சலால் மனதில் குழப்பம் உண் டாகும். குழப்பம் உண்டானால் சிந்தனை தடுமாறும். சிந்தனை தடுமாறும் போது தவ றான முடிவுகளே உருவாகும். தவறான முடிவுகளால் தவறாக செயல்பட்டு இறுதி யில் அழிவு ஏற்படும்.
– கீதை
மன அழுத்தத்தின் மூன்று கட்ட விளைவு கள்
மன உளைச்சல் அடையும்போது அளவிற்க திகமான ஹார்மோன்கள் சுரக்கப் பட்டு உடலின் எல்லா இரத்தக் குழாய்களும் சுருக்கமடைகின்றன. அதனால் இதயத் துடிப்பு மற்று ம் இரத்த அழுத்தம் அதிகமாகின்றன. மேலும் உடலின் எல்லா தசைகளும் இறுக்கமடைகின்றன.
இரண்டாவது கட்டத்தில் உடலின் மாற்றங்கள் குறைந்து அந்த சூழ்நி லையைத் தாங்குகின்ற ஆற்றல் பிறக்கின்றன.
மூன்றாவது கட்டத்தில் அதாவது நீடித்த மன அழுத்தத்தால் உடலில் நிலயான பாதிப்புகள் உண்டாகின்றன.
முதுமையில் மனஅழுத்தம் ஏன்?
உடலிலும் சூழலிலும் மாற்றங்கள் உண்டாகின்றன.
மனதில் நினைவாற்றல் குறையும், குறிப்பாக சமீபகால நிகழ்ச்சிக ளை மறந்து விட்டு பழைய நிகழ்ச்சிகளை நன்கு நினைவில் வைத்திருப்பார்கள்.
*தானே சரி என்ற பிடிவாத மனநிலை.
* எளிதில் உணர்ச்சி வசப்படுதல்.
* மனச்சோர்வு.
*உடல் தோற்றம் மற்றும் உடைக ளைப் பற்றி பொருட்படுத்தாமை.
* கவர்ச்சி குறைந்துவிட்ட மன உண ர்வு.
* உடல் வலிமை குறைதல்.
* தனிமையுணர்வு
* நோய் பற்றிய பயம்.
* இறப்பு பயம்.
* முக்கியத்துவம் கிடையாதோ என்ற ஏக்கம்.
* இத்துடன் சமூக சூழலிலும் குடும்ப உறவுகளிலும் மாற்றம்.
* நண்பர்கள் குறைதல்.
* வேலையில்லாததால் செயல்படாதிருத்தல்.
* பொருளாதாரக் குறைவு.
* அந்தஸ்து மாற்றம்.
* மற்றவர்களை அதிகமாக பொருட்ப டுத்தாமை.
போன்றவைகளால் மன அழுத்தம் உண்டாகின்றன.
மன அழுத்தத்தால் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள்
1. அளவிற்கதிகமான அட்ரீனலின் ஹார் மோன்கள் சுரப்பதால் கல்லீரலில் சேமித்து வைக்கப் பட்டுள்ள குளுக்கோஸ் வெளியாகி வீணாகிறது.
2. தோலிலுள்ள இரத்தக் குழாய்களும் சுருங்கி விடுகின்றன. இதனால் தோல் வெளிறி விடுகி ன்றன.
3. கை, கால்களிலுள்ள தசைகளுக்கு அதிக அளவு இரத்தம் சென்று இறுக்கத்தை உண்டாக் கு கின்றன.
4. இதய ஓட்டமும் இரத்த அழுத்தமும் அதிக மாகின்றன.
5. இரைப்பையில் ஜீரணம் தடைப்படுகிறது.
இவை எல்லா மாற்றங்களும் நம்மை ஆபத் திலிருந்து தற்காத்துக் கொள்ளவும், தப்பித்து ஓடவும் உண்டாகின்றன.
தற்காப்பிற்காக பயன்படும் இம்மாற்றங்கள் மன உளைச்சலின் போதும் ஏற்பட்டு உடலின் ஆற்றல்கள் வீணாகின்றன.
நடுவயதில் மன அழுத்தம்
ஒவ்வொருவருக்கும் இளமையில் எண்ணற்ற கற்பனைகள், எதிர் பார்ப்புகள் இருக்கின்றன. சுமார் 40 வயதை நெருங்கும் போது இது வரை எதைச் சாதித்தோம்? என்ற கே ள்வி, நாம் எதிர்பார்ப்பதைவிட மாறா ன செயல்கள், இப்படி நடந்துவிட்டதே என்றஏமாற்றம் பல ருக்கு ஏற்படுகின் றன.
இதனால் பலர் தம்முடைய தோல்வி களை மறைக்க வெளியுலகிற்கு வேஷம்போடுகின்றனர். தான் வல் லவன்தான் என்ற போலித்தனமான அந்த ஸ்திற்காக பலவற்றைசெய்கிறார் கள்.
இன்னும் சிலர், எதிலும் தலையிடாமல் தம்மையே சுருக்கிக் கொண்டு அடக்கிக் கொள்வர்.
இவ்விரண்டிலுமே மனஉளைச்சல் உண் டாகும்.
இதற்கு தீர்வு தன்னையறிதல் தான்.
பலம், பலவீனம் இரண்டையும் அறிந்து பலத்தை பெருக்கவும் பலவீ னத்தை குறைக்கவும் செய்தால் மனம் சமநிலை அடையும்.
பிறர் என்ன நினைப்பார்களோ என்பதற்காக தே வையில்லாததை செய்தால் மேலும் சுமையாகி விடும்.
பெண்களுக்கு மெனோபாஸ் மன உளைச்சல்
பெண்களுக்கு 40 வயதாகும்போது உடலில் சுரக் கின்ற ஈஸ்ட்ரஜன் ஹார்மோனின் அளவு குறைந் துவிடுவதால் உடலிலும், மனதிலும் எண்ணற்ற மாற்றங்கள் உண் டாகின்றன. இதனால்
* மனப்பதட்டம்
* வேலையில் எரிச்சல்
* காரணமில்லாமல் அழுதல்
* ஞாபகமறதி
* சக்தி குறைந்த உணர்வு
* உடல் வெப்பமாகுதல்
* உடல் வியர்த்தல்
* தூக்கமின்மை
போன்ற தொல்லைகள் ஏற்படும். இதை சரியான ஹார்மோன் சிகிச்சையின் மூலம் தவிர்க்கலாம். குணப்படுத்தலாம்
மன உளைச்சல் உண்டாக 25 முக்கிய காரணங்கள்
1. கணவன்/மனைவி இறப்பு
2. விவாகரத்து / திருமணத்தில் பிரிவு
3. சிறைத் தண்டனை
4. குடும்பத்தினரின் இறப்பு
5. திடீர் உடல் நலக்குறைவு, விபத்து
6. திருமணம்
7.வேலையிழப்பு
8. வேலையிலிருந்து ஓய்வு
9. கர்ப்பம்
10. உடலுறவில் சிக்கல்கள்
11. பொருளாதார இழப்பு
12. வேலை மாற்றம்
13. கடன் வாங்குதல்
14. நண்பரின் இறப்பு
15. கணவன் – மனைவி சண்டை
16. பதவி உயர்வு, புதிய பதவி
17. மகன் / மகள் பிரிவு
18. மாமியார் மருமகள் வகை கொடு மைகள்
19. புதிய வீடு கட்டுதல்
20. மேலதிகாரியின் கெடுபிடி
21. வேலை நேரங்களில் பெரிய மாற்றம்
22. பொழுது போக்கு இல்லாமை
23. வீடு இடமாற்றம்
24. தூக்கத்தில் குறைபாடு
25. உணவு பழக்கத்தில் மாற்றம்.
மன உளைச்சலின் அறிகுறிகள்
மனதில்
* அடிக்கடி கவலை
* கட்டுக்கடங்காத கோபம்
* இனம் புரியாத சோகம்
* எல்லா நேரங்களிலும் பயம்
* எதிலும் கவனம் செலுத்த இயலாமை
* தாழ்வு மனப்பான்மை
* முடிவெடுக்க இயலாமை
* எந்தத் தொழிலையும் தொடர்ந்து செய்ய இயலாமை
* வாழ்க்கையில் திருப்தியின்மை
* காரணமின்றி அழுதல்
உடலில்
* தலைவலி (அ) தலைச் சுற்றல்
* முகம் வியர்த்தல்
* இறுகிய தோற்றம்
* வாய்விட்டு சிரிக்க இயலாமை
* உடற்சோர்வு
* சாப்பிட இயலாமை
* நெஞ்சு படபடப்பு, நெஞ்சு வலி
* வயிறு புரட்டல், வாந்தி உணர்வு
* அடிக்கடி மலம் மற்றும் சிறுநீர் கழித்தல்
* மூச்சு வேகமாகுதல்
* கை, கால் நடுக்கம்
* தூக்கமின்மை
மன உளைச்சலால் சக்தி வீணாகாமலி ருக்க…
மன உளைச்சலின்போது அதிகபடியான அட்ரீனலின் போன்ற ஹார்மோன்கள் சுரப்பதால் உடலில் தசைகள் இறுக்கம டைகின்றன. அச்சக்தியை வீணாக்காமலிருக்க சில உடற்பயிற்சிக ளைச்செய்தால் அச்சக்தியை வலிமையானதாக்கிவிடமுடியும். மன உளைச்சலின்போது தனியிடத்திற்குச் சென்று சில பயிற்சிக ளைச் செய்யலாம்.
1. நேராக நின்று, பிறகு, கீழே உட்காருதல் (இதை 5 முதல் 10 நிமிடங்கள் வரை)
2. மூச்சை நன்கு இழுத்து நேராக நின்று, பிறகு மூச்சை வெளிவிட்டு குனிந்து இரு கைகளாலு ம் தரையைத் தொடுதல் (சுமார் 5 முதல் 10 நிமிடங்கள்)
இதில் ஏதாவது ஒன்றை சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் செய்தால் மன அழுத்தம் குறை ந்து உடல் வலிமை பெருகும்.
மன உளைச்சலில் மனநிலை எப்படி?
* சிடுசிடுவென பழகுதல்
* எதிலும் நம்பிக்கையின்மை
* யாரிடமும் பழக பிடிக்காமல் தனித் திருத்தல்
* அளவிற்கதிகமாக உணர்ச்சி வயப் படுதல் அல்லது எதையும் வெளிக் காட்டாமல் அடக்கிக் கொள்ளுதல்.
* பிறர்மீது அதிகமாக சந்தேகப்படுதல்
* ஏதோ தவறு செய்து விட்டதைப் போன்ற குற்றவுணர்வுகள்.
* அளவிற்கதிகமான கவலைகள்
* செயலில் கவனம் செலுத்த இயலா மை
*எளிதில் சோர்வடைதல்
* சரியாக உணவு உண்ணாமை
* சரியான தூக்கமின்மை
* குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள்
* விரக்தி மனப்பான்மை
மனஉளைச்சல் உண்டாவது எப்படி?
மனதில் பயம், கோபம், ஆவேசம் போன்ற உணர்வுகள் பிறக்கும்போது மூளையின் கார்டெக்ஸ் பகுதி யில் பரவி, ஹைப்போதலாமஸ் என்ற நடு மூளைப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகி றது. அங்கிருந்து பிட்யூட்டரி சுரப்பிக்கு உந்துதல் செய்யப்பட்டு அதிக ஹார்மோ ன்களை சுரக்கச் செய்கின்றன.
அவை உடலின் மற்ற நாளமில்லா சுரப்பி களை இயக்குகிறது. அதில் குறிப்பாக அட்ரீனல் சுரப்பி அதிகமாக இயக்கப்பட்டு கார்டிசால் மற்றும் அட்ரீனலின் போன்ற ஹார்மோன்கள் அளவிற்கதிகமாக வெளி யாகின்றன. இவை இரத்தத்தில் கலந்து உடலின் எல்லா உறுப்புகளுக்கும் சென்று அங்கு பாதிப்பை உண்டாக்குகின்றன.
குறிப்பாக எல்லா உறுப்புகளின் இரத்தக் குழாய்களையும் சுருக்கி விடுகின்றன. அதனால் உறுப்புகள் பழுதடைகின்றன.
மன உளைச்சல் சம்பந்தப்பட்ட நோய்கள்
இரத்த ஓட்ட மண்டலத்தில் – பட படப்பு, மாரடைப்பு, இரத்தக் கொதி ப்பு
ஜீரண மண்டலத்தில் – குடல் புண், அடிக்கடி மலம் கழித்தல், வயி ற்று வலி, அல்சரேடிவ் கோலைடிஸ்
சுவாச மண்டலத்தில் – ஆஸ்துமா, அடிக்கடி சளித்தொல்லை.
நரம்பு மண்டலத்தில் – ஒற்றைத் தலைவலி, உடற்சோர்வு, தூக்க மின்மை.
நாளமில்லா சுரப்பிகளில் – தைரா ய்டு பாதிப்பு, ஆண்மையின்மை, சர்க்கரை நோய், மாதவிலக்கில் மாற்றங்கள்.
மேலும் தோலில் ஊறல்நோய், மூட்டுகளில் வலி, இடுப்பு வலி, ரொமட்டாய்டு மூட்டு வலி, உடல் பருமன், மனப்பதட்டம், மனச் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
இந்நோய்கள் உண்டாக பல் வேறு காரணங்கள் உள்ளன என்றாலும் மன அழுத்தத்தா ல் இப்பாதிப்புகள் அதிகமா கின்றன என்பதே முக்கியம்.
மனச்சோர்வை தவிர்க்க
வேலைகளை தொடர்ச்சியா க செய்யாமல் இடையிடை யே ஓய்வு எடுத்தல்.
* நாள்தோறும் உடற்பயிற்சி செய்தல்.
*ஏதாவது ஒரு குறிக்கோளை அமைத்து செயல்படுதல்.
* மனஉளைச்சலை சரியாகக் கையா ளுதல்.
*உற்சாகமாக பழகுபவர்களுடன் தொடர்பு கொள்ளுதல்.
*உற்சாகமாக பழகுபவர்களுடன் தொடர்பு கொள்ளுதல்.
*தினமும் செய்ய வேண்டிய காரியங்களை பட்டியலிட்டு முக்கிய மானவற்றை முதலில் முடித்துவிடுதல்.
* ஒரு சமயத்தில் ஒரு வேலையை மட்டும் எடுத்துக் கொள்ளுதல்.
*மனதிற்குப் பிடித்தமான பொழுது போக்கை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குச் செய்த ல்.
உங்களுக்கு தாங்க முடியாத கோபம் ஏற்பட் டால் வாயால் சொல்லாதீர்கள். அதையெல் லாம் ஒன்றுவிடாமல் எழுதுங்கள். மணல் பரப்பில் எழுதுங்கள். அதுவு ம் அலைகள் வந்து மோதுகின்ற கட லோ ர மணல் பரப்பில் எழுதுங்கள்.
-நெப்போலியன் ஹில்
மனதில் அமைதி இருந்தால் அவ்வா ழ்க்கையே சொர்க்கம்.
மனதில் அழுத்தம் இருந்தால் அது வே நரகம்.
– ஷேக்ஸ்பியர்
=> மருத்துவர் கோ. இராமநாதன்