Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் இடையே இருப்ப‍து இந்த நாலு(4) தாங்க!

வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் இடையே இருப் ப‍து இந்த நாலு(4) தாங்க!

தங்கள் வாழ்வில் தொடர்ந்து தோல்வி களையே சந்திப்பவர்களையும், ஒரு கட்டத்திற்குப்பிறகு சுதாரித்துக்கொண் டு வெற்றி பெறுபவர்களையும் இருபதா ண்டுகளாக சந்தித்து வரும் மனவியல் பயிற்சி நிபுணர் ஒருவர், இருதரப்பின ருக்கும் இருக்கிற நான்கு வித்தியாசங் களைப்

பட்டியலிட்டிருக்கிறார். அவை என்ன தெரியுமா?

தோல்வியாளர்கள்

இவர்கள், அச்சத்தின் பிடியில் தவிப்பவர்கள். உல கமே இவர்களுக்கு அச்சமூட்டுகிற இடமாய் இருக் கிறது.

சராசரி வாழ்க்கையையும் பயந்து கொண்டே செய் பவர்களாக இருக்கிறார்கள். தங்கள் எதிர்காலத் தைக் காட்சிப்படுத்தும் திறமை இவர்களுக்கு இல் லை. அப்படிமுயன்றாலும் எதிர்மறைக் காட்சிக ளை ஏற்படுத்திக் கொண்டு மனச்சோர்வை வளர்த்துக் கொள்கிறார் கள்.

தங்கள் இலக்குகளை நோக்கித் தீவிரமாக எண்ணங்களைக் குவி க்க இவர்களுக்குத்தெரியாது. “ஏதோ செய் யறோம்! பார்க்கலாம்” என்பார்கள். “உங்க ள் கனவுகள் என்ன?”என்று திரும்பத் திரும் பக் கேட்டால் ஒரு கொட்டாவியைத்தான் பதிலாகத் தருவார்கள்.

தங்கள் முயற்சிகளை ஒரு காகிதத்தில் எழுதச்சொன்னால், எழுதுவார்கள். வரிசைப்படுத்துவார்கள். முதல் அடிகள் சிலவற்றை எடுத்து வைப்பார்க ள். போகப்போகக் கைவிடுவார்கள். கழு தை தேய்ந்து கட்டெறும்பான கதைதான்.

வெற்றியாளர்கள்

இவர்கள் துணிச்சல் காரர்களாய் இருக்கி றார்கள். ஒழுங்குபடுத்தப் பட்ட திறமை, திறமை மீது நம்பிக்கை இரண்டும் இருக்கிறது. சில விஷயங்களு க்கு பயந்தாலும் உலகம் ஓர் அற்புதமான இடமாக இவர்களுக்குத் தெரிகிறது.

எதிர்காலம் பற்றிய தெளிவான காட்சிகளை க் கொண்டிருக்கிறார்கள். சுயமரியாதை, சுய கௌரவம் கொண்டு வாழ்கிறார்கள். தங்கள் இலட்சியங்களை மதிக்கிறார்கள். அவை நிச்சயம் வெல்லும் என்று மனதார நம்புகிறார்கள். அதைக் குறித்து உற்சாகமாய்ப் பேசுகிறார் கள்.

தங்கள் வாழ்க்கைப் பயணத்தை புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டிரு க்கிறார்கள். இவர்களுக்கு எதிர்கா லக் கனவுகளும் உண்டு. கனவுக ளை அடைவதற்கான நடைமுறை கள் பற்றிய தெளிவும் உண்டு. பல மகத்தான இலட்சியங்களை எளி ய மனிதர்களால் எட்ட முடியும் என்கிற உறுதி கொண்டு வாழ்கி றார்கள்.

தங்கள் கடமைகளைக் காகிதத்தில் நிரல்பட எழுதுவதோடு நடை முறைப்படுத்தவும்தெரிந்து வைத்திருக்கிறார்கள். முதல்படியில் இருந்த உற் சாகம், முழுமையானஅளவில் வளரும்படி வாழ் க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். தங்கள் இலட்சியங்களையும் அணுகுமுறைகளையும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

=> விவேகபாரதி

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: