Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விசித்திரமான‌ விநோதங்களும்! அபூர்வமான‌ அதிசயங்களும்! – அரியதொரு தொகுப்பு!

விசித்திரமான‌ விநோதங்களும்! அபூர்வமாக அதிசயங்களும்! – அரியதொரு தொகுப்பு!

அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற்றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய நவீன உலக வாழ்க்கையை பார்க்கும் போது, சாதாரண விஷய ங்களில் உள்ள நிறைய

உண்மைகள் விசித்திரமாகவே கருதப்படுகின் றன.

மேலும் அத்தகைய உண்மைகளை கேட்டால், பலரும் வாயில் கை வைத்து ‘அப்படியா!!!’ என்று ஆச்சரியமாக கேட்பார்கள். சொன் னால் கூட நம்பமாட்டார்கள். உதாரணமாக, உலகி லேயே வெடிகு ண்டு வெடித்தாலும் இறக்காத பூச்சி கரப்பான்பூச்சி என்று தெரியும். ஆனால் அந்த பூச்சி தலை இல்லாமல்கூட உயிருடன் இருக்கும் என்று சொ ன்னால் ஆச்சரியம் தானே.

இதுபோன்று நிறைய விசித்திரமான சில உண்மைகள் உள்ளன. அவற்றில் சிலவற் றை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் வேறு ஏதாவது இயற்கையில் உள்ள சில விசித் திரமான உண்மைகளை எங்களுடன் பகி ர்ந்து கொள்ளுங்கள். சரி, அந்த விசித்திர மான உண்மைகளைப் பார்ப்போமா!!!

லிப்ஸ்டிக்

பெண்களுக்கு லிப்ஸ்டிக் என்றால் அவ் வளவு பிரியம். ஆனால் அந்த லிப்ஸ்டி க்கை போடும் முன், அது எதனால் ஆனது என்று சற்று யோசியுங்கள். ஏனெனில் லிப் ஸ்டிக்கில் மீன் செதில்கள் உள்ளன.

ஹெட்போன்

தொடர்ச்சியாக விருப்பமான பாடல்களை ஹெட்போனில் கேட்கிறீர்களா? அவ்வாறு ஒரு மணிநேரம் பாட்டு கேட்டால், காதுகளில் பாக்டீரியாவானது 700 மடங்கு அதிகரிக்கும்.

இறால்

கடல் உணவுகளில் இறால் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் அடுத்த முறை அதன் தலையை சாப்பிடும் போது, அதன் இதயத்தை சாப்பிடு ம் உணர்வைப் பெறுவீர்கள். ஏனெ னில் இறாலுக்கு இதயமான து அங்கு தான் உள்ளது.

நாக்கு

எப்படி கைவிரலில் உள்ள ரேகைகள் ஒவ் வொருவருக்கும் வேறுபடுகிறதோ, அதே போன்று உதடுகளின் ரேகைகளும்.

பட்டாம்பூச்சி

இந்த அழகான பட்டாம்பூச்சி, பூக்களில் உள்ள தேனின் சுவையை வாயால் தான் சுவைக்கிறது என்று நினைத்தால், அது தான் தவறு. ஏனெனில் உண்மையில் பட்டாம்பூச்சி தேனின் சுவையை அதன் கால்களில் தான் சுவைக்கிறது.

யானை

பாலூட்டிகளிலேயே யானையின் பிரசவ காலம் தான் அதிகம். அதுவும் 645 நாட்கள், யானையானது தன் கருவை சுமக்கும்.

ஆங்கில மொழி

ஆங்கில மொழியில் உள்ள ரைம்ஸ்களில் மாதம், ஆர ஞ்சு, ஊதா மற்றும் சில்வர் போன்ற வார்த்தைகளே வராது என்ற உண்மை தெரியுமா?

நெருப்புக்கோழி

உலகிலேயே மிகவும் பெரிய பறவையான நெருப்புக் கோழி யின் மூளையைவிட, அதன் கண்கள் பெரியது என்பது ஆச்சரியப்பட வைக்கும் ஒரு உண்மை.

புகைப்பிடித்தல்

இப்போதுசொல்லப்போகும் உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது என்னவெனில், சிகரெட்டை பற்ற வைக்கும் லைட்டரானது, தீக்குச்சி க்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது.

முழங்கை ட்ரிக்

கைகளை எவ்வளவு தான் அங்கும் இங்கும் அசைக்க முடிந்தாலும், முழங்கையை மட்டு ம் எவராலும் நாக்கால் தொட முடியாது. இப் போது அதை நிச்சயம் முயற்சிப்பீர்கள் பாருங் களேன்.

சிலந்தி

உலகில் எத்தனையே ஃபோபியாக்களைப் பார்த்திருப்போ ம். ஆனால் இன்றும் சிலந்தியின் மீதுள்ள பயத்தாலேயே உயிர் போகும் வாய் ப்பு உள்ளது.

தும்மல்

சொன்னால் நம்பமாட்டீர்கள், மிகவும் கடுமையாக தும் மினால் விலா எலும்புகளில் முறி வு ஏற்படும். மேலும் இவ்வாறு திடீரென்று கடுமையாக தும்பும் போது, சில நேரங்களில் தலை அல்லது கழுத்தில் உள்ள இரத்த நாள ங்கள்  சிதைவடைந்து இறப்பை சந்திக்கவும் கூடும். ஆகவே இந்த மாதிரியான கடுமை யான தும்மல் வரும் சூழ்நிலையில், கண்க ளை திறந்து தும்மினால், இத்தகைய அபாய த்தில் இருந்து விடுபடலாம்.

பிறப்பு

குழந்தையாக இருந்து வளர வளர, உடலின் கண்கள் மட்டும் பிறக்கும் போது இருந்த அளவில் தான் இருக்கம். ஆனால் மூக்கு மற்றும் காதுகள் வளர்ச்சியடையும் என்பது தெரியுமா?

கம்ப்யூட்டர்

கம்ப்யூட்டர் கீ போட்டின், ஒரே வரிசையி ல் ‘typewriter’என்னும் மிக வும் நீளமான வார்த்தையை டைப் செய்யலாம்.

முதலை

பொதுவாக கீழ் தாடை இறங்கிதான் வாயானது திறக்கப்படும். ஆனால் முதலைக்கு மட்டும்தான், மேல் தாடை தூக்கி வாய் திறக் கப்படும்.

கரப்பான்பூச்சி

வீட்டில் பெரும்தொல்லையைக் கொடுக்கு ம் கரப்பான்பூச்சி, தலை இல்லாமல், 9 நாட் கள் உயிருடன் வாழும் தன்மை கொண்ட து. எனவே வீட்டில் கரப்பான்பூச்சி அடித்து கொல்லும்போது, கவனமாக அடித்துக் கொல்லுங்கள்.

வெங்காயம்

யாருக்குமே வெங்காயம் வெட்டுவது என் பது பிடிக்காது. ஏனெனில் அது தேவையி ல்லாமல் அழ வைக்கும். ஆனால் அவ்வா று வெங்காயத்தை வெட்டும் போது கண் ணீர் வரக்கூடாது என்றால், வாயில் சூயிங் கம் போட்டுக்கொண்டு வெட்டினால், உண் மையில் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை தவிர்க்கலாம்.

தூசிப்படிந்த வீடு

வீட்டில் அடிக்கடி தூசிபடிகிறதா? அப்படி யெனில் அதற்கு காரணம், சருமத்தில் உள் ள இறந்த செல்கள்தான். அவைதான் வீட்டி ல் படிந்து, வீட்டை அடிக்கடி தூசியடைய வைக்கின்றன.

கர்ப்பமான மீன்

வீட்டில் தங்கமீன் கர்ப்பமாக இருந்தால், அதனை ‘ட்விட்’ (twit) என் று தான் சொல்ல வேண்டுமே தவிர, ‘கர்ப்பமான தங்கமீன்’ என்று சொல்லக்கூடாது.

உலகில் உள்ள வித விதமான அடிமைத்தனங்கள்

உலகில் உள்ளோர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அடி மைத்தனங்கள் இருக்கும். அதில் அடிமை த்தனம் என்று சொல்லும் போமு, பெரும் பாலும் அனைவரது நினைவுக்கும் வருவது புகைப்பி டித்தல், மது அருந்துதல், போதை ப் பொருட்கள் பயன்படுத்துதல், வீடியோ கேம்ஸ் விளையாடுதல் போன்றவை தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் உலகில் இன்னும் சில விசித்திரமான, அதிசயப்படக் கூடிய வகையில் சில அடிமைத்தனங்களும் உள்ளன.

அவற்றில் சிலவற்றைக் கேட்டால், அருவெறுப்பை ஏற்படுத்தக் கூ டிய வகையில் இருக்கும். ஆனால் அவற்றையும் மக்கள் அன்றாடம் மேற்கொள்கின்றனர். மேலும் அத் தகைய அடிமைத்தனத்தால், இத்த னை நாட்கள் உயிர் வாழ்கின்றன ரா என்று சற்று யோசித்தால், ஆச்ச ரியப்படக்கூடிய வகையில் தான் இருக்கும்.

இப்போது அவற்றில் அந்த மாதிரியான சில விசித்திரமான அடிமைத்தனங்களைப் பற்றி கீழே கொடுத்துள்ளோம். அதைப்படித்து பாருங்களேன்…

கார் அடிமை

அனைவருக்குமே கார் என்றால் மிகவும் பிடிக்கும். மேலும் ஒவ் வொருவருக்கும் ஒவ்வொரு வித மான கார் பிடிக்கும். அந்த வகை யில் நதானியேல் என்பவர், தனது சிவப்பு நிற 1998 மான்டே கார்லோ என்ற காருக்கு சேஸ் என்று பெய ரிட்டு, தனது வாழ்க்கை யின் அன்பு கிடைத்துவிட்டது என்று அதனுடன் வாழ்கிறார். மேலும் அவர் அந்த கார் வாங்கிய தினத்தை அதற் கான பிறந்தநாளாக கருதி, அதற்கு பரிசுகளை வாங்கி மகிழ்வார்.

பூனை அடிமை

43 வயது பெண்மணியான லிசா என்பவர், தனது செல்லப் பிராணியான பூனையின் மயிர் சுவைக்கு அடிமையாக உள்ளார். மேலும் இவர் தனது சொந்த பூனையின் மயிரை மட்டுமின்றி, எந்த ஒரு பூனையின் மயிரையும் சாப்பிடுவார்.

இரத்த அடிமை

blood drinking couple

உண்மையிலேயே இரத்தக்காட்டேரியைப் பார்த் திருக்கிறீர்களா? ஆம், இரத்தத்திற்கு அடிமை யாக உள்ளவர்கள் உண்டு. அதிலும் 29 வயதான மிச்செல் என்னும் பெண், மனித இரத்தம் மற்றும் பன்றியின் இரத்தத்தை கடந்த 15 ஆண்டுகளாக குடித்து வருகிறார்.

அழுக்கு அடிமை

இதுவும் வித்தியாசமான ஒரு அடிமைத் தனம் தான். அதிலும் ஹெய் டி சேரிகளில் வாழும் மக்கள், தினமும் அழுக்குகளை தண்ணீரில் கலந்து குடித்து வருகிறார்.

இறுதிச்சடங்கு அடிமை

என் புரியவில்லையா? சிலருக்கு மரண நிகழ்ச்சியில் பங்கேற்கும் பழக்கம் இருக்கும். அதில் 42 வயதா ன லூயிஸ் ஸ்குவாரிஸி என் பவர், கடந்த 20 ஆண்டுகளாக, அவர் வசி க்கும் பகுதியில் நடக்கும் அனைத்து இறுதிச்சடங்கிலும் தவறாமல் கலந் து கொள்கிறார். மேலும் இந்த மாதி ரியான விருப்பம் உள்ளவர்களும் இவ்வுலகில் உண்டு.

ஐஸ் அடிமை

ஐஸ் கட்டிகளை சாப்பிடும் பழக்கம் சிலருக்கு உண்டு. அதிலும் ஐஸ் கட்டிகளை இடைவெளி யே இல்லாமல் சிலர் மென்று சாப்பிடுவார்கள். இவ்வாறு இதற்கு அடிமையாவதற்கு காரணம், உடலில் இரு ம்புச்சத்து அளவுக்கு குறைவாக இருப்பது என்று நிபுணர்கள் கூறு கின்றனர்.

காஸ்மெட்டிக் சர்ஜரி அடிமை

உலகில் மில்லியன் கணக்கில் மக்கள் காஸ்மெட்டிக் சர்ஜரி செய்து கொள்வார்கள். அதே சமயம், சில மில்லியன் மக்கள் அந்த காஸ் மெட்டிக் சர்ஜரிக்கு அடிமையாக இருக்கிறார்கள். உதாரணமாக, இதில் ஒரு பிரபலமான அடிமை என்று சொன்னால் ஜாய்ஸ்லின் வில் டென்ஸ்டீன் என்பவர், காஸ் மெட்டிக் சர்ஜரிக்காக ஒரு வருட த்திற்கு 4,000,000 டாலர்கள் செலவழித்துள்ளார்.

டேனிங் அடிமை

பெரும்பாலான மக்கள் கடற்கரை ஓரங் களில் செய்யப்படும் டேனிங்கிற்கு அடி மையாக இருப்பார்கள். இந்த அடிமை க்கு டேனோரேக் ஸியா என்று பெயர்.

உடலில் துளையிடுதல்…

தற்போதுள்ள மக்கள் ஃபேஷன் என்ற பெயரில், உடலில் வலியை ஏற்படுத்தக்கூடிய விதவித மான டாட்டூக்கள் மற்றும் தொப்புள் வளையம், நாக்குகளில் வளையம் போன்றவற்றிற்கு அடி மையாக உள்ளனர்.

சமூக வலைதளங்கள்

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, அனைவரது மத்தியிலும் இருக்கும் ஒருவிதமான அடிமைத்தனம் தான் சமூக வலைதளங்களில் உலாவுதல். அதிலும் ஃபேஸ் புக், டுவிட்டர் போன்ற வற்றில் இருப்பது மிகவும் பிரபலமா னது.

முடியை பிடுங்குதல்…

உலகில் 11 மில்லியன் மக்கள், முடியின் நுனியி ல் உள்ள வெடிப்பு க்களைப் பிடுங்கும் பழக்கத்தி ற்கு அடிமையாகி யுள்ளனர்.

டிடர்ஜெண்ட் அடிமை

எப்போதாவது டிடர்ஜெண்ட்டை சுவைத்துள் ளீர்களா? பொதுவாக டிடர்ஜெண்ட்டுகளை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும். ஆ னால், 19 வயதான டெம்பஸ்ட் என்பவர், டிட ர்ஜெண்ட்டின் சுவைக்கு அடிமையாகியுள்ளா ர்.

கண்ணாடி டம்ளர்கள்

ஜோஷ் என்பவருக்கும் கண்ணாடி டம்ளர்கள் என்றால் மிகவும் பிடி க்கும். உடனே ஒயின் குடிப்பதற்கு என்று நினைக் காதீர்கள். கண்ணாடி டம்ளர்களை சாப்பிடுவத ற்கு மிகவும் பிடிக்குமாம். மேலும் அவர், கடந்த நான்கு ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட கண் ணாடி டம்ளர்களையும், 250 பல்ப்புக்களையும் சாப்பிட்டிருப்பதாக சொல் கிறார்.

மலமிளக்கும் மாத்திரை (Laxative)

இந்த மாத்திரையானது 15 வயதான கிம்பர்லி என்னும் பெண்ணுக்கு சாக்லெட் போன்றது. அதிலும் ஒரு நா ளைக்கு 100 மாத்திரைகளை சாப்பிடு வார். இதனால் அவர் இரத்தப்போக்குட ன் கூடிய அல்சர் மற்றும் அதிகப்படியா ன ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் மரு த்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

கற்கள்

44 வயதான தெரேசா என்னும் பெண், கற்களின் சுவை யானது பிடித்துவிட்டது. இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக கற்களை சாப்பிட்டு வந்திருக்கிறார். இத னால் அவரது பற்கள் உடைந்து போய், கடுமை யான வயிற்று வலிக்கு ஆளானாலும், கற்கள் சாப்பிடுவதை மட்டும் நிறுத்தவில்லை.

நெயில் பாலிஷ்

நெயில் பாலிஷை நகங்களுக்கு போடும் அடிமைத்தனம் இருக்கிறது என்று சொன் னால், நம்பலாம். ஆனால் 32 வயதான ஜேமிக்கு, நெயில் பாலிஷின் வாசனை மற்றும் சுவை பிடித்து விட்டது. இத னால் ஒரு நாளைக்கு 6 பாட்டில்நெயில் பாலி ஷை குடித்துவருகிறா ர்.

=> விவேகபாரதி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: