Friday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிகள் (1986) – விரிவான பார்வை

நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிகள் (1986) – விரிவான பார்வை

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமென்பது நுகர்வோர் பிரச்சனைகள், சேவைகுறை பாடு, வணிக நடைமுறை, நேர்மையற்ற வணிக முறை போன்றவற்றிற்கு தீர்வு தரும் சட்டமாக உள்ளது. நுகர்வோர் நீதி மன்றங்கள் மூலம் புகார்தாரரே புகார் தாக்கல் செய்தும் அவரே வாதிட்டும் நீதி பெற முடியும்.

மருத்துவக்குறைபாடுகள், வங்கிகள், வீடு கட்டிக் கொடுப்பவர் பிரச் சனைகள் மற்றும் பொருள்கள் தரத்தில் உள்ள குறைபாடுகள் போன்றவற்றை உள்ளட க்கிய சிக்கல்களுக்கு நீதி பெற

நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்.

முக்கிய விதிகள்:-

நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் பிரி வு ”2(7)” நுகர்வோர் மன்றங்கள் எல்லாம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 இல் பிரிவு 27(2) –இன்படி முதல் நிலைக் குற்றவிய ல் நீதிமன்றமாக (FIRST CLASS MAGISTRATE COURT) செயல்பட வும், அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கவும் அல் லது அதிகபட்சம் ரூ.10,000/-(ரூபாய் பத்தாயிரம்) அபராதம் விதிக்க வும் அதிகாரம் உள்ளது.

நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் பிரிவு ”3” அடுக்கு நீதி வழங்கும் நுகர் வோர் மன்ற அமைப்புகள் (Three – Tier Consumer Disputes Redressal Agencies) பண வகையிலான அதி கார வரம்பு :-

1).மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் – அசல் அதிகார வரம்பு (Original (District Forum) 20 இலட்சம் Jurisdiction).

2).மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் – 20 இலட்சத்திற்கும் மேல் ஒரு (State Commission) கோடி வரை.

3).தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் – ஒரு கோடிக்கு மேல். (National Commission)

4).மேல் முறையீடு (APPEAL) :- உச்சநீதிமன்றம் (Supreme Court)

நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் பிரிவு ”2(b)”:-

புகார்தாரர்(Complainant) என்பவர் யார்? எந்தவகையான புகார் தாரர்கள் புகார் கொடுக்க உரிமை உள்ளது?

1).நுகர்வோர் புகார் தாக்கல் செய்ய லாம்.

2).ஒரே நலனில் அக்கறை கொண்ட நுகர்வோர் பலர் இருக்கையில், ஒரு வர் அல்லது பலர் இருக்கையில், ஒரு வர் அல்லது பலர் இச்சட்டத்தின் கீழ் புகார் செய்யலாம்.

3).நிறுவனச் சட்டம் (Company Act) 1956 இன் கீழ் அல்லது நடைமுறையிலுள்ள வேறு சட்டத்தின் கீழ் பதிவுபெற்ற எந்த நுகர்வோர் அமைப்பும் (Any Voluntary Consumer Association) புகார் செய்யலாம்.

4.மத்திய அரசாங்கம் அல்லது ஏதேனு மொரு மாநில அரசாங்கம் புகார் செய் யலாம்.

5).நுகர்வோர் (Consumer) இறப்பு (Death) ஏற்படும் நிலையில், அவரது சட்ட வாரிசு அல்லது பிரதிநிதி (Legal Heir) தாக்கல் செய்யலாம்.

6).மேலும், நுகர்வோர் நேரிடையாகவோ அல்லது அவருடைய சார்பிலோ பொருட்களுடைய மதிப்பீட்டை அனுசரித்து அல்லது சேவையை அனுசரித் து நட்ட ஈடு தொகை பெறமுடியும்.

நுகர்வோர் (Consumer) என்பவர் யார் என்ற விளக்கத்தை கீழ் கண்ட பிரிவுகளில் காண் போம் :-

பிரிவு.2(d)(i):-

பொருட்களை நுகர்வோர், பணம் செலுத்தி விலைக்கு வாங்குவது; (Consideration) (அ) பகுதி அளவு பணம் செலுத்துவது, மற்றும் பகுதி வாக்குறுதியின் பேரில் வாங்குவது; (Deferred Pay ment) (அ) தள்ளி (பிறகு) பணத் தைச் செலுத்தப்படும் என்ற மு றையில் பொருட்களை வாங்கு வது; அத்தகைய பொருட்களை பயன்படுத்துவர் இந்த விளக்கத் தின் கீழ் வருகிறார். (அதாவது) பொருட்களை விலைக்கு வாங்கிய வர் (அ) பாதி வாக்குறுதியின் பேரிலும், பாதி பணம் செலுத்தியதின் பேரில் சேர்த்து ‘நுகர்வோர்’ என்ற விளக்கத் திற்கு வருகிறார்.

ஆனால், நுகர்வோர் என்பவர், அத்த கைய பொருட்களை ‘மறுவிற்பனை க்கு’(For Resale) வாங்குபவரும், (அ ) ’வியாபார நோக்கத்திற்கு’ (For Commercial Purpose) வாங்குபவரு ம், ‘நுகர்வோர்’ பிரிவில்வருவதில் லை.

பிரிவு.2.(d)(ii):-

‘சேவை (Services)’

பணம் செலுத்தி, ‘சேவையை’ வாட கைக்கு பெறுவது, (அல்லது) பயன் பெறுவது:- (அல்லது) பாதியை செ லுத்தப்படுவது மற்றும் பாதி வாக்கு றுதியின் பேரில் (பயன்பெறுவது) – (அல்லது) வேறு எந்த முறையின் கீழ் பணத்தை தள்ளி (பிறகு) செலுத் தப்படுதல், மற்றும் – பணம் செலுத் தி ‘சேவை’ பெறுதல் (அல்லது) வாக் குறுதியின் பேரில் செலுத்துவது, (அ ல்லது) பாதி செலுத்துவது மற்றும் பாதியை வாக்குறுதியின் பேரில் பெறுதல் செலுத்துவது, (அல்லது) வேறு எந்த முறையிலும் பணம் தள்ளி செலுத்துவது, பெறுபவர்களை தவிர அத் தகைய (Such Services) ’சேவைகளின்’ பலன்க ளை பெறுபவர்களையும் ‘(Benificiary)’ சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

பிரிவு.2(e):-

நுகர்வோர் பிரச்சனை என்றால் என்ன?(Consumer Dispute):-

நுகர்வோர், எழுத்து மூலம் புகார் (குறைபாடுகள்) (Complaint) வேறு நபர் மீது கொடுப்பது (அல்லது) அந்தப்புகாரில் ‘மறுப்பது’ அல்லது குற்றச் சாட்டுகளை எதிர்ப்பது என்பதாகும். அதா வது, நுகர்வோர் அல்லது பதிவு செய்யப் பட்ட நுகர்வோர் அமைப்பு அல்லது மத்திய அரசங்கம் அல்லது மாநில அரசாங்கம் மேற்படி ’புகார்‘ (Complaint) தாக்கல் செய் வது, இந்த விளக்கத்தில் உள்ளடங்கியுள் ளது. எனவே, பிரச்சனை (Dispute) என்ன என்பதை விரிவாக சொல்ல வேண்டுமெ ன்றால், ஒரு நபர் பரிகாரம்(Claim) கோரு வது அந்த கோரிக்கையை மற்ற நபர் மறுப்பது அல்லது ’பொய்’ என்று கூறுவது அல்லது ‘உண்மை’ என்று கூறுவதாகும்.

‘நுகர்வோர்’ பிரச்சனையில்’, ‘அசையா சொத்துக்கள் பற்றியும்’ அல் லது ‘அசையா சொத்துக்களின் விலை பற்றியும்’ எழுகின்ற பிரச்ச னைகள், வருவதில்லை. ஆகவே , நுகர்வோர் பிரச்சனை பற்றி நுக ர்வோர் குறைதீர் மன்றங்கள் சிவி ல் நீதிமன்றம் (Civil Court) போல புகாரில் தீர்ப்புக்காக ‘எழுவினாக் கள்’ (Issues) எழுதப்பட வேண்டியதில்லை. ஆனால், பிரச்சனை பற் றி தீர்மானிக்கப்படவேண்டிய அம்சங்கள் எ ழுதப்படவேண்டும்(Points for determination).

பிரிவு.2(f):-

குறைபாடு (பொருட்கள்)’(Defect):-

‘குறைபாடு’ (Defect) என்றால், ‘தவறானது’, நேர்த்தியில்லாமல் இரு ப்பது’ அல்லது ‘தரத்தில்’ குறைபாடு உள்ள து, எண்ணிக்கைக் குறைபாடு, பொருளி ன் உள்திறன், சுத்தம் (Purity) அமலில் உள்ள சட்டத்தின்படி ‘தகுதி உடையவை யாக’ இல்லாமல் இருத்தல் ஆகிய அம்சங் களை உள்ளடக்கியுள்ளது. மேலும், அந்த ‘குறைபாடு எந்த ஒப்பந்தத்தின் கீழ் அல்ல து வெளிப்படையாகவும் அல்லது மறைமு கமாகவும் பொருட்கள் சம்பந்தமாக வியாபரி (உற்பத்தியாளர்) என் றவகையில் கோருகின்றமுறையிலும் சேர்த்துக்கொள்ளப்படுகிற து.

எடுத்துக்காட்டு:-

புகார்தாரர், தனது புகாரில், வாக னத்தில் குறைபாடு (Defect) உள் ளது என்றும், அதன் அடிப்படையி ல் அந்த வாகனத்தை மாற்றி, வே று வாகனம் கொடுக்க வேண்டும் என்று கோரும்பொழுது, அந்தப் பு கார்தாரர் அந்த வாகனத் ’தயாரிப் பில் குறைப்பாடு’ (Manufacturing Defect) என்று நுகர்வோர் மன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.

சேவை குறைபாடு:-

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் முக்கிய குறிக்கோள் ‘நுகர்வோரி ன் நலனைப்’ பாதுகாப்புதான். அதா வது, வியாபார ரீதியாகச் சொல்லு கின்ற பொழுது, பொருட்களை வா ங்குபவர் மற்றும் பெரும்பான்மை யாக கருதப்படுவது, பொருட்களின் பயன்படுத்தும் ‘சேவை’(Service) என்பதாகும். ’சேவை குறை’ (Deficiency) என்பது ‘தவறான செய் கை’, ‘நேர்த்தியின்மை’, ‘சிறுகுறைபாடு’ அல்லது ‘சேவையில் பற்றா க்குறை’ மேலும் பொருட்களின் தரத்திலும் (Quality) குறைபாடு, சேவை முறையில் குறைபாடு, அ ந்த சேவைமுறை அமலில் உள்ள சட்டத்தினால் பின்பற்ற வேண்டி ய ஒன்றாக இருக்கவேண்டும். அ ந்தச் சேவை முறை ஒப்பந்தத்தின் தொடர்பாக அல்லது வேறு வகை யிலும் செயல்படுத்த வேண்டுமெ ன்று பொறுப்பு எடுத்துக்கொள் வது அல்லது வேறு வகையிலும் சேவைக்கு தொடர்பாக இருப்பது என்பதாகும்.

தொடர்வண்டி (Railway) சேவை குறைபாடு:-

பதிவு செய்யப்பட்ட பெட்டியில்(Compartment) பதிவு செய்துள்ள பய ணிக்கு, ”தண்ணீர் வசதி” கிடைக்கவில்லை. என வே, இத்தகைய சேவை குறைபாட்டிற்கு (Deficiency in Service) தொடர்வண்டி நிர்வாகம், பாதிக்கப்பட்ட அந்த பயணிக்கு நஷ்டஈடு பணம் வழங்கப்பட வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உள்ளது.

மேற்கூறிய சேவை குறைபாடுக ளை போலவே விவசாய விதை களின் தரத்தில் குறைபாடு, விவ சாயத்தில் மின் இணைப்பு வழங் குவதில் குறைபாடு, கல்வி நிறுவ னங்களில் சேவை குறைபாடு, வங்கி முகவர்கள் வாகனங்கள் கை ப்பற்றுவதில் குறைபாடு, வழக்கறி ஞர் தொழிலில் சேவை குறைபா டு, வீடுகட்டி தருவதில்குறைபாடு, ஆயுள் காப்பிட்டில் சேவை குறை பாடு, சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பில் குறைபாடு, விமான சேவையில் குறைபாடு, வங்கி சே வை குறைபாடு, அஞ்சல் சேவை கு றைபாடு, குரியர் சர்வீஸ் சேவையி ல் குறைபாடு, போன்ற பல மக்கள் நுகர்வுகின்ற சேவைகளில் குறை பாடு இருந்தால் நட்டஈடு பெற்றுக் கொள்ளலாம்.

நுகர்வோர் சட்டத்தில் நட்ட ஈடு கோர முடியாத சேவைகள்:-

மேற்குறிப்பிட்ட சேவைகள் போ ல் இல்லாமல் இலவசமாக பெறு ம் சேவை மற்றும் தனிப்பட்ட சே வை ஒப்பந்தத்தின் கீழ் உள்ள சே வைக்கும் பொருந்தாது. விதி விலக்காக அரசு அலுவலர் அரசு மருத்துவமனையில் இலவச சிகி ச்சை எடுத்துக்கொண்டால் இல வச சிகிச்சையாகக் கருதமுடியாது. அதில் சேவைக் குறைபாடு இரு ந்தால் அந்த அரசு அலுவலர் நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு பெறலாம். மே லும் வாடகைதாரர் வீட்டு உரிமையாள ர் சேவை குறைப்பாட்டிற்கும் நுகர்வோ ர் நீதிமன்றத்தில் பரிகாரம் கோரமுடி யாது.

இது போன்ற பல விரிவான சட்ட உரி மைகளை உள்ளடக்கியதே நுகர்வோர் பாதுகாப்பு சட்டமாகும். எனவே மக்கள் அனைவரும் நுகர்வாளர்களாக இருக் கும் பட்சத்தில் தாங்களே விரிவாக இச் சட்டத்தின் விளக்கத்தைப் பெற்று அல்லது வழக்குரைஞர் மூலமாக வழக்குத் தாக்கல் செய்து இழப்பீடு பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு:-
யல் சட்ட இணைவகம் :
இ.அங்கயற்கண்ணி (வழக்குரைஞர்)
பு.எண்.26,ப.எண்.31,
மாதா கோயில் சாலை,
மந்தவெளி,
சென்னை-600028
கைபேசி: 9884380922
Kayal_advocate@yahoo.com

=> அங்கயற்கண்ணி, சிறகு உதிர்த்த இறகு

Leave a Reply