Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரம்மதேவர் இயற்றிய நீதி சாஸ்திரம் – ம‌ரணத்திற்கு முன் பீஷ்மர், தருமருக்கு உரைத்தது

தருமர் பீஷ்மரை, ‘அரசன் தோன்றிய வரலாற்றை விளக்கும்படிக் கேட்டார்.’இன்பம் துன்பம்,பசி தாகம்,பிறப்பு இறப்பு முதலியவை மனிதர்கள் அனைவ ருக்கும் பொதுவானவை.அப்படி இருக்கை யில் எப்படி ஒருவன் மட்டும் அவர்களுக்குத் தலைவனாக இருக்கக் கூடும்?அறிவு ஜீவிக ள்  பலர் இருக்க அது எப்படி ஒருவன் மட்டும் ஆளத்தக்கவன் ஆவான்? இதற்கான காரண ம் சாதாரணமாய் இராது . ஆகவே அது பற்றி விளக்க வேண்டும்’ என்றார்.

பீஷ்மர் கூறத் தொடங்கினார்.’ஆதிகாலத்தி ல். கிருதயுகத்தில் மக்கள் யாவரும் தருமநெறியைப் பின்பற்றி வாழ் ந்தனர்.ஒழுக்கம் தவறாத அக்காலத்தில்

மன்னனும் இல்லை, தண்டனையும் இல்லை. காலம் செல்லச் செல் லத் தரும நெறி குன்றி யது. அறிவின் குறை வால் ஆசைவயப்பட்ட மனிதர் தம்மிடம் இல் லாது பிறரிடம் உள்ள பொருளைப்பெற விரு ம்பினர். அதனால். திரு ட்டு, கொலை, சூது, சினம் முதலிய கெட்ட குணங்கள் தலைவிரித்து ஆடத்தொடங்கின. எதைச்செய்வது. எதை செய்யக்கூடாது என வரைமுறை இன்றிப் போயிற்று.காமம் மிகுந்தது..மாதரின் ஒழுக்க நெறியும் குறைந்தது. வேத நெறி பாழ்பட்டது. தருமநெறி சிதைந்தது.இது கண்டு தேவர்கள் கவலையுற்றனர். பிரம்ம தேவ னிடம் சென்று’ பகவானே..அருள் புரியுங்கள். உல கில் தருமம்கெட்டது. அதர்மம் சூழ்ந்துள்ளது. நெறி கெட்ட உலகை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்’ என முறையிட்டனர்.

பிரம்ம தேவர் ஒரு லட்சம் அத்தியாயங்கள் கொண் ட நீதி சாத்திரத் தை இயற்றினார்.அதில் அவர் விரி வாக அறம், பொருள், இன்பம் மூன்றையும் விளக்கினார்.இம் மூன் றைக் காட்டிலும் மோட்சம் என்பது வேறானது என்றும்..அதில் கூற ப்பட்டுள்ளது.மேலும் அதில் சத்துவ ம், ராஜசம், தாமதம் ஆகியவை பற் றியும். தேசம், காலம், முயற்சியின் பயன், ஞானம், கருமம், மந்திர ஆ லோசனை, அரசன், அமைச்சன், தூ தன், ஒற்றன் ஆகியோர் இயல்பு பற் றியும், சந்திவிக்கிரகம், வெற்றிக்கு ரிய வழிகள், நால் வகை படையின் இயல்புகள், பெற முடியாத பொரு ளைப் பெறும் உபாயம்,பெற்றதைக் காக்கு ம் முறை, குற்றங்களுக்கு ஏறபத் தண்ட னை ஆகியவை பற்றியும் விரிவாக இந்தத் தண் டனை நூலில் விளக்கப்பட்டுள்ளன.

பிரம்மதேவர் இயற்றிய இந்த நீதி சாஸ்திர த்தை சிவன் ..மக்கள் ஆயுள் வரவரக் குறைந்து வருவதைக் கண்டு பத்தாயிரம் அத்தியாயங்க ளாக அமைத்து அதற்கு வைசாலட்சம் என்று பெயரிட்டார். இந்திரன் இதனை இன்னும் சுருக்கி ‘ பா ஹூ தந்தகம்’ எனப் பெயரிட்டார். அதனை ப் பிரகஸ்பதி மூவாயிரம் அத்தியாயங்க ளாக்கி ‘பாரஹஸ் பத்தியம்’ என்று பெயரி ட்டார். சுக்கிரர் அதனை ஆயிரம் அத்தியா யங்களாகச் சுருக்கினார்.

இவ்விதம் மக்கள் ஆயுள் குறைவைக் கரு தி இந்த நீதி சாஸ்திரம் மாமுனிவர்களால் சுருக்கமாகக் கூறப்பட்டு ள்ளது.

டி. வி. ராதாகிருஷ்ணன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: