Tuesday, March 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இருசக்கர வாகன பயன்பாடும் அதன் பாதுகாப்பும்! – பழுது நீக்குபவரது ஆலோசனைகள்

இருசக்கர வாகன பயன்பாடும் அதன் பாதுகாப்பும்! – பழுது நீக்குப வரது ஆலோசனைகள்

இன்றைய சூழலில் நான்கு சக்கர வாகனங்களை விட இரண்டு சக்கர வாகனங்கள் பயன்படுத்து வோர் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. இரு சக்கர வாகனத்தில் ஓரிடத்தில் இருந்து எளிதாக மற் றொரு இடத்திற்குப் போய்விட முடியும் ஆகையால் தற்போது இரு சக்கர வாகனங்கள் பெருகிவிட்ட நிலையில் இதை எவ்வாறு பாதுகாக்கலாம் என்று, இருசக்கர வாகனத்தை 23 ஆண்டுகளாக

பழுது பார்க்கும் பணிசெய்யும் ஜோதி என்பவர் கூறும் ஆலோசனை களில் சில…

கேள்வி: இரு சக்கர வாகனத்தைப் பழுதில்லாமல் பாதுகாப்பது எப்படி?

பதில்: முதலில் இருசக்கர வாகனத் தை ஓட்டும் முறையை நன்கு அறி ந்து ஓட்டவேண்டும். நமது இருசக் கர வாகனம் முடிந்தவரை ஒருவர் கைப்பட இருக்க வேண்டும். நமது இருசக்கர வாகனத்தைப் பழுதுபடச் செயபவர்களே இரவல் வாங்கி ஓட் டுபவர்கள் தான். வாகனம் ஓட்டும் போது கிளர்ச்சைப் பிடித்துக் கொ ண்டும், பிரேக்கை அழுத்திக் கொ ண்டும் ஓட்டக்கூடாது. அவ்வாறு ஓட்டினால் வாகனம் மிகவிரைவி ல் பழுதாகிவிடும். வாகனத்தை ஓட்டும்போ து எண்ணெய் (ஆயி ல்), காற்று, வாகன ஒலிக்கருவி, பெட்ரோல் இவைகள் சரியா க இருக்கிறதா? என நன்கு கவனித்து பின் ஓட்ட வேண்டும். இல்லாவிடில் இருசக்கர வாகனம் பெரும் செலவு வைக்கும். முக்கி யமாக நம் வாகனத்தை ஓட்டுவதற்கு முன் பு இரு சக்கர வாகன (ஸ்டாண்டு) தாங்கி யை நன்கு எடுத்துவிட்டு ஒட்டுங்கள். இல் லாவிடில் வாகனத்திற்கும், உங்களுக்கு பெரும் சேதம் ஏற்படும். உங்கள் வாகனத்தி ல் ஏதாவது பழுது ஏற்பட்டு அதை இருசக்கர வாகன பழுது நீக்குபவரிடம் சென்று காட் டினால் அவர் சரி செய்துவிடுவார். வாகன த்தைச் சரிசெய்த பிறகு “அவர்தான் சரிசெய்து விட்டாரே, இனி வாக னம் நன்கு ஓடும்” என நினைத்து நம் இஷ்டம்போல ஓட்டினால் மீ ண்டும் நம் வாகனம் பழுதாக நேரி டும். அதனால் இளம் வயதுப்பெண் ணை பெற்றோர் பாதுகாப்பதுபோ ல நம் வாகனத்தையும் பாது காத்து வந்தால் வாகனத்திற்கு எந்தப் பிரச் சனையும் இருக்காது.

கேள்வி: இரு சக்கர வாகனத்திற்கு எந்த மாதிரி பிரச்சனைகள் வரும்?

பதில்: இன்று பலர் மண்ணெண்ணெய் ஊற்றி வைத்த ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் தண்ணீர்க் குடு வைகளில் பெட்ரோல் பிடித்துச் சென்று இரு சக்கர வாகனத்தில் ஊற்றுகின்றனர். இதனால் பெட் ரோலும், அந்த குடுவயினுள் இ ருக்கும் சிறு அளவு மண்ணெண் ணையும் கலந்த பெட்ரோலை வாகனத்திற்கு ஊற்றி ஓட்டும் போது முதலில் இருசக்கர வாக னத்தின் போர் அடிபடும். பின்பு வாகனம் அதிக கம்பரசர் ஆகி நம் வாகனம் ஓடாது.

சாலைகளில் பள்ளங்களிலோ, மேடுகளிலோ, வாகனத்தை வேகமாக இயக்கிச்செல்லும் போது நம் வாகனத்தில் ஆயில் கசிவு ஏற்பட லாம். ஏன் பிரேக் பிடிக்காமலும் போகலாம். சில நேரங்களில் வாகனத்தின் சிறு பாகங்கள் உதிர்ந்து விடக்கூடும். ஆதலால் நட்டு, போல் டுகளை நன்கு இறுக்கிய நிலையில் வைத்துக் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டும். இன்று ஓடும் இரு சக்கர வாகனம் அனைத்தையும் 3 மாதத்திற்கு ஒரு முறை வாகனத்தைச் சுத்தப் படுத்தி சரி செய்ய வேண்டும். அவ்வாறு சரி செ ய்யாவிடில் கிளர்ச் போன்ற பாகங்கள் பழுதா கும்.

இன்று தமிழ் நாட்டில் இரு சக்கர வாகனத்தை 5% பேர் மட்டும் சரியா கப் பரா மரிக்கிறார்கள். மீதமுள்ள 95% பேர் ஏனோ, தானோ என்று கடமைக்கு வாகன த்தைப் பராமரிக்காமல் ஓட்டிச்செல்வதால் இவர்களாலே பல விபத் துக்கள் இன்று ஏற்படுகிறது.

கேள்வி: இருசக்கர வாகனத்தை ப்பழுதுபார்க்க வரும்போது மக்க ள் எப்படி ஏமாறுகிறார்கள்?

பதில்: இரு சக்கர வாகனம் பழுது நீக்க வரும் வாகன ஓட்டிகள் ஏமா றாமல் இருக்க வேண்டுமானால், நம் வாகனத்திற்கு என்ன பழுது என வாகன பழுது நீக்குபவரிடம் கேட்டு அறிந்து, அதற்க்கான உதிரிப் பாகங்கள் வாங்க நேரிட்டால், நம் பணத்தை வாகனப் பழுது நீக்குபவரிடம் கொடுக்காமல் நீங் களே அப்பொருட்களை நேரடியா கச் சென்று வங்கிக் கொடுக்க வே ண்டும். அவர்களை வாங்கவிட் டால் குறைந்த விலையில் தரமி ல்லாத உதிரிப் பாகங்களை வாங் கி மாட்டிவிட்டு அதில் பணத்தை மிச்சம் பண்ணிக் கொள்வர். இத னால் நீங்கள் ஏமாற நேரிடும்.

சில நேரங்களில் நீங்களே அவ்வா றான வாகன உதிரிப்பாகத்தை வாங் கிக்கொடுத்தால் அதில் இது சரியில் லை, அது சரியில்லை என பொய் சொல்லி உங்களை (டூவீலர் மெக்கா னிக்) வாகன பழுது நீக்குபவர் அலை யவிடுவர். அல்லது நீங்கள் வாங்கி வந்த உதிரிப்பாகம் சரியில்லை. ஆத லால் என்னிடம் பணம் கொடுங்கள் நல்ல தரமான பொருட்களை வாங்கிப் பொருத்துகிறேன் என்பார். அவ்வாறு கூறியது அவர்களிடம் பணம் கொடுக்கும் போது நம் வா கனத்திற்கு தரமில்லாத வாகன உதிரி ப்பாகத்தை வாங்கிப் பொருத்தி விட்டு, நாம் கொடுத்த பணத்தில் கொஞ்சம் பணத்தை கையாடல் செய்து விடுவர். இந்த உதிரிப்பாகத்தைப் பற்றியோ, வா கனம், வாகனப் பழுது பற்றியோ தெரி யாதவர்கள் இவர்களிடம் சென்றால், இன்னும் ஏமாற அதிக வாய்ப்பு இருக் கிறது.

அடுத்து இருசக்கர வாகனத்தைப் பழுது நீக்க, இருசக்கர வாகனத் தைப் பழுது நீக்குபவரிடம் நம் வா கனத்தைக் கொண்டு வரும்போது உங்களுக்கு நன்கு தெரிந்த அல்ல து உங்கள்பகுதியில் அதிக ஆண்டு களாக வாகனப் பழுதுநீக்கும் இப் பணி செய்து வருபவரிடம் உங்கள் வாகனத்தைக்கொண்டு செல்லுங் கள். சாலையோரம் சிறு பெட்டிக் கடை வைத்தருக்கும் இருசக்கர வாகன பழுது நீக்குபவரிடம் சென்றால் நீங்கள் ஏமாற நேரிடும்.

இந்த மாதிரி சாலை ஓரம் இருப்பவரிடம் உங்கள் வாகனத்தைக் கொண்டு சென்றால் 100 ரூபாய் கேட் பார்கள். அதே போல் உங்கள் வாகன த்திற்குப் பழைய டயரைப் பட்டன் போட்டு மறு சீரமைப்புச் செய்து இது புது டயர் எனக்கூறி 500 ரூபாய்க்கு வரும் வாடிக்கையாளர்கள் தலையி ல் கட்டிவிடுவார்.

இருசக்கர வாடிக்கையாளர்கள் பல ருக்கும் இதில் கவனமில்லை. காரணம் வாகனத்தை விட்டு விட்டு எப்படியாவது வாகனம் சரி செய்தா ல் போதும், வண்டி ஓடினால் போது ம், அதுவும் விரைவாக வாகனத் தைப் பழுது நீக்கித் தர வேண் டும் என்ற மனநிலையே வாடிக்கையா ளர்கள் இருப்பதே ஏமாறக் காரண மாகும்.

கேள்வி: இருசக்கர வாகனம் ஓட்டு வோர் வேறு என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்?

பதில்: வாகனத்தில் ஓட்டுநர் உரிமம் காப்பீட்டு நகல்கள், மற்ற வாக னம் சம்மந்தப்பட்ட முக்கிய தாள் களை பத்திரமாக வாகனத்திலே யே வைத்திருக்கவேண்டும். வாக னக் காவலர் எப்போது நம் வாக னத்தை மடக்கிக்கேட்டாலும் கா ட்த்தயாராக இருக்கவேண் டும்.

நண்பர்கள் ஓட்டுவதற்கு வாகனம் தருவதை அனுமதிக்கக் கூடாது. காரணம் உங்களின் வாகனத்தை வாங்கி க்கொண்டு எங்கேனும் சட்டத்திற்குப் புற ம்பான செயல்களான நகை அறுத்தல், பிக்பாக் கெட் அடித்தல், தாக்குதல் போன் ற செயல்களில் உங்கள் நண்பர் ஈ டுபட்டு காவலரிடம் தான் மாட்டிக் கொள்ளாமல் உங்கள் வாகனத்தைவிட்டு ஓடிவிட்டால் அவ்வளவு தான். நீங்கள் தேவையில்லா த பிரச்சனையில் மாட்டிக் கொள்ள நேரி டும்.

இந்த மாதிரிப் பிரச்சனைகள் இன்றைய இளம் வயது இளைஞர்க ளால் மட்டுமே நிகழ்கிறது. இன்று அதிவேக இருசக்கர வாகனம் வந்துவிட்டது. 100 கிலோ மீட்டருக்கு க் குறையாமல் செல்லும் இந்த வாக னத்தை ஓட்டுபவர்

பெரும்பாலோருக்கு நிதானமில்லை. பல விபத்துக்களில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. நன்கு ஓட்டத் தெரிந்தவ ர்களே இந்த மாதிரி வாகனத்தைக் கையாள வேண்டும்.

இன்று இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தாங்கள் ஓட்டும் பொது சாலையில் தன்னை எவரும் முந்திவிடக்கூடாது, அவ்வாறு முந்தி னாலும் அவரை முந்தி விட்டு தன் திறமை நிரூபிக்க வே எண்ணுகின்றனர். வாகன ம் ஓட்டும் போது பொறாமை இருக்கக்கூடாது. 50வயதிற்கு மேற்பட்டவர்கள், அல்லது சர் க்கரை, ரத்த அழுத்தம் உள்ள வர்கள் வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல் நல்லது. இவ ர்களால் பிற பயணிகளுக்கு அதிக ஆபத்து இருக்கிறது. திடீரென்று இவர்களுக் கு மயக்கமோ, நெஞ்சுவலியோ, தலை சுற்றலோ வரும் பொழுது நிலை தடுமாறி விபத் துக்குள்ளகிறார்கள்.

சாலை விதியை மதித்து வாகனம் ஒட்டினாலே இங்கு பிரச்சனைக ள் இல்லை. ஆனால் இங்கு பெரும்பாலும் சாலை விதிகளை மீறவே செய்கின்றனர். பச்சை விளக்கு எரிவதற்கு முன்னாலேயே சில அவசரக் குடுக்கைகள் உடனே செல்ல முனை வதால் பெரும் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

குறிப்பாக இன்று பெண்கள் இரு சக்கர வாகன த்தை ஒட்டத்தெரியாமலேயே ஓட்டுகின்றனர். இவர்களில் பலர் நடுச்சாலையில் வாகனம் ஓட்டுகின்றனர். பின்னால் வருபவர் எவராவது வாகன எச்சரிக்கை ஒலி எழுப்பினால் அவர்க ளுக்குக் கூட வழிவிடுவதில்லை. அவ்வாறு ஒலி கொடுத்து முன்னேறிச் செல்பவர்களை இப்பெண்கள் திட்டுகி ன்றனர். தவிர இரு பக்கக் கண்ணாடியைப் பெரும்பாலும் பார்த்து இவர்கள் ஓட்டுவது இல்லை. சாலையில் இடது, வலது என மாறி மாறி இவர்கள் ஓட்டுவ தால் பின்னால் வருபவர்களுக் குப் பெரும் பிரச்சனையாக இ ருக்கின்றனர். சாலையில் பெண்கள் இரு சக்கர வாகனம் ஓட்டும்போது அவர்களின் பின் னால் செல்பவர்கள் மிகக் கவனமாக தம் வாகனத்தை ஓட்டிச் செல் ல வேண்டும்.

கேள்வி: இருசக்கர வாகனத்தை விற் கும் போதும், வாங்கும்போது கவனிக் க வேண்டியவை

பதில்: நாம் ஒரு இரு சக்கர வாகனத் தை விற்கிறோம் என்றால், இந்த வாக னத்தை வாங்குபவரின் விலாசம், அ டையாள அட்டை நகல், ரேசன் கார்டு நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இவர் இந்த விலாசத்தில் தான் இரு ப்பவரா? அல்லது வெளிமாநிலத்த வரா? எனத் தெரிந்துவிடும். அவ்வாறு இல்லாமல் வாகனம் விற்கும் போது நம் வாகனத்தை எங்கேனும் தவறாகப் பயன்படுத்தி விட்டு, வாகன காவலரி டம் சிக்கிக் கொண்டால் நாம் மாட்டிக் கொள்ள நேரிடும்.

தவிர்த்து வாகனம் வாங்குபவர், வாகனம் விற்ப னை செய்பவரின் அனைத்து விலாசம் உள்ளி ட்ட தகவல்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும். சிலர் தம் இரு சக்கர வாகனத்தை எங்கேனும் இடித்து விட்டு விற்க வருவர். அப் போது குறை ந்த விலைக்கு வருகிறதே வாங்கலாம் என நினைத்து வாங்கினால் பின்பு தொ ல்லை பல வீடு தேடிவரும். 18 வயதிற்கு க் குறைவானவர்கள் வாகனம் ஓட்டுவ து சட்டப்படி குற்றம் எனச் சட்டம் இருந் தும் பல வீடுகளில் 18 வயது நிரம்பாத இளஞ்சிறார்கள் இரு சக்கர வாகனம் ஓட்டுவதை பெற்றோர்கள் ஊக்குவிக்கி றார்கள். இதனால் ஓட்டுநர் உரிமம் பெ றாத இவர்கள் வாகனம் ஓட்டும் போது சாலையில் பிறருக்கு தொந் தரவு ஏற்படும். இவர்கள் பாதிக்கப் படுவதோடு பிறரையும் பாதிப் படையச்செய்வர்.

இருசக்கர வாகன ஓட்டுனர்கள் கவனத்திற்கு:

அலைபேசி பேசிக்கொண்டு வாக னம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண் டும். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் ஒலி எழுப்புவதைக் கேட்க முடியாமல் போகும்.

சாலையில் செல்லும் போது சமிக்ஞை (சிக்னல்) விழுந்தால் (சடன் பிரேக்) உடனடியாக வண்டியை நிறுத்தாதீ ர்கள். அவ்வாறு செய் தால் பின்னால் வரும் வாகனம் உங்கள் மீது இடித்து விடும்.

நடுரோட்டில் வாகனம் ஓட்ட வேண்டாம். அவ் வாறு போவதால் பெரு ம் வாகனங்கள் செல்வது கவனம்.

எவரேனும் உங்களுக்குப் பின்னால் வருபவர்கள் (Horn) ஒலி எழுப்பினால் வழிவிடுங்கள்.

உங்கள் வாகனத்தின் பக்கக் கண் ணாடியைப் (side mirror) பார்க்காம ல் இடது, வலதுபுறம் திரும்பாதீர் கள்.

பகலிலேயே வாகன விளக்கு (light) எரியாமல் பார்த்துக் கொள்ளுங்க ள்.

உங்களுக்கு முன்பு செல்லும் வாகனத்தை முந்த வேண்டும் என்றால் முதலில் வாகன ஒலி எழுப்பி, பின்பு வாகன வேகத் தைக் கூட்டி வலது புறமாக முந்துங்கள்.

கண்டிப்பாக தலைக்கவசம் அணி ந்து ஓட்டுங்கள்.

மது அருந்தி விட்டு வாகனத்தை ஒட்டாதீர்கள்.

வாகனம் ஓட்டும் போது உங்களுக்கு முன்பு, பின்பு, வலது, இடது புறங்களில் வரும் வாகனத்தைக் கவனித்துக் கொண்டே வாகன த்தை ஒட்டுங்கள்.

இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மேற்கூறிய அறிவுரைகளைப் படிப்பதோடு நிறுத்தி விடாமல், இதை உங்கள் வாழ்வில் தினந்தோறும் கடைபிடித் தால் உங்களுக்கு மட்டுமல்ல, பிற வாகன ஓட்டுன ர்களுக்கு இது பயனாக அமையும்.

=+>=+>=+> சித்திர சேனன் (சிறகு உதிர்த்த‍ இறகு)

Leave a Reply

%d bloggers like this: