Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குடிகாரர்களுக்கான (மது அருந்துபவர்களுக்கான) சிறப்பு பதிவு இது – இதை படிக்கத் தவறாதீர்!

குடிகாரர்களுக்கான (மது அருந்துபவர்களுக்கான) சிறப்பு பதிவு இது – இதை படிக்கத் தவறாதீர்!

மது குடித்தவுடன் அதில் இருக்கும் ஆல்கஹால் ரத்தத்தால் உறிஞ்சப் படுகிறது. மற்ற உணவைப் போல இதை ஜீரணம் செய்ய வேண்டியது இல்லை. எளிதில் ரத்தத்தால் உறி ஞ்சப்படும் ஆல்கஹால் தண்ணீரி லும், கொழுப்பிலும் கரையும் தன் மை கொண்டது.

இதனால் விரைந்து உடல் உறுப்புகளுக்கு செல்கிறது. அதிலும்

அதிக ரத்த நாளங்கள் மற்றும் அதிக நீர்தன்மை கொண்ட மூளைக் கு அதிக அளவு ஆல்கஹால் செல்கிறது. இது போல் கல்லீரலுக்கு செல்லும் ஆல்கஹால் டி ஹைட்ரோ ஜீனேஸ் என்ற என்சைமை சுரக்கிறது. இது ஆல்கஹாலை அசிட்டால்டிஹைட் ஆக மாற்றுகி றது. இது விஷத்தன்மை மிக் கது. இது உடலின் அனைத்து பாகங் களையும் பாதிக்கிறது.

இது மற்றொரு என்சை மான அசிட்டால்டிஹைட் டிஹைட் ரோ ஜீனேசை தூண்டுகிறது. இது விஷத்தன்மை கொண்ட அசிட்டால் டிஹைடை அசிட் டேட் அல்லது அசிட்டிக் ஆசிட் ஆக மாற்றி உட லில் இருந்து வெளி யேற்றுகிறது.

இந்த என்சைம் சுரப்பு குறைவாக இருப்பவர்களின் உடலை விட்டு ஆல்கஹால் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு வன்முறை நடவடிக்கை அதிகரிக்கும். வாந்தியை கட்டுப்படுத்தும் மூளை பகுதி பாதிக்கப்படுவதாலும். விஷத்தன்மை மிக்க அசிட்டால்டிஹைட் மூளை ரத்தத்தில் சுற்று வதாலும் வாந்தி ஏற்படும்.

மேலும் ஆன்டி டயூரிட்டி ஹார்மோ ன் சுரப்பையும் ஆல்கஹால் பாதிக் கிறது. இதனால் உடலின் நீர் சம நிலை பாதிக்கும். சிறுநீரகம் சிறுநீரி ல் உள்ள அதிகப்படியான தண்ணீ ரை மீண்டும் கிரகிக்க முடியாத நிலை ஏற்படும்.

இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்படு ம். இது கழுத்து வலி, முதுகு வலி, தலைவலி போன்றவற்றை உருவா க்கும். ஆல்கஹால் காரணமாக கணயம் அதிக இன்சுலினை சுரக் கும். இதனால் ரத்த சர்க்கரை அளவு திடீரென குறையும்.

இதனால் தலைவலி, வாந்தி ஏற்படும்.ஆல்கஹால் உட்கொள்வதா ல் ரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இதனால் இதய கோளாறுகள் ஏற்படும்.மேலும் உடல் வெப்பநிலையும் குறையும்.

குடித்த உடன் பேச்சுக்குளறல், தூக்கம், வாந்தி, பேதி, வயிற்றுக் கோளாறு, தலைவலி, சுவாசக் கோளாறு, காது கேளாமை, முடிவெ டுக்க முடியாமை, சுய நினைவை இழத்தல், ரத்த சோ கை உள்ளி ட்டவை ஏற்படும்.

மேலும் அதிக ரத்த அழுத்தம், ஸ் டோக், இருதய கோளாறு, கல் லீரல் பாதிப்பு, நரம்பு கோளாறு, மூளை பாதிப்பு, குடும்ப வன்மு றை, அல்சர், வாய், தொண்டை கேன்சர் உள்ளிட்டவையும் ஏற்ப டும். இவ்வாறு ஆல்கஹால் செய்யும் கெடுதல்கள் பட்டியல் நீளமா னது. ஆனால் நன்மை எதுவுமே இல்லை.

மதுவுக்கு ஏன் ‘மது’ என்று பெயர் வைத்தார்கள்!

மதுவுக்கு ஏன் ‘மது’ என்று பெயர் வைத்தார்களோ?! ஒருவேளை ‘ம’கிழ்ச்சியில் தொடங்கி ‘து’ன்பத்தில் முடிவதால்கூட இருக்கலாம்.

என்னதான் ‘மது உடலுக்கு கேடு விளைவிக்கும் உயிரைப் பறிக்கும்’ என்று மதுக்கடைகள் தொடங்கி சினிமா தியேட்டர் வரை போகிற இடமெல்லாம் எச்சரிக்கை விடுத்தா லும், சிலர் அதையெல்லாம் பொரு ட்படுத்துவதே இல்லை.

மது என்ற விஷயம் குடிப்பவரை மட்டுமல்ல அவரது குடும்பத்தை யும் சேர்த்தே துன்பத்துக்கு ஆளாக் குகிறது.

‘சும்மா ஜாலிக்காக குடிக்கிறேன்’ என்று சொல்பவர்களில் தொடங் கி, ‘விளையாட்டா ஆரம்பிச்சேன். இப்போ விட முடியலை!’ என்று சொல்வர்கள்.

‘இது அழிவை நோக்கிய பயணம்’

மதுவுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டு எடுக்கும் மருத் துவமனையின் குடிநோய் சிறப்பு மருத் துவரிடம் பேசினோம். ” தலைவலி, இரு மல், காய்ச்சல் போன்று குடிப்பழக்கமும் ஒருவகை நோய்.

குடிப்பவர்களை இந்த சமூகம் குடிகாரர் களாகப் பார்க்கிறதே தவிர, நோயாளி யாகப் பார்ப்பதில்லை. மதுவைக் குடித் து, அதற்கு அடிமையாவது ஒருவகை நோய். இந்த நோயானது குடிக்கும் எல் லோருக்குமே வருவது கிடையாது. இந்த நோய்க்கு ஆண், பெண் பாகுபாடு கிடையாது. யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

குடிக்கவே கூடாது என்ற முடிவுக்கு வந்த குடி நோயாளிகள் மரு த்துவர்கள் உதவியுடன், குடியை முழுமையாக நிறுத்தி நிறைவான, சந்தோஷமான எதிர்காலத்தை நிச்சயம் உருவாக்கிக்கொள்ள முடியும். பொதுவாக குடிப்பவர்களை மூன்று வகையாகப் பிரிக்க லாம். அதிகமாகக் குடிப்பவர்கள், எப்போதாவது குடிப்பவர்கள், குடி க்கு அடிமையானவர்கள். இவர்க ளில் அதிகமாக குடிப்பவர்களும், எப்போதாவது குடிப்பவர்களும் குடிநோயால் பாதிக்கப்படுவதில் லை.

அதனால் அவர்கள் எப்போது வே ண்டுமானாலும் குடிக்கும் பழக்கத் தை நினைத்தவுடன் விட்டுவிட முடியும். ஆனால் குடிக்கு அடிமை யாகும் குடிநோயாளிகளால் அப்படிச் சுலபமாக குடிக்கும் பழக்கத் தை விட்டுவிட முடியாது. குடிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம். அது எந்தக் காரணமாக இருந்தாலும் குடிப்பழக்கம் என் பது அழிவை நோக்கியப் பயணம்!” என்று சொன்னார்.

‘ட்ரீட் கலாசாரத்துக்கு பலியான பெண்கள்’

ஆண்களுக்கு இணையாகப் பெ ண்களும் குடிப் பழக்கத்துக்கு அடி மையாகி வருகிறார்கள் என்பது தான் தமிழகத்தின் லேட்டஸ்ட் நி லவரம். இதுபற்றி பெண்கள் சிறப் பு குடி நோய் ஆலோசகரிடம் பேசி னோம்.

”நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவிகிதம் பெண்கள் இன்றைக்கு மதுவுக்கு அடிமையாகியுள்ளனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். இப்படி ஆண்களைப்போல் அதிகமாகப் பெண்களும் இன் றைக்கு மதுவினை நாடிச்செல்ல மிக முக்கியக் காரணமாக அமை வது, ஆண் நபரின் தூண்டுதல் மற்றும் மரபுவழிப் பழக்கம் என்று சொல்கிறார்கள். ஆண்களை விட மதுவுக்கு அடிமையாகும் பெண்களே அதிகப்படியான பிரச் னைகளை சந்திக்க வேண்டியிரு க்கிறது.

குடிக்கும்பெண்கள் எல்லாம் குடி நோய்க்கு அடிமையாவது கிடை யாது. அப்படி அடிமையாகும் பெ ண்கள் அவ்வளவு சீக்கிரம் அதிலிருந்து மீண்டுவருவது கிடையாது. பெண்களில் சிலர் சாதாரணமா கக் குடிக்கத் தொடங்கி குடிநோய் க்கு அடிமையானவர்கள்தான்.

சென்னையைப் பொறுத்தவரை கலாசார மாற்றமும் பெண்கள் குடி ப்பதற்கு ஒரு முக்கியக் காரணமாகியிருக்கிறது. இங்கே குடித்தால் தான் ஸ்டேட்டஸ் என்ற நிலை உருவாகியிருக்கிறது.

முன்பெல்லாம் ஏதாவது விழா என்றால் அங்கே பலவித சாப்பாடு கள் இடம்பெறுவது வழக்கமாக இரு ந்தது. ஆனால், இன்றைக்கு தொட்ட துக்கெல்லாம் ட்ரீட் என்ற கலாசார ம் உருவாகிவிட்டது. பார்ட்டி என்றா லே மது இல்லாமல் இல்லை.

அதிலும் குறிப்பாக இன்றைக்கு ஐ.டி கம்பெனிகளில் பணிபுரிபவர் கள் எதற்கெடுத்தாலும் பார்ட்டி என்கிற வலையில் சிக்கி சீரழிந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட பார்ட்டிகளு க்கு குடிக்கவே மாட்டேன் என்ற சுயகட்டுப்பாட்டுடன் செல்பவர்க ளை க்கூட அங்கிருக்கும் சூழல் மாற்றிவிடுகிறது.

‘எல்லாரும் குடிக்குறாங்க நாம மட்டும் குடிக்காம இருந்தா.. அவ ங்க நம்மை என்ன நினைப்பாங்க?’ என்று தனக்குள்ளே ஒரு கேள் வியை கேட்டுக்கொண்டு அதற்கான சரியான பதிலாகக் குடிப்பதை யே இன்றைய இளைய தலைமு றையில் அதிகமானோர் தேர்வு செய்கிறார்கள்.

சிலரோ, ‘ஒருமுறை குடித்துதா ன் பார்ப்போமே!’ என்று நினை த்து குடிக்கத் தொடங்கி பிறகு அதுவே தொடர்கதையாகி விடு கிறது” என்றவர், குடிக்காமல் இருக்க சில டிப்ஸ்களைக் கொடுத்தார்.

”குடிக்கக் கூடாது என்ற உறுதியுடன் பார்ட்டிக்குப் போகிறவர்கள், போகும் முன்பே வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம். அங் கே உங்களை கிண்டல் அடிப்பார்கள். அதனால் நீங்களே குடிக்க நினைத்தாலும் உங்கள் வயிறு அதை ஏற்றுக்கொள்ளாது.

நண்பர்களின் வற்புறுத்தல்களில் இருந்து தப்பிக்க, பார்ட்டிக்குச் சென்றவுடனே ஒரு கிளாஸ் டிரி ங்க்ஸ் எடுத்து சும்மா கையில் வைத்துக்கொண்டு பார்ட்டியில் அங்கும் இங்கும் சுத்திக்கொண் டு இருந்தாலே போதும். அவர்க ளை யாரும் குடிக்கச் சொல்லி கேட்கவோ, கட்டாயப்படுத்த வோ மாட்டார்கள். குடிக்கவே மாட்டேன் என்று சொல்பவர்க ளை த்தான் குடிக்க வைக்க அதிகம் தூண்டுவார் கள்” என்கிறார்.

விடுபட என்ன வழி?

குடிநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்ற சந்தேகத்துக்கும் அவரே பதில் சொன்னார். ”ஒரு குடி நோயா ளியால் முழுமையாக குடிப்பதை நிறுத்த முடியுமே தவிர, குடிக்கும் அளவைக் குறைக்க முடியாது. அவர் குடிக்கக் காரணம் அவரு டைய நோயே. இதற்கு மனைவியோ, பெற்றோரோ, நண்பர்களோ காரணமில்லை.

வாக்குறுதி கொடுப்பதால் (சத்தியம் செய்வது) யாரும் குடியை நிறுத்திவிட முடியாது. அதெல்லாம் அதிகபட்சம் ஒரு மாதம் நீடிக்கு மே தவிர, குடியை நிறுத்த சாத்தியம் சத்தியத்துக்கு இல்லை. சொல் லப்போனால் இப்படிப்பட்டவர்கள் மறுபடி யும் அளவுக்கு அதிகமா கவே குடிக்க வாய் ப்பு உண்டு.

இப்படி குடிநோயால் பாதிக்கப்பட்டவர் கள் தன்நலன் மற்றும் குடும்ப நலனைக் கருத்தில்கொண்டு, குடியை நிறுத்த சிகிச் சை எடுத்து க்கொள்ள சம்மதித்து முன் வர வேண்டியது அவசியம்.

எப்போதுமே ஒருவரால் அன்பு, அரவணைப்பு, மிரட்டல் அல்லது கண்டிப்பின் மூலமாகக் குடியை நிறுத்திவிட முடியாது.

இவர்கள் குடிநோயிலிருந்து மீண்டுவர மருத்துவ மற்றும் மனோ தத்துவ ரீதியான சிகிச்சை மிக முக்கியம்.

போதையில் இல்லாத சமயமாகப் பார்த்து குடிநோயாளியிடம் பேசி அவரை சிகிச்சைக்கு சம்மதிக்க வைக்க வேண்டும். குடிநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ ம னையிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டும்.

மது மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் கைநடுக்க ம், தூக்கமின்மை, தாங்க முடியாத வயிற்று வலி போன்ற பிரச்னை கள் வரலாம். இதற்குத் தேவையான மருத்துவ உதவிகளையும், சிகி ச்சைகளையும் குடிநோயாளிகளுக்கு முதல் வாரத்தில் அளிப்போ ம். பின்பு மூன்று வாரங்களுக்கு மனோரீதியான சிகிச்சைகள் அளி க்கப்படும். நான்கு வார காலம் இந்த சிகிச்சை தொடரும்.

இந்த காலகட்டத்தில் நேரத்துக்கு உணவு உட்கொள்ளுதல், உடற் பயி ற்சி, விளையாட்டு போன்றவற்றை நோயாளிகளைத் தொடர்ந்து பின் பற்றச் செய்வோம். மேலும், இங்கு சிகிச்சை பெறும் நோயா ளிகளை ஒன்றிணைத்து அவர்கள் எதிர்கொ ண்ட பிரச்னைகளை ஒருவருக்கொ ருவர் குழுவாக அமர்ந்து பேச வைப் போம்.

பெண் நோயாளிகளுக்கு கைவினைப் பொருட்கள் செய்யப் பயிற்சி கள் வழங்குவோம். அடுத்ததாக இங்கு பயிற்சி பெற்று குணமடை ந்து சென்றவர்களை வரவழைத்து அவர்களது முந்தைய நிலை மற்றும் தற்போதைய நிலையை பகிர்ந்துகொள்ளச் செய்வோம்.

நோயாளியின் குடும்ப அங்கத் தினர்களுக்கும் இரண்டு வார ங்கள் கவுன்சிலிங் கொடுப் போம். சிகிச்சை முடிந்து வீட் டுக்குச் சென்றவ ர்களைத் தொடர்ந்து இரண்டு ஆண்டு கள் மாதம் ஒருமுறை வரவ ழைத்து ஆலோசனை வழங்கு வோம். குடிநோய் குணப்படுத் தக் கூடிய நோய் என்பதை உணர்ந்தாலே போதும்!” என்று அக்கறை யோடு சொல்லிமுடித்தார்.

காசுகொடுத்துப் பிரச்னைகளையும், நோய்களையும் வாங்கவேண் டுமாஸ என்பதை பாட்டிலைத் திறக்கும் முன்பு யோசிங்க மக்களே!

உடல் ரீதியாக மனரீதியாக ஒழுக்க ரீதியாக மனிதனிடம் பாதிப்புக ளை ஏற்படுத்தி அவனது வாழ்க்கையை அவனது குடும்பத்தினரின் வாழ்க்கையைச் சீரழித்து, சின் னாபின்னமாக்கக் கூடிய மற் றொருத் தீய பழக்கம் மதுக் குடிப்பழக்கம்.

மது இயற்கையில் உண்டாகிற ஒரு திரவமன்று. அது பதார்த்த ங்கள் கெடுவதால் உண்டாவ தாகும். கோதுமை சோளம் ஒட்ஸ் பார்லி அரிசி திரட்சை போன்றவற்றைலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. திராட்சை ரசத்தைப் புளிக்க வைக்கும் ஈஸ்ட் சத்தானது பழத்திலும் தானியங்களிலுமுள்ள மாவையும் சர்க்கரை யை யும் மதுவாக மாற்றி விடுகிறது.

சண்டை சச்சரவுகள் களவு கொலை கற்பழிப்பு போன்ற எல்லா வித மான கீழ்த்தன்மைச் செயல்களும் குற்றங்களும் மதுவின் தூண்டு தலாலேயே நடைபெறுகின்றன.

நீதிமன்றங்களில் மிகக் கடுமை யான தண்டனை அடைந்தவர்க ளில் பெரும்பாலானோர் இந்த மதுவினால் கீழ்த்தன்மைக்கு உ ள்ளானவர்களே. யுத்தம் பஞ்சம் கொள்ளைநோய் ஆகிய இம்மூ ன்றும் கொண்டுவந்த அழிவை விட மதுபானம் அதிகக்கேடு வி ளைவிக்கக் கூடியது என்று கூ றுவார்கள்.

உடலினுள்ளே தப்பித் தவறி ஊடுருவும் நோய்க் கிருமிகளை அழிக் கும் சக்தி நமது உடலுக்கு இயல்பாகவே உண்டு. நோயை எதிர்க் கும் இந்த ஆற்றலை மது அழித்து விடுகிறது.

இதனால் மது அருந்துபவர் எளிதில் எந்நோய்க்கும் இரையாவார். மது அருந்துபவரின் மனம் அம்மனிதனை எளிதில் ஒரு மிருகமாக்கி விடும். மனிதத் தன்மை அழிந்து மிருக சக்தி ஏற்படுவதால் அவர்க ளுக்கு நல்லது கெட்டது எதுவும் புரியாது.

நாள்தோறும் சிறிது மதுவை க் குடித்து வருபவர் தனக்கு மதுவால் அதிக தீங்கு நேரவில்லை. நேராது என்று எண்ணி தன் னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வார். ஆனால் அவர் தனது ஈரல் மூளை நரம்புகள் சிறுநீரகங்கள் பாலின உறுப்புகள் நுரையீர ல்கள் இரைப் பை இரத்தக் குழாய்கள் ஆகியவற்றின் உட்புறத்தைப் பாதிக்க நேர் ந்தால் இந்த உறுப்புகளெல்லாம் சிறிது சிறிதாகக் கெட்டுவருவதை அறியக் கூடும்.

ஒரு மனிதன் குடிப்பதைப் பொறுத் து குடிக்கப்படும் மதுவில் 20 சத வீதம் உடனடியாக ரத்தத்துடன் கல க்கிறது. குடிக்கப் பட்ட மது முழுவ தையும் கல்லீரல் எரிக்கும் வரை அது மூளை முதலான உடல் உறுப் புகளில் பரவுகிறது. இதைத் தொடர் ந்து இரத்தத்தில் கல ந்து ஆல்க ஹாலின் அளவைப் பொறுத்து வி ளைவுகள் எற்பட்டு விடு கின்றன .

மதுவின் ஆக்கரமிப்பால் உடல் நரம்புகளும் பாதிப்படையும். பார் வை நரம்புகள் பாதிக்கப்படும் கைகால் நரம்புகள் தாக்குதலுக்குள் ளாகும். குடலின் புண் ஏற்பட்டு இரைப்பை அழற்சி நேரும். குடல் கல்லீரல் செல்கள் சேதப்படும். உடலின் ஒவ்வோர் உறுப்பிலும் பாதிப்பின் சுவடுகள் அதிகமாகும்.

பொழுதுபோக்காக ஆரம்பிக்கப்ப டும் மதுப்பழக்கம் பின்எந்நேரமும் மதுவைப்பற்றி நினைவுடனேயே இருக்க வைத்துவிடும். குடிக்கும் அளவு எல்லை மீறிப்போகும்.

குடிக்கு அடிமையான பின் நரம்புத் தளர்ச்சியால் கைகால்கள் நடுங்கு ம். நடுங்கும் அறிகுறிகளைத் தவிர் க்க மேலும் குடிப்பார் கள். மதுவை வாங்கி வீட்டில் வைத்துக் கொ ண்டு குடிக்க ஆரம்பிப் பார்கள். பின் வெளிப்படையாகத் தெரிய ஆர ம்பித்து சுயக் கட்டுப் பாடு மீறிப் போய்விட்டால் குடிப்பதற்காகப் பல வித காரணங்களை க் கூறுவார்கள். அந்த காரணங்களை நியாயப்படுத்துவார்கள. சொ ல்லியும் கேட்காமல் குடித்ததற்கு மன்னிப்புகளை அள்ளி விடுவார் கள்.

குழந்தை இல்லையென்ற கவலை யை மறக்கச் சில ஆண்கள் மது அரு ந்துவதும் உண்டு. குழந்தை இல்லா மைக்காக அவரின் மனை வியும் மது அருந்த ஆரம்பித்தால் சமுதாய ம் என்னாவது ?

நட்புக்காகக் குடிப்பதற்கும் அடிமை யாவதற்கும் இடையேயான நூலி ழை போன்ற அளவுக்கோட்டை எப் போது நாம் தாண்டினோம் என்ப தைப் பல குடிகாரர்கள் அறிய நி னைத்தும் முடிவதில்லை. தங்கள் வா ழ்க்கையை மெல்ல மெல்ல அது அழித்துக் கொண்டு வருகிறது. என்று அவர்கள் உணர்ந்த நிலையிலும்கூட அப்பழக்க த்தை அவர் களால் கைவிட முடியாது.

மது அருந்துவது உடல் நலத்தை மட்டுமின்றி மன நலத்தையும் அதிக அளவில் பாதிக்கும். அளவுக்கு மீறி மது குடிப்பது. மது குடிப் பது பற்றியே நெடுநேரம் சிந்தித்து க் கொண்டிருப்பது. குடிக்காமல் நிறுத்திய உடனே உடலளவிலும் மனத்தளவிலும் பதற்றம். நடுக்க ம் ஏற்படுவது போன்றவை ஒரு வன் மதுப் பழக்கத்திலிருந்து குடி நோயாளியாகவே மாறிவிட்டதை உணர்த்தும்.

மெல்ல மெல்லக் காரணமற்ற பயம் தன்னைப் பற்றியும் தன் குடும்ப ம் பற்றியும் அவநம்பிக்கையான எண்ணங்கள் வெறித்தனம் தாம்பத் ய உறவில் பிரச்னைகள் மூளையின் செயல்திறன் மங்கிப்போதல் முக்கியமாக நினைவாற்றல் இழக்கும் நிலை மது குடிக்கவில்லை என்றால் ஒருவித மனப்ழீர மை அதிம்சி நடுக்கம் எரிச் சல் போன்ற மனநலக் குறை பாடுகள் தோன்றும்.

இது முற்றிய நிலையில் குடு ம்பத்தினர் நண்பர்கள் சக ஊழியர்கள் போன்றோரின் தொடர்பும் உறவும் துண்டிக்கப் படுவதுடன் உடல் ரீதியாக வேறு பாதிப்புகளும் அதிகமாகி விடும். ஒரு கட்டத்தில் அந்த வகை மது வை எவ்வளவுதான் குடித்தாலும் போதை ஏறாத தால் அதிலும் மட் டமான ஆனால் மேலும் போதை தரக்கூடிய சாரா யம் போன்ற வற்றைக் குடிக்க ஆரம்பிப்பர்.

குறைந்த செலவில் அதிகபோதை நாடி கள்ளச் சாராயம் குடித்து கண் இழந்து உறுப்புகள் செயலிழ ந்து எத்தனை குடும்பங்கள் தவித் து நிற்கின்றன என்பதைத்தான் நாம் அவ்வப்பொழுது பத்திரிகை களில் பார்க்கிறோமே? அதைத் குடித்தும் மரத்துப் போய் போதை யின் அளவு குறையக் குறைய தூக்க மாத்திரைகளை சிலர் பயன்ப டுத்த ஆரம்பிப்பர்.

பின்னர் தூக்க மாத்திரைகளை அதிகம் போட்டும் அவற்றாலும் பயனின்றிப் போக அடுத்த கட்டமாக போதையை இன்னும் அதிகம் நாடி போதை மருந்துகளை ருசி பார்க்க முயலுவர்.

இவ்விதம் குடிகாரனின் போதை உணர்வு அதிகமாகிக் கொண்டே போய் ஒரு வெறியாய் மாறி விடும். கடைசியில் கோமா என்னும் நிலைக்குப் போய் விடுவோரும் உண்டு.

உலகில் மதுவால் அழிவுள்ள மனிதர்கள் குடும்பங்களின் எ ண்ணிக் கை கணக்கில் அடங் காது. நன்றாக வாழ வேண்டும் மதிப்பு மிக்கவ ர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணமுடைய வர்கள் கண்டிப்பாக மதுவைத் தொடக் கூடாது.

மனம் கட்டுப்பாடாக இருந்தால் சூழ்நிலை படு மோசமானதாக இரு ந்தாலும் மனக் கட்டுப்பாடு கொண்டவர்களை யாராலும் குடிகார னாக்க முடியாது. குடிகாரர்கள் மத்தியிலும் கூட ஒழுக்கத்தில் உயர்தவராகளாகவே வாழலாம். எனவே மனக் கட்டுப்பாட்டுடன் மதுவை வெறுப்போம்.

உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும்

இன்றைய இளைஞர் யுவதிகள் மத்தியில் மது அருந்துதல், புகைத் தல் ஆகியன ஒரு பஷனாக மாறிவிட்ட நிலையில் விருந்து பசாரம் போன்ற களியாட்ட நிகழ்வுகளில் மதுபான வகைகளுக்கு முக்கி யத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன.

ஏதாவது கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு வருமாறு இளைஞர்களுக் கு அழைப்பு விடுத்தால் வைன், பியர், பிஸ்கி, பிறண்டி வழங்கப்படு கின்றனவா என்று கேட்டுக் கொண்டே மேற்படி கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு பலர் ஒன்றுகூடும் களியாட்ட நிகழ்வுகளில் மது அருந்து தல் என்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது என்பதுடன், மது அருந் தாது விடுபவர்களை பட்டிக்காடு என்று நோக்கும் நிலையும் வந்து விட்டது.

ஆனால், இவற்றால் எமது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப் புக்களை எவரும் சிந்தித்துப் பார்பது மில்லை. அவ்வாறு சிந்திப் பவர்களின் புத்தியையும் மது என்ற பானம் மயக்கி விடும்.

மது அருந்துதல், புகைத்த ல் மற்றும் வெற்றிலையுடன் பாக்கு, சுண் ணாம்பு சேர்த்து உ ணு தல் இந்த மூன்றும் எமது உடலுக்கு பாதக மானவையாகும்.

அளவுக்கதிகமான மதுபான வகைகளைப் பாவிப்பவர்களுக்கு நரம்புத்தளர்ச்சி, பாலியல்க்குறைபாடு, ஈரல் கரைதல் போன்ற நோ ய்களும் புகைப்பவர்களுக்கு சுவாசப் புற்றுநோய், நரம்புத்தளர்ச்சி, பாலியல்க்குறைபாடு போன்ற நோய்களும் வெற்றிலையுடன் பாக் கு, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடுபவர்களுக்கு வாய்ப்புற்று நோயும் ஏற்படுகின்றன.

இது தவிர, ஒருவர் புகைப்பிடிக்கும்போது அருகிலுள்ளவர்களும் தன்னிச்சையாக புகைப்பிடிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு தன்னிச் சையாக புகைப்பிடிப்பதற்கு பெ ண்களும் விதிவிலக்கல்ல என்பதுடன், பெண்கள் தன்னிச்சை புகைத்தலுக்கு ஆ ளாகுவதால் அவர்களது சந்ததியினருக் கே ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்ப டுகிறது.

எமது நாட்டு அரசாங்கம் மது மற்றும் புகைத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படு த்துவதற்காக “மத்தட திட்ட” என்னும் மது வுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி ஓரளவு வெற்றி கண்டது.

தற்போது மதுபாவனையால் ஏற்படும் நோய்களுக்கு 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து அரசாங்க வைத்திய சாலைகளில் இலவச சிகிச்சை வழங்கப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்து ள்ளது. எனினும், அரசாங்கத்தின் இந்த நடமுறையானது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பதும் கேள்விக்குறியே.

பெருங்குடி மக்களுக்கு ஏற்படும் அபாயங்கள்

இன்றைய காலத்தில் மார்டன் என்ற பெயரில் மது அருந்துபவ ர்ககளின் எண்ணிக்கை அதிக மாக உள்ளது. இதுவரை ஆண்கள் தான் அதிகளவில் மது அருந்திக் கொண்டிருந்தனர். தற்போது பெண்களு ம் குடிக்க ஆரம்பித் துவிட்டனர்.

சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களே அதிகம் குடிக்கின் றனர். அத்தகையவர்களிடம் மது அருந்துவீர்களா என்று கேட்டால், அவர்கள் இல்லை, அது ஃபேஷன் நான் அவ்வளவாக அருந்தமா ட்டேன் என்று சொல்வார்கள்.

ஆனால் என்ன தான் ஃபேஷனாக இருந்தாலு ம். அவற்றை குடிப்ப தால், உடலில் ஏற்படும் நோய்களின் எண்ணிக் கையைச் சொன்னா ல், நம்பவேமாட்டீர்கள். அந்த அளவு நோயா னது ஏற்படும். இந்த பழ க்கத்தை உடனே நிறு த்த முடியாது. ஆனால் வயதுக்கு ஏற்றவாறு குறைத்துக் கொண்டு வந்தால், நல்லது.

ஒருவேளை அவ்வாறு செய்யாவிட்டால்,பின் மது அதன் உண்மை யான சுயரூபத்தை வெ ளிக்காட்டும். அதாவது உயர் இரத்த அழுத்த ம், இதயநோய் போன்றவை உடலில் ஏற்படும்.

அதுவும் குறைந்த வயதிலேயே அளவுக்கு அதிகமான அளவில் ஆல் கஹால் பருகினால், அவை இளம் வயதிலேயே உடலில் நோய் களை அதிகமாக்கிவிடும். உண்மையில் நிறைய நோய்கள் ஆல் கஹால் பருகுவதால், ஏற்படுகிறது.

இப்போது அவ்வாறு மது பருகுபவ ர்களின் உடலில் சாதாரணமாக எந்த நோய்கள் வரும் என்பதை பட் டியலிட்டுள்ளோம். அதைப் படி த்து தெரிந்து கொள்ளுங்கள்.

கல்லீரல் இழைநார் வளர்ச்சி:

இந்த நோய் குடிப்பழக்கம் உள்ளவர் களுக்கு ஏற்படும். இந்த நோயா ல் கல்லீரலில் உள்ள செல்களில் டாக்ஸின்கள் தங்கி, அந்த செல்க ளை அழிக்கும். இவை தொட ர்ந்தால், இறுதியில் கல்லீரலின் செயல் பாடு முற்றிலும் குறைந்து, இறப்பு ஏற்படும்.

அதிக இரத்த அழுத்தம்:

பொதுவாக மதுபானங்கள் பருகினால், இரத்த அழுத்தம் அதிகரிக் கும். அவையே அளவுக்கு அதிகமானால், இரத்த அழுத்தமானது உட னே அதிகரித்து, பின் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்

அதிக எடை:

வோட்கா, பீர் மற்றும் ஜின் போன்றவற் றில் கொழுப்புகள் அதிகம் உள்ளன. பொதுவாக இவற்றை இந்த ஆல்கஹாலில் உணவுகளை விட, அதிகமான அளவில் கலோரிக ள் இருக்கும். எனவே இதனை பருகினால், உடல் எடை அளவுக்கு அ திகமாக அதிகரித்துவிடும். பின் உடல் பாதிப்பின் ஆரம்ப நிலையா ன தொப்பை வந்து, பின் பல்வேறு கொடிய நோய்களும் உடலில் வந்துவிடும்.

தய நோய்:

இரத்த அழுத்தம் உடலில் அதிகரித்தால், இவை இதயத்திற்கு அழுத் தத்தை கொடுத் துவிடும். பின் மாரடைப்பு ஏற்படும். அது மட்டுமின்றி, ஆல்கஹால், இரத்தத்தை உறைய வைத்து, இதயத்திற்கு போதிய இரத்த ஓட்டத்தையும் தடுத்துவிடும்.

அனீமியா:

அனீமியா எனப்படும் இரத்தக்குறைவு, ஆல்கஹால் பருகுவதால், ஏற்படும். ஏனெனில் ஆல்கஹால் பருகும் போது, ஆக்ஸிஜனை எடு த்துச் செல்லும் கொள்ளவானது குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் குறைந்துவிடும். இதனால் எந்த வேலை செய்யாமல் இருக்கும்போ தும், அதிகமான சோர்வு ஏற்பட்டு, மூச்சுவிடுவதே கஷ்டமாக இரு க்கும்.

மன அழுத்தம்:

மன அழுத்தம் குறைய வேண்டும் என்பதற்காக ஆல்கஹால் பருகுவா ர்கள். ஆனால் உண்மையில் ஆல்க ஹால் பருகினால், தான் விரைவில் மன அழுத்தம் மற்றும் மன இறுக் கம் ஏற்படும்.

மூட்டு வலி:

மூட்டுகளில் யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால், மூட்டு வலியானது ஏற் படுகிறது. அதிலும் ஆல்கஹால் அதிகமாக பருகினால், மூட்டுக ளில் இன்னும் அதிகமான வலி ஏற்படும்.

கணைய பாதிப்பு:

மது அருந்தினால், கணையத்தில் காயங்கள் ஏற்பட்டு, சாதாரணமா க நடைபெறும் செரிமானத்தையும் பாதிக்கும். இத்தகைய பிரச்ச னை ஏற்பட்டால், அது குணமாவது மிகவும் கடினம். இதனால் இறப் பு கூட ஏற்படலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍1

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: