Saturday, May 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மங்கையரின் மார்பகங்கள் – சில முன்னெச்சரிக்கைத் தகவல்கள்

மங்கையரின் மார்பகங்கள் – விரிவான அலசல்

டீன் ஏஜில் பிரா தேர்ந்தெடுக்கும்போது ‘கிச்’ சென்று இறுகப் பிடிக்கும் சைஸாக இருக் கக் கூடாது. மார்பகம் பெரிதாக வளரும் வயது என்பதால், பிராவின் அளவுக்கு அடங் காத பகுதி, பிதுங்கியது போன்ற நிரந்தர ஷேப்புக்கு உள்ளாகிவிடும். அந்தந்த வயதி ல் மாறும் மார்பக அளவுக்கு ஏற்ப, பிரா சைஸை மாற்றிக் கொண்டே இருக்கவேண் டும்.

கனமான மார்புள்ளவர்களுக்கு வெயிட்டில் மார்பகம் சீக்கிரமே தழைய வாய்ப்புள்ளது. சரியான

பிரா போடாவிட்டால் இந்தத் தொல்லை இன்னும் அதிகம். இவர்கள் போடும் பிரா கனமான மார்பகங்களை கொஞ்சம் தூக் கித் தரும்படியும், சரியாகப் பொருந்தும் படி கொஞ்சம் டைட்டாகவும் இருக்க வேண்டும்.

கனமான மார்புள்ளவர்கள் இரவில் கண் டிப்பாக பிராவைக் கழட்டக் கூடாது. மற் றவர்கள், அதிக டைட் இல்லாத பிரா போ ட்டுக் கொள்ளலாம். கழட்டி விட்டும் படுக் கலாம்.

பெண்களின் உடல், கர்ப்பகாலத்தில், குழ ந்தைக்குப் பால் கொடுப்பதற்காக தயாராகும். அதனால் அந்த நேர த்தில் மார்பகம் அளவிலும், வடி வத்திலும் வழக்கத்தைவிட பெரி தாகமாறும். ஆகவே பிரா சைஸை மாற்றி, இறுகப் பிடிக்கா தபடி போடுங்கள். முக்கியமாக நிப்பிளைச் சுற்றியுள்ள கறுப்பு நிறம் இன்னும் அதிகமாகும். ஆ னால் அதற்காக பயப்படத் தேவை யில்லை. இது நார்மல்தான்.

கர்ப்பத்தின்போது மார்பகம் சைஸில் பெரிதாவதால் அதில் கோடு கள் விழ வாய்ப்புண்டு. அதனால் கர்ப்ப காலத்தில் விட்டமின் ‘ஈ’ க்ரீம் தடவிக் கொள்ளுங்கள். சிலருக்கு நிப்பிளின் முனை நீளமாக இருக்காது. இது பால் குடிக்கும்போது குழந்தைக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம். அதனால் முன்னெச்சரிக் கையாக கர்ப்பத்தின் ஏழாம் மாதத்திலிரு ந்து குளிக்கும்போது மார்பு முனைகளை லேசாக இழுத்துவிட வேண்டும். இதனால் பலன் இல்லை யென்றால் டாக்டரிடம் காட்டுங்கள்.

பால் கொடுக்கும் முன்னும், கொடுத்த பிற கும் நிப்பிளைச்சுற்றி, தண்ணீரில்போட்டு கொதிக்க வைத்த பஞ்சை வைத்து சுத்தம் செய்ய வேண்டும். இதனால் பால் குடிக்கும் குழந்தைக்கு இன்ஃபெக் சன் வருவது தடுக்கப்படும்.

மெனோபாஸ் வரும் நேரத்தில் மார்பகத்தின் அளவில் மாறுதல் ஏற்படும். மார்பகத்தில் உள்ள கொ ழுப்பு டிஷ்யூ, அக்குள் பகுதியில் போய் சேரும். இதனால் இந்த வய துப் பெண்களுக்கு பிளவுஸ், கை பக்கத்தில் மட்டும் பிடிப்பாகிவிடு ம். இதைத்தடுக்க வெயிட்டைக் குறைக்க வேண்டும். டாக்டரிடம் காட்டி, அவர்சொல்லும் எக்சர்சைஸைவிடாமல் செய்யவேண்டும்.

மெனோபாஸ் தாண்டியவயதில் சில பெ ண்களுக்கு மார்பகத்தின் அளவு குறைந்து ஃபிளாட்டாகவும் மாறி விடலாம். இந்த நிலைக்கு ஒன்றும் செய்ய முடியாது. இத ற்குத் தகுந்த அளவு பிராவை கச்சிதமாக தேர்ந்தெடுத்து போட்டுக் கொள்ளுங்கள்.

மெனோபாஸ் முடிந்தபின் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ அவ சியம் மார்பகத்தை செல்ஃப்டெஸ்ட் செய் து பார்த்துக் கொள்வதோடு டாக்டரிடம் மார்பகப் புற்று நோய்க்கா ன ‘மேமோகி ராம்’ டெஸ்டும் செய்து பாரு ங்கள்.

ஏதாவது சில காரணங்களால் மார்பகத் தில் சிறிய காயங்கள் ஏற்பட்டால் உடனடி யாக கேர் எடுத்து ஆன்டிசெப்டிக் க்ரீம் பூசுங்கள். தேங்காய் எண்ணெய்கூட பூச லாம். காயத்தின் அளவு பெரிதாக இருந் தால் கட்டாயம் டாக்டரிடம் போக வேண் டும். ஏனென்றால் மார்பகம் மிகவும் சென் ஸிட்டிவான உறுப்பு. உடனடியாக இன்ஃ பெக்சன் ஏற்பட்டுவிட வாய்ப்புண்டு.

சில பெண்களுக்கு மார்பகத்தில் அங்கங்கே முடிகூட இருக்கும். சிலருக்கு இது பரம்பரை காரணமா க இருக்கலாம். வயதுக்கு வந்த டீன் ஏஜ் பெண்களுக்கும், திருமணமாகி குழந்தை இல்லாத பெண்களுக்கு ம், மாதவிடாய் சுற்று சரிவர வராத பெண்களுக்கும், இப்படி அதிகம் இ ருக்க வாய்ப்பு உண்டு. இதற்கு டாக் டரிடம் காட்டி முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பீரியட் நேரத்தில், பொதுவாக ஒரு வாரம் பத்து நாட்களுக்கு முன்னரே மார்பகத்தி ல் வலி வருவது சாதாரணமான ஒன்றுதா ன். ஹார்மோன் சுரப்பிகளின் மாறுதல்க ளால் இப்படி ஏற்படுகிறது. ஸோ, பயப்பட த் தேவையில்லை.

குழந்தை பெற்றெடுத்த நிலையில் மட்டும ல்லாமல், சும்மாவே கூட சிலருக்கு நிப்பி ளில் திரவக் கசிவு இருக்கும். பிராவிலும் நீர்க் கசிவின் அடையாளம் தெரியும். இது போல இருந்தால் உடனடியாக டாக்டரிட ம் போக வேண்டும். பின்னாளில் இது கேன்சருக்கு கூட வழி வகுக்கும்.

மார்பகமோ அதன் நுனிப்பகுதியோ வழக் கத்துக்கு மாறாக தங்கள் அமைப்பிலோ, நிறத்திலோ மாறுபட்டிரு ந்தாலோ, மினுமினுப்பு மற்றும் வீக்கமா க இருந்தாலோ, மார்பகத் தில் அசௌகரி யமோ வலியோ ஏற்பட்டாலோ, நிப்பிளி ல் திரவக் கசிவு இருந்தாலோ, பெண்கள், தங்களது மார்பகத்தை தாங்களே டெஸ்ட்  செய்து பாருங்கள்.

பொதுவாக பீரியட்ஸ் முடிந்தபிறகு இந்த டெஸ்ட் செய்து பார்ப்பது நல்லது. கண் ணாடியின் முன் நின்று கையைத் தலை க்கு மேலே தூக்கிக் கொண்டு உள்ளங் கையை மார்பகங்களின் மீது வைத்து வட்ட வடிவில் தடவுங்கள்.

கையில் உருண்டையாக ஏதாவது தட்டுப் பட்டால் பயந்துவிடாதீர்கள். அது கேன்சர் கட்டியாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. இ ப்படித் தென்படும் உருண் டைகளில்,பத்துக்கு 9 ஒரு வேளை அவை ஆபத்தில் லாத டியூமராகவோ, அ டைத்துக் கொண்டிருக்கு ம் தாய்ப் பால் கட்டியாக வோ அல்லது நீர்க்கட்டிக ளாகவோ கூட இருக்க லாம். நீர்க்கட்டி எனில் சுலபமான அறுவைசிகிச் சைமூலமே எளிதில் நீக்கி விடலாம். ஆனாலும் அவை ஆபத்தில்லாத கட்டியா என்று தெரிந்து கொள்ள ‘மேமோகிராம்’ டெஸ்ட் செய்யவேண்டும்! கான்ஸருக்கா ன வீக்கம் எனில் சற்றே கடின மாக கையில் தென் படும். ஆனா ல், இந்த வீக்கங்களில் வலி இரு க்காது. இப்படி ஏதாவது நீங்கள் டெஸ்ட் செய்யும்போது தென்பட் டால் எந்த வயதினராக இருந்தா லும் உடனடியாக டாக்டரிடம் போக வேண்டும்.

சிலருக்குத் திடீரென்று மார்பகம், அதிக கனமாகவும், வலியுடனும் மாறும். இதை இன்ஃபெக்சன் என் று கருதி சில டாக்டர்கள் ஆன்டி பயாட்டிக்குகளைத் தருகிறார்க ள். ஆனால் கொழுப்புச் சத்து, பால் பொருள்கள் மற்றும் காபி, டீ போன்றவற்றை குறைத்தாலே சிலருக்கு இந்த வலி சரியாக லாம்!

மனித உடலின் ஜீன் றி53 ல் இருக்கும் தவறுகளால்கூட கேன்சர் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதோடு புகைப்பிடிக்கும் பழக்கம், வைரஸ் இவைகள் மட்டுமல்லாம ல் தவறான உணவுப் பழக்கங்கள் கூட கேன்சர் வர அதிக அளவு வாய்ப்பாகின்றன.

மார்பகத்தில் அறுவை சிகிச்சை என்றால் மார்பகம் முழுவதையும் நீக்குவது என்று அர்த்தமில்லை. இப்போதெல்லாம் லேசர் ட்ரீட்மெ ண்ட்டும், கீமோதெரபி சிகிச்சை யும் மிகவும் சர்வ சாதாரணமாகி விட்டன. அப்படியே மார்பகம் முழுமையும் நீக்கப் பட்டாலும் கூட உங்கள் நார்மல் வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படப் போவதில்லை. பொதுவாக கை களின் அடிபாகத்தில்தான் அறு வை சிகிச்சைகள் நடக்கும். ஏ னெனில் அங்குதான் கேன்சர் கட்டிகள் சுலபமாக பரவிவிடக் கூடிய வாய்ப்பு அதிகம்.

பெரிய மார்பகங்கள் இருப்பதுதான் மிக வும் பெருமை என்று உலகம் முழுவதி லும் பல பெண்கள் ஆசைப்படுகிறார்கள். இதனால், இதற்காக செயற்கை மார்பகம் பொருத்திக் கொள்வது அதிகமாகி வருகி றது. ஆனால் இப்படி செயற்கை முறையி ல் பெரிதாக்கப்படும் மார்பகங்களால் அழகு கூடினாலும், தொல்லைகள் ஏற்ப டவும் வாய்ப்பு அதிகம் உண்டு.

கான்சர்போலவே பயமுறுத்தக் கூடிய ஒரு விஷயம், ‘‘காஸ்டோகான்டிரிட்டிஸ் ’’. மார்பகத்தில் கட்டிபோல தென்பட்டு வலி அதிகமாக இருக்கும். இதற்கு லோக் கல் அனஸ்தீசியா கொடுத்து, ஸ்டீராய்ட் ஊசி போட்டாலே வலி சரியாகிவிடும்.

நன்றி – குமுதம்

Leave a Reply