Wednesday, December 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மனநோய்க்கு உகந்த‌ மருத்துவச் சிகிச்சை குறித்து சுவாமி சின்மயானந்தா

மனநோய்க்கு உகந்த‌ மருத்துவச் சிகிச்சை குறித்து சுவாமி சின்மயா னந்தா

உடம்புக்கு நோய் வந்தால் மருந்து மாத்திரைகளைக் கொடுத்து தீர்த் துக் கொள்ளலாம். ஆனால், மனசு க்கு நோய் வந்தால் என்ன செய்வது? அதற்கும் அற்புதமான

மருந்து உண்டு என்கிறார் சுவாமி சின்மயானந்தா.

முதலில் மனநோய் வந்ததற்கான காரணம் என்னவா க இருக்கும் என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். அகங்காரம் என்ற விஷக்கிருமிதான் பெரும்பாலான, மாசுபட்ட மனங்களுக்குக் காரணமாக அமைகிறது. இந்த அகங்காரம் மனசின் மீது மட்டுமில்லாமல், அறி வு, ஆரோக்கியத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தி உடல் நலத்தையும் கெடுக்கிறது. இந்தக் கிருமியை அழிக்க மனசை மாசு என்னும் பிணியிலிருந்து காக்க வைத்தியம் உண்டு. அருமையான மருந்தும் உண்டு. என்ன மருந்து அது?

விசுவாசம்-11 கிராம், ஒழுங்கு-10 கிரா ம், நேர்மை- 8 கிராம், உறுதி – 9 கிராம், முயற்சி -7 கிராம், அன்பு உதவும் மனப் பாங்கு- 6 மி.லிட்டர், சுத்தம்-3 மி.லிட்டர் என்ற அளவில் இந்த குணாதிசய மருந்துகளை அறிவு என்னும் பா ட்டிலில் போட்டு ஒன்றாகக் குலுக்கு ங்கள். இந்த மருந்தை உட்கொண்டபிறகு மன அட க்கம் என்ற மூடியைப்போட்டு, பாட்டிலை இறுக மூடிவிடுங்கள். இதனுடன் வேறு சில குறிப்புகளையும் நீங்கள் தவறாமல் பின்ப ற்ற வேண்டும்.

*‘அவதூறு’ வம்பைச் சிறிதும் ருசிக்க விரு ம்பாதீர்கள். அந்த ஆசை வரும் போது ‘ஓம்’ என்ற ஜபத்தை அதிகமாக ப் பருகுங்கள்.

*மிருகஇச்சை, காம உணர்வுபோன்ற பாதைகளில் செல்லாதீர்கள்.

* தியானத்தில் ஓய்வெடுங்கள். ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளுங்கள்.

* தினமும் ஒரு வேளை ‘உபநிஷத்’ என்னும் ‘சூப்’ பைப் பருகுங்கள்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு நாளும் மூன்று மு றை இரண்டு பத்தி ‘பகவத் கீதை’ யைப்பருகுங்கள். தொடர்ந்து 3 மாதங்களுக்கு இந்த மருந்தை உட்கொள்ள வேண்டும். அப்புற மும் மனநோய் அறிகுறி தொடர் ந்து இருக்குமானால் இந்த மருந் தைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும் – என்று மனநோய்க்கு இந்த மருத்துவச் சிகிச்சையை அளித்தவர்- சுவாமி சின்மயானந்தா அவர்களே!

=>=>திருமதி ஆர். சந்திரிகா

Leave a Reply