Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆட்சியாளர்களுக்கு அடிபணியாத ஆட்சியர் 'சகாயம்' ஐ.ஏ.எஸ்.!- (’லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து’ )

ஆட்சியாளர்களுக்கு அடிபணியாத ஆட்சியர் திரு. சகாயம் ஐ.ஏ.எஸ்.! – (’லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து’ )

புதிதாக மடத்தில் சேர்ந்தவர்கள் துறவியிடம், ‘எந்த பிரச்சனை இல்லாமலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றீர்கள். பொதுமக்கள் உங்களைப் பார்த்து எப்படியெல்லாம் மரியாதை செலுத்துகிறார் கள்? எனவே தங்களைப் போல் நாங்களும் துறவியாக

மாறுவதற்கு என்ன வழி?’ என்று கேட்டார்களாம்.

துறவியோ ‘நீங்கள் மடத்தில் சேருவதற்கு என்ன காரணம்’ என்று கேட்டாராம்.

முதலாமன் ‘இல்லறத்தில் பிரச் சனை; அதனால் ஓடி வந்து விட் டேன்’ என்று சொன்னானாம்.

இரண்டாமவன் ‘கடன் தொல் லை; தப்பிக்கவே இங்கே வந்து சேர்ந்துள்ளேன்’.

மூன்றாமவன் ‘வியாதியால் அவதிப்படுகிறேன்; செலவு செய்து வைத்தியம் பார்க்க முடியவில்லை. தங்க ளிடத்தில் சேர்ந்தால் இல வச வைத்தியம் செய்து கொண்டு சௌகரியமாக காலத்தை கடத்த லாம்’.

இவர்களிடத்தே துறவி சொன்னாராம்: ‘உங் களது தற்போதைய நிலைமை மாறினால், நீங்கள் மூவருமே துறவறத்தில் நிலைத்து இருக்க மாட்டீர்கள். எந்த பிரச்சனையும் இ ல்லாதவன் மட்டுமே துறவியாக மாற முடியு ம்; எனவே நீங்கள் யாருமே துறவியாக வாய் ப்பில்லை’.

அரசாங்க பணி, பொதுச் சேவை செய்பவர்கள் எப்படி இருக்க வேண் டும்? ‘கதி இழக்கினும் கட்டுரை இழக்கிலோ ம்’ என்று நம் முன்னே நிற்கிறார் திரு.சகாயம் இ.ஆ.ப. அவர்கள். இவரின் பணி நேர்மை, ஊழலுக்கு எதிரான போராட்டங்கள், தாய் மொழிப்பற்று– இவைகளை நாம் அறிவோம்.

தர்மபுரியில் பயிற்சி ஆட்சியர், நீலகிரி மாவ ட்டம், கூடலூரில், கோட்டவளர்ச்சி அதிகாரி, திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது), கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி, காஞ்சிபுரம் கோட்ட வளர்ச்சிஅதிகாரி, திருச்சி உணவுப் பொருள் வழங்கல் துறையின் முதுநிலை மண்டல மேலாளர், கோவை ஆயப்பிரிவு துணை ஆணையாளர்சென்னை, மாவட்ட வருவாய் அதிகாரி, தொழில் வ ணிகத்துறை இணை இயக்குனர், மாநிலத்தேர்தல் ஆணையச் செய லர், நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர் என தமது 23 ஆண்டு கால அரசாங்கச் சேவையில் 24 முறை பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்க ரை ஆலையில் பணியில் சேர்ந்த பொழுது, ஆலையின் உற்பத்தி திறன் 60%-க்கும் குறைவே. இவரது முயற்சியில் உற்பத்தி 110% ஆக வும், ஆலையைச் சுற்றி மரங்களை நட்டு கானகமும் உருவாக்கி னார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பே ற்ற உடன் தனது சொத்துக்கணக்கை வெளி யிட்டார். ஒவ்வொரு அரசுப் பணியாளரும் தனது சொத்துக்களை அரசுக்குத் தெரிவிக் க வேண்டும், நான் அதையும் தாண்டி எனது சொத்து விபரத்தை மக்களுக்கும் சேர்த்து தெரியப்படுத்தியுள்ளேன் என்றார். இவர் மா வட்ட ஆட்சியாளராக செயலாற்றிய போது இவர் செய்த மக்கள் பணிகளை கோடிட்டு காட்ட இயலாது. உழவர் சந்தை போன்று உழவர் உணவகம் அமைத்து உடல் நலத்திற்கு ஏற்ற நமது தமிழ் பாரம்பரிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தி உழவர்களின் வயிற்றில் பால் வார்த்தார்.

மதுரைமாவட்டத்தில்இவர்பணியாற்றியபோது பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கிரானைட் கற்க ளைக் காப்பாற்றி பலம் வாய்ந்த தொழிலதிபரின் கோபத்திற்கு ஆளானார். தமிழர் பெருமை கூறும் பல மலைகளை கொள்ளையடித்தவன் அந்த கயவாளி, ஆனால் தனது செல்வாக்கினால் அந்த வழக்கிலிருந்து தப்பித்து மீதமிருக்கும் மலைக ளையும் அழிக்க முயலுவான். அரசியல்வாதிக ளால் அங்கிருந்து தூக்கியடிக்கப்பட்டு கைத்தறி கூட்டுறவுநிறுவனத்தின்இயக்குனரானார்.

திரு.சகாயம் 13 ஆண்டுகளாக நலிவடைந்த (=ஊழல்) நிர்வாகத்தை சீர்செய்து வருமானம் ஈட்டக்கூடியதாக மாற்றினார் என்பது அனை வரும் அறிந்ததே. ஆடைகளி ல் நவீன வடிவமைப்புகளை கணிணி மூலம் உருவாக்க கட்டமைப்பை உருவாக்கிய து, நெசவாளர்களின் திறமை களை ஊக்குவித்தது, பட்டுச் சேலை கனவுத் திட்டம் போ ன்ற முன்னேற்றத் திட்டங்களை திரு. சகாயம் அவர்கள் கொண்டு வந்தார்.

இவரின்  தற்போதைய பணி மாற்றத்திற் கான காரணங்கள்:

திருமண உதவி திட்டத்தில் வழங்கப்படும் தொகையில் பயனாளி ஒருவருக்கு ரூ 5000/-க்கு கோ-ஆப்-டெக்ஸ்-இல் பட்டுப் புடவை வாங்கிக் கொள்ள செல்லுபடியாகு ம் படிவங்களை வழங்கும்படி கேட்டுக் கொ ண்டார். இதன் மூலம் ஆண்டிற்கு ரூ 75 கோ டிக்கு விற்பனையாகும். ஆனால் அரசாங்க ம் பொருளாகவோ அல்லது பணமாகவோ வழங்குவதிலேயே ஆர்வமாக இருந்திருக் கின்றது.

2) கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நகராட்சி கடை ஏலத்தில் கோ-ஆப்-டெக்ஸ் மேலாளாரை பங்கு பெறவிடாமல் உள்ளூர் அரசியல் வாதிகள் தாக்கி உள்ளார்கள். இந்த செய் தி ஜூனியர் விகடன் இதழில் மட்டுமே வெளியாகி இருக்கின்றது. எவ்வளவோ போராடியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; மேலாளரை ‘வற்புறுத்தி’ காவல்துறை முறை ப்பாட்டை திரும்பப் பெற வைத்துள்ளார்கள். இது குறித்து மிகவும் கடுமையாக கண்டித்து முதன் மை செயலருக்கு கடிதம் எழுதி யுள்ளார்.

3) பட்டு விற்பனையை விரிவா க்க தனியாக விற்பனை நிலை யங்களை துவங்க வேண்டுமெ ன்று ஆலோசனை தெரிவித்தா ர்.

4) நம் மாநில நெசவு தொழில் சரியாக விற்பனை இல்லாததால் பெரிதும் அல்லல்படும்போது, இலவச வேட்டி, சேலைகள் தமது நிறுவனத்தி ன் மூலம் வாங்கப்பட வேண்டுமென் று வற்புறுத்தினார். (இதில் கையூட்டி ற்கு வழியில்லை; எனவே கொள்ளை அடிக்க இயலாது!). இவரின் ‘வேட்டிக ள் தினம்’ அறிவிப்பு மூலம் கணிச மான அளவு விற்பனை நடைபெற்றது.

5) மேலும் விநியோகம்செய்யப்படாமல் தேங்கி கிடந்த கடந்த ஆண்டு வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகளை, நடப்பு ஆண்டு கணக்கி ல் புதிதாக வாங்கியது போல ஏமாற்றியதை கண்டுபிடித்தார்.

6) மற்றபடி கட்சி அடியாட்களை வைத்து இவ ரை மிரட்டுவதற்கு ஏதுவாக, தில்லையாடி வள் ளியம்மை விற்பனை நிலையத்தில் அறை ஒதுக்க வேண்டும் என்று முயற்சித்து பார்த்த னர். இது குறித்து இந்த வார ஜூனியர் விகடன் இதழில் படித்திருப்பீர்கள்.

இறுதியாக, 8000 ஊழியர்களைக் கொண்ட இந்திய மருத்துவம்- ஓமியோபதித் துறைக்கு இயக்குநராக மாற்ற ம் செய்யப்பட்டு, பணியில் சேருவதற்குள (48 மணிக்குள்) உதவியாளர் கூட இல்லாத அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக 24-வது தடவையாக பணி மாற்றத்திற்கு ஆளா கி இருக்கின்றார்.

மாற்ற முடியாதது எதுவோ?

இதுநாள் வரை 24முறை பணிமாற்றம் செய்த அரசு இவரது நேர் மையை மாற்ற முடியுமா? இவர் போன்ற பலர் அதிகாரிகளாகவுள் ளனர். நாமக்கல், மதுரை, இன்று செ ன்னையிலும் சோதனை. ஆனால் வே தனை என்னவென்றால் நல்ல அதிகா ரிகளை அரசுகள் இப்படி கேவலப்படு த்தி அவர்களை துன்பப்படுத்தும்போது , லஞ்சத்தை எதிர்க்கும் மக்கள் இந்த நேர்மையான அதிகாரிகளுக்கு ஆதர வாக வருவதில்லை. ஏன்? சுயநலம் தான்.

எப்படி கூடங்குள மக்கள் அழிந் தால் எனக்கென்ன? எனக்கு மின் சாரம் வந்தால் போதும். தஞ்சைத் தரணியே அழிந்தாலும் தனது தேவைகளுக்கு எரிவாயுவும், எங் கிருந்தோ சோறும் வந்தால் போ தும் என்கிற மனநிலையுள்ள ம னிதர்களிடம் மனித நேயத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? லஞ்சத்தை மட்டும் எதிர்க்கும் மேற் தட்டு மக்களின் மௌனம் நமது காதுகளை பிளக்கிற து… என்று இந்த மௌனங்கள் கலைகி றதோ அன்றுதான் இந்த நகரத்தினருக்கு லஞ்சத்தை எதிர்க்கத் தகுதி வரும்.

ஆக, துறவி வாழ்க்கை என்பது. ?

சிறகு உதிர்த்த இறகு

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: