Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சங்கராபரணம் பட பாடல்களை என்னால் பாடமுடியாது – எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (அரிய படங்கள் & வீடியோ)

“சங்கராபரணம் திரைப்பட பாடல்களை என்னால் பாடமுடியாது” – எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (அரிய படங்கள் & வீடியோ)

சங்கராபரணம் படப்பாடல்களை

பாட மறுத்தேன் என்று எஸ்.பி. பால சுப்ரமணியம் தனது பேட் டியில் கூறினார். இது பற்றிய விவரம் வருமாறு:

35 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் உருவாகி வருகிறது சங்கராபரணம். 35 ஆண்டுக ளுக்கு முன் படத்தில் பாடிய அனுபவம் பற்றி அவர் கூறும் போது,

” கடந்த 35 ஆண்டுகளாக சங்கராபரணம் படம் பற்றி எத்தனை மணி நேரம் பேசியிருப்பேன், எந்தெந்த இடங்க ளில்.. பேசியிருப்பேன், எந்தெந்த தொலை க்காட்சிகளில் பேசியிருப்பேன், எந்தெந்த மொழிகளில் பேசியிருப்பேன் என்று கணக் கிட முடியாது. என் தொழில் வாழ்க்கையி ல் சங்கராபரணம் மிகப்பெரிய அத்தியாய ம். நான் ஒரு நாளைக்கு நாலைந்து ரெக் கார்டிங் என்று பரபரப்பாக இருந்த கா லம் அது .சங்கராபரணம்தெலுங்கில் எடுக்கும் போது கே.வி. மகா தேவன் அண்ணா எங் கள் அப்பாவிடம் இதே வீட்டில் கதை சொ ல்லும் போது இந்தப் படத்தின் பாடல் பதி வின் போது முதலில் இதை ப் பாடிவிட்டு பிறகு வேறு பாடல் பதிவு க்கு போகச் சொல்லுங்கள் என்றார். இந்த ப் படத்தில் அவன் பாட வில்லை என்றால் ஒழுங்காக.. அவனை கன்னத்துல அறைந் து பாட வையுங்கள் என்றார் அப்பா. இப்ப டி ஒரு வாய்ப்பு அவனுக்கு கிடைக்கு மா? என்றாராம் அப்பா. மீண்டும் படத்தின் கதையை இயக்குநர் கே. விஸ்வநாத் அவர்கள் சொன்ன போது எனக்குப் பயம். எனக்கு சம்பிரதாய சங்கீதம் தெரி யாது. அந்தப் பயிற்சி எடுக்காதவன் நான். என வே என்னால் பாட முடியாது என்று மறுத் தேன். ஆனால் கேவிஎம் விடவில்லை. அவரை விட அவரது உதவியாளர் புகழேந் தி சார் விடாது வற்புறுத்திய துடன் அவகா சம் கொடுத்தால் கற்றுக் கொண்டு பாட வைப்பேன் என்று ஊக்கம் கொடுத்தார். அவரே பாடி கேசட் கொடுத்தார். அதை லூப் மாதிரி வைத்து எங்கு போனாலும் காரில் சமயம் கிடைக் கும் போதெல்லாம் கேட்டு கேட்டு அத்துப் படி ஆன பிறகு தான் பாடல் பதிவுக்கே போனேன். பதிவின் போது எஸ். ஜானகிய ம்மா, வாணி ஜெய ராம் அம்மா ஒத்துழை ப்பு கொடுத்த விதம் மறக்கவே முடியாது.

சீனாக்குட்டி அண்ணன் மிருதங்கம் வாசி த்தார். ராகவன் சார் வீணை வாசித்தார். சுதர்சன் புல்லாங்குழல் வாசித்தார். இப்ப டிப் பல சம்பிரதாய மேதைகள் பங்குபெற் று எனக்கு ஆசி கொடுத்து உருவான பாட ல்கள் அவை. இந்தப்படம் தெலுங்கிலே வெளியாகி தமிழ் நாட்டில் ஓராண்டு ஓடி யது. மேஜர் சுந்தர்ராஜன் வெளியிட்டதாக நினைக்கிறேன்.

மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. பாடல்கள் மட்டும் தெலுங்கிலேயே இருந்தன. இந் தியில் வேறு மொழியில் எடுக் கப்பட்டது. 35 ஆண்டுகள் கழித்து நவீன தொழில் நுட்பத்துடன் தமி ழில் மொழியாக்கம் செய்யப் பட் டுவருகிறது. இது இப்போது தே வையா என கேட்கக் கூடும்.

நவீன ஒலி, ஒளி நுட்பத்தில் பளி ச்சென இருக்கும்படி மெருகேற்றப்பட்டு வருகிறது. நிச்சயம் வரவே ற்கப்படும். ஒரு காலத்தில் தெலுங் கிலேயே வெளியாகி வரலாறு படைத்த படத்தை தமிழிலேயே பார்த்திடும் பெருமை எல்லாருக் கும் கிடைக்கும்.

சங்கராபரணம் பற்றிச் சொல்ல நிறைய செய்திகள் என்னிடம் உண்டு. இந்தப் படத்தில் இயக்கு நரிடம் சோமயாஜுலுவை அறி முகம்செய்ததே நான்தான்.அவர் அதற்கு முன் ராரா கிருஷ்ணா என்கிற தெலுங்குப் படத்தில் நடித்திருந்தார். நான்தான் அதற்கு

K. Viswanath & SPB

இசையமைத்திருந்தேன். மும்பையிலிருந்து லதா மங்கேஷ்கர் அம்மா, சிவாஜி அண்ணா, நான் எல்லாரும் ஒன்றாக இரு ந்து இந்தப் படத்தைப் பா ர்த்தது மறக்கமுடியாத து.

எனக்கு முதலில் 1990ல் தேசிய விருது வாங்கிக் கொடுத்தபடம் இது. வாணி ஜெயராம், கே.வி. மகா தேவன், கே.விஸ்வநாத்துக்கு தேசியவிருதும் கிடைத்த து.அது

SPB in left side

மட்டுமல்ல சிறந்த பிராந்திய மொழிப்படம் என்கிற தேசிய விருதும் கிடைத்தது. பாலு மகேந்திரா வின் ஒளிப்பதிவு பேசப்பட்டது. இந்தப் படத்தில் நடித்த சோமயா ஜுலு, மஞ்சு பார்கவி, அல்லு ராமலிங்க ய்யா, சந்திரமோகன், ராஜ லட் சுமி ஆகியோருக்கு பெரிய பாராட்டுகள் கிடைத்தன.

எல்லாருடைய இதயங்களை யும் தொட்ட கதை இது. சம்பிர தாய சங்கீதத்தில் ஒரு பாடல்பாட வேண்டுமென்றால் கூட ஆலாப னை செய்து நிரவல் பண்ணி ஸ்வரம் பாட ஒருமணிநேரம் பிடிக்கும். ஆனால் சினி மா ரசிகர்கள், சாதாரண மக்களையும் பாட வைத்த வர் கே.வி.மகாதேவன்.நான் எந்த மேடை ஏறினாலும் சங்கரா பரணம் படப்பாடல்களை பாடாமல் விட்டதில்லை . பாடாமல் என்னை ரசிகர்களும் விட்டதி ல்லை. என்னை நம்பி மீண்டும் இந்தப் பட த்தில் பாட வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இந்தப் படம் தமிழில் வெற்றிபெற வாழ்த்துகிறேன். பிரார்த்திக்கிறேன். ” இவ்வா று எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறினார்.

One Comment

 • Nalliah Thayabharan

  சங்கரா நாதசரீரா பரா வேத விஹாரஹரா ஜீவேஸ்வரா சங்கரா
  பிராணமு நீவநீ கானமே நீதனி பிராணமே கானமணி
  மௌன விசக்ஷண தியான விலக்ஷண ராகமே யோகமணீ
  நாதோ பாசன சேஸின வாடனு நீ வாடனு நே நைதே
  திக்கரீன்திரஜித ஹிம க்ரீன்திரசித கந்தரா நீலகந்தரா
  க்ஷ்ருத்ருளேறுகாநீ ருத்ரவீனா நின்நித்ர கானமிதி அவதரிஞ்சரா வினி தரிஞ்சரா
  சங்கரா நாதசரீரா பரா வேத விஹாரஹரா ஜீவேஸ்வரா சங்கரா
  மெரிசே மெருபுலு முரிசே பெதவுல சிறு சிறு நவ்வுலு காபோலு
  உரிமே உருமுலு சரி சரி நதநல சிரி சிறி முவ்வலு காபோலு
  மெரிசே மெருபுலு முரிசே பெதவுல சிறு சிறு நவ்வுலு காபோலு
  உரிமே உருமுலு சரி சரி நதநல சிரி சிரி முவ்வலு காபோலு
  பரவிசான சிரசு கங்கா தரகு ஜாரென சிவ கங்கா
  பரவிசான சிரசு கங்கா தரகு ஜாரென சிவ கங்கா
  நா கான லகரி நுவ்வு முரு கங்கா
  ஆனந்த வுர்ஸ்தினே தரவங்கா
  சங்கரா நாதசரீரா பரா வேத விஹாரஹரா ஜீவேஸ்வரா
  சங்கரா சங்கரா சங்கரா
  —நல்லையா தயாபரன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: