Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

த‌னக்கு பிறந்த குழந்தையைக்கூட பார்க்க‍ மறுத்த‍ நடிகர் நாகேஷ்!

த‌னக்கு பிறந்த குழந்தையைக்கூட பார்க்க‍ மறுத்த‍ நகைச்சுவை நடிகர் நாகேஷ்!
மறைந்த நகைச்சுவை மாமன்ன ன் நாகேஷ் பேரனும், நடிகர் ஆன ந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் ‘கல் கண்டு’ படத்தின் ஆடியோ விழாவு க்கு வந்திருந்தார், சீனியர் இயக்கு னர் எஸ்.பி.முத்துராமன். அப்போ துஒரு தகவல் சொன்னார். சுவார ஸ்யமாக இருந்தது. அதை இங்கு தருகிறேன்.”டைரக்டர் கே.பால சந்தருக்கும், நாகேசுக்கும் எந்த அளவுக்கு பரிச்சயம் உண்டு என்ற விஷயம் அனைவருக்கும் தெரியும். ஆரம்ப கால த்தில்,

பாலசந்தரின் மேடை நாடகங்களில் நடித்த வர் நாகேஷ். ‘மெ ழுகுவர்த்தி’, ‘எதிர் நீச்சல்’, ‘நீர்க்குமிழி’, ‘மேஜர் சந்திரகாந்த்’ போன்ற நாடகங்களில் திறமையான நடிப்பை வெளி ப்படுத்திய அவர், அப் போதெல்லாம் பாலசந் தரை ‘வாடா’, ‘போடா’ என்று, ‘டா’ போட்டுத் தான் அழைப்பாராம். காரணம், அவர்களுக் கு இடையே இருந்த நட்பு அப்படி. இது ஒரு காலக்கட்டம் வரை நீடித்தது.
பிறகு பாலசந்தர் சினிமா துறையில் நுழைந்து, படங்கள் இயக்க ஆரம்பித்தார். அந்தப் படங்களில் நா கேஷ் முக்கிய கேரக்டரில் நடித்தார். சினிமா படப்பிடிப்பு நடந்து கொண்டி ருந்தபோது, பாலசந்தரை, ‘சார்’ என் று மரியாதையுடன் அழைக்க ஆரம் பித்தாராம் நாகேஷ். உடனே அதிர்ச் சி அடைந்த பாலசந்தர், ”நாகேஷ்… நீ என் உயிர் நண்பன். வழக்கம்போல் என்னை வாடா, போடா என்றே மரி யாதையுடன் அழைத்துப் பேசு” என்று சொல்லியிருக்கிறார். அதற்கு நாகேஷ் சொன்ன விஷயம் என்ன தெரியுமா?
”உங்களுக்கும், எனக்கும் இருப்பது நட்பு. ஆரம்பகாலத்தில் நான் உங்கள் நாடகத்தி ல் நடித்தபோது, நீங்கள் என் வாத்தியாரா க இருந்தாலும் கூட, நட்பு நிமித்தமாக உங்களை அப்படி ‘டா’ போட்டு பேசியிரு க்கலாம். அது தப்பில்லை என்று தோன்றி யது. ஆனால், இப்போது நீங்கள் சினிமா பட இயக்குனர். ஒரு படத்தை நடத்திச் செ ல்லக்கூடிய கேப்டன். படப்பிடிப்பு நடக்கு ம் இடத்தில், வழக்கம்போல் நான் உங்க ளை ‘டா’ போட்டு அழைத்தால், அது மரி யாதையாக இருக்காது. ‘நாகேஷே டைர க்டரை ‘டா’ போட்டு அழைக்கும்போது, நாமும் அழைத்தால் என்ன ?’ என்று, வேறு சிலர் நினைக்கலா ம். அதனால்தான் படப்பிடிப்பு நடக்கு ம் இடங்களிலாவது நான் உங்களை ‘சார்’ என்று அழைக்கிறேனே…” என் று விளக்கம் சொல் லியிருக்கிறார். அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பு எவ்வளவு அற்புதமான து என்பதை அனைவரும் நினைத்துப் பார்த்து மகிழ வேண்டும் என்பதற்காகவே இந்த தகவலை உங்களுக்கு சொ ல்கிறேன்”.
=>இந்த விஷயத்தைச் சொன்ன எஸ்.பி .முத்துராமன், மேலும் ஒரு விஷயத் தையும் சொன்னார். அதையும் இங்கு தருகிறேன்.
”ஆனந்த் பாபுவை அனைவருக்கும் தெ ரியும். பல படங்களில் அவரது நடனமு ம், நடிப்பும் பேசப்பட்டது. இப்போது அ வரது மகன் கஜேஷ் நடிக்க வந்துள்ளா ர். அவருக்கு என் வாழ்த்துகள்.
சினிமாவில் நாகேஷ் பிஸியாக இருந்த காலக்கட்டத்தில், ஆனந்த் பாபு பிறந்தார். தனக்குப் பிறந்த குழந்தையின் முகத்தை முதல் முதலாகப் பார்க்க வேண்டு ம் என்ற ஆவல், ஒவ்வொரு தந்தைக்கும் இரு க்கும் அல்லவா? ஆனால், நாகேஷ் தன் குழ ந்தை ஆனந்த் பாபுவை போய் பார்க்கவில் லை. உடனே சிலர் கேட்டார்கள், ஏன் போய் பார்க்கவில்லை என்று. அதற்கு நாகேஷ் சொன்னாராம், ‘என் முகத்தைப் பாருங்கள், அம்மைத் தழும்புகளால் எப்படி விகாரமாக இருக்கிறது என்று. இந்த முகத்துடன் போய் பார்த்தால், என்னைப் பார்க்கும் அந்தக் குழந் தை பயந்துவிடாதா?’ என்று. தன் முகத்தைப் பற்றி அந்த மாபெரும் கலைஞனுக்கு அவ்வ ளவு வருத்தமும், சோகமும் இருந்திருக்கிறது.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட பாலசந்தர், நாகேஷிடம் சொல் லியிருக்கிறார், ‘டேய்… உனக்கு அழகு முகத் தில் இல்லை. உன் நடிப்பில் இருக்கிறது. உன் இயல்பா ன நகைச்சுவை நடிப்பு தான் உனக்கு மிகப் பெரிய அழகு. முதலில்போய் உன் குழந்தையைப்பார்’ என்று. அதற்குப்பிறகு மனம் மாறிய நாகேஷ், தன் மகன் ஆனந்த் பாபுவை பார்த்து சந்தோஷப்பட்டு இருக்கிறார். அவ்வ ளவு மென்மையான கலைஞனுக்கு எவ்வள வு பெரிய மனப்போராட்டங்கள் இருந்திருக் கிறது பார்த்தீர்களா?” என்றார் எஸ் .பி. முத்து ராமன்
Yogi Deva Raj on facebook

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: