வெங்காயத்தின் மீது சத்தியப்பிரமாணம் செய்யும் விநோதம் – சுவாரஸ்யமான வியப்பூட்டும் தகவல்!
வெங்காயம் வெறும் உணவுப் பண்டமாக மட்டுமின்றி அற்புதமான
மருத்துவ ஆற்றல் படைத்த ஒரு பண் டமாகவும் இருக்கிறது என்ற உண் மையை மிகவும் தொன்மைக் காலத் திலேயே நமது நாட்டு மக்கள் அறிந்தி ருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
வெங்காயத்தின் தாயகம் தமிழகமோ அல்லது பாரத நாட்டின் பிற மாநிலங்களோ அல்ல. எகிப்து நாடு.
உலகிலேயே முதன் முதலாக எகிப்து நாட்டு மக்கள்தான் வெங்காயத்தைச் சரியாகவும், அதிகமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார் கள்.
எகிப்திய மக்கள் அந்நாளில் வெங்காயத் தை தெய்வீக அம்சம் பொருந்தியதாகக் கருதி வந்துள்ளனர்.
பக்தி பூர்வமாகச் செய்யப்படும் பெரிய பூஜைகளின்போது வெங்காயமும், வெள் ளைப் பூண்டும் பூசனைக்குரிய மூர்த்திகள் போன்ற மதிப்புடன் மரியாதையுடன் பூஜை யில் இடம் பெறுவது வழக்கமாம்.
பண்டைய எகிப்திய நீதிமன்றங்களில் வழக் குகள் விசாரிக்கப்படும்போது வாதியும், பிர திவாதியும் வெங்காயத்தின்மீது சத்தியப் பிர மாணம் எடுத்துக்கொள்ளுமாறு கோரப்பட் டனராம். அத்தனை உயர்ந்த இடம் அதற்குத் தரப்பட்டிருந்தது
-சுகுமார்