Sunday, October 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜெயலலிதா எதிர்காலம், கேள்விக்குறியா, ஆச்சரிய குறியா – (சொத்துக் குவிப்பு வழக்கு முழு புள்ளிவிவரம்)

ஜெயலலிதா எதிர்காலம், கேள்விக்குறி(?) யா, ஆச்சரிய குறி(!)யா – (சொத்துக் குவிப்பு வழக்கின் முழு புள்ளிவிவரம்)

அம்மாடியோவ்… ஜெ. மீதான சொத்துக் குவி ப்பு வழக்கின் புள்ளி விவரத்தைப் பாருங்க ளேன்!

12,000 சேலைகள், 28 கிலோ தங்கம், ஜோடி ஜோடியான செருப்புகள், ஏகப்பட்ட நிலபுலன் கள், சொத்துக்கள், நிறுவனங்க ள்.. இவற்று க்கு மத்தியில் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக சுற்றிச் சுற்றி வந்து கொண்டுள்ளது.. நாளை கிளைமேக்ஸ்!

ஜெயலலிதா மீதான இந்த வழக்கின்

மையப் புள்ளி என்ன என்று பார்த்தால், ரூ. 66 கோடி அளவுக்கு வருமானத்திற்கு மீறிய வ கையில் சொத்துக்களைச் சேர்த்து விட்டார் ஜெயலலிதா என்பதுதான்.

1991ம் ஆண்டு முதல் முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்த ஜெயலலிதா தனது முதல் பதவிக்காலத்தின்போது சேர்த்து சொத்துக்க ள் இவை என்பது குற்றச்சாட்டாகும். அடுத்து 1996ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சிக் காலத்தில், ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிர மணியசாமி தொடர்ந்த இந்த வழக்கை தி மு க அரசு தானும் இணைத்துக் கொண்டு நடத் த ஆரம்பித்தது.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு இத்தனை கால விசாரணைக்குப் பின்னர் நாளை ஒரு முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு அப்பீல்கள் காத்திருக்கின்றன..அது அடுத்த கதை… இதுவரை நடந்த கதை யின் சாராம்சத்தை ஒரு புள்ளிவிவரமாக பார்ப்போம்.

ரூ.66கோடி

ரூ. 66 கோடி அளவுக்கு வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்களைக் குவித்து விட்டார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த வழக்கில் சசி கலா, இளவரசி, தினகரன், சுதாகரன், அனுராதா ஆகியோ ரும் இணைக் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க் கப்பட்டுள்ளனர்.

1991ம் ஆண்டு முதல்வர் பதவியில் ஜெயலலிதா அமர்ந்தபோது அவரது சொத்து மதிப்பு ரூ. 3 கோடியாக மட்டுமே இருந்தது என்பது அரசுத் தரப்புக் குற்றச்சாட்டு.

முதல்வர் பதவியில் இருந்த ஐந்து ஆண்டுகாலமும் முதல்வர் ஜெயலலி தா மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம் பளமாக பெற்றார்.

முதல்வர் ஜெயலலிதாவின் பதவிக் காலத்தின்போது ஜெயலலிதா வின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலா, சசிகலாவின் அண்ணி இள வரசி ஆகியோர் 32 நிறுவனங்களை தொடங்கியுள்ள னர் என்பது அரசுத் தரப்பின் இன்னொரு குற்றச்சாட்டு. இவற்றின் மூலம் பல சொத்துக்கள் வாங்கப்பட்ட தாகவும் குற்றச்சாட்டு கூறுகிற து .

ஜெயலலிதாவின் சொத்துக்களி ல் ஒன்றாக கூறப்படுவது நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள 1000 ஏக்கர் பரப்பளவிலான எஸ் டேட்.

இதேபோல நெல்லையில் இன் னொரு 1000 ஏக்கர் நிலமும் வா ங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட் டுள்ளது.

ஜெயலலிதா உள்ளிட்டோரிடமிருந்து 28 கிலோ தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுதவிர ஜெயலலிதா உள்ளிட்டோரிடமி ருந்து 12,000 சேலைகளும் பறிமுதல் செய் பட்டன. இவற்றில் பெரும் பாலானவை பட்டுச் சேலைகளாகும்.

1996ம் ஆண்டு சுதாகரனின் திருமமத்திற் கான செலவுத் தொகை ரூ. 5 கோடி என்று அரசுத் தரப்பு கூறியுள்ளது.

கடந்த 18 வருடமாக இந்த சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து வருகி றது.

13 வழக்குகள்

ஜெயலலிதா மீது கடந்த திமுக ஆட்சிக்கா லத்தில் போடப்பட்ட வழக்குகளில் 13 வழ க்குகளில் அவர் விடுதலை செய்யப்பட்டு விட்டார் என்பதைச் சுட்டிக்காட்டும் அதிமு கவினர் இந்த வழக்கிலும் அம்மா வெல் வார் என்ற நம்பிக்கையுடன் பிரார்த்தனை கள், வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

2001ஆம் ஆண்டு

கடந்த 2001ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவு ப்படி இந்த சொத்துக் குவிப்புவழக்கு சென் னையிலிருந்து பெங்களூருக்கு மாற்றப்ப ட்டது

2016ஆம் ஆண்டு

இந்த வழக்கின் தீர்ப்பு ஜெயலலி தாவுக்கு முக்கியமானது. கார ணம் இதில் அவர் தோற்றால், தண்டனை பெற்றால், பதவி வி லக வேண் டியிருக்கும். அப்படி நேர்ந்தால் 2016 சட்டசபைத் தேர்தலில் அவர் பெரும் பின்னடைவை சந்திக்க வேண்டி வரும். மாறாக வெற் றி  பெற்றால், 2016 தேர்தலில் மகத்தான வெற்றியை அவர் குவிக்க வாய்ப்பு கிடைக்கும்.

=>சுதா, ஒன்இந்தியா

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: