
இரண்டு நடிகைகள் தோழிகளாக இருப்பது அபூர்வம். அதிலும் முன் னணி நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டாம். பொறாமையும் பற்கடிப்பும் நிச்சயம் இருக்கும்.
அபூர்வமாக இணைபிரியா
தோழிகளாக இவர்கள் மாறுவதுண்டு. ஒரு காலத்தில் நீயா நானா வாக இருந்த நயன்தாராவும், த்ரிஷாவும் பார்ட்டி ஒன்றில் சந்தித்து பேசிய பிறகு நீயின்றி நானில்லையாக மாறியது சமீபத்திய உதா ரணம்.
நடிகைகள் பகைத்துக்கொள்ளும்பார்ட்டிகளும், விழாக்களும்தான் அவர்களின் சண்டையை சமாதானப்படுத்தும் இடங்களாகவும் உள் ளன
சமீபத்தில் நடந்த விருது விழாவில் சஞ்சிதா ஷெட்டிக்கும், லட்சுமி மேனனுக்கும் அருகருகே இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. தயக்கத் துட ன் லட்சுமி மேனனிடம் பேச்சை தொ டங்கியிருக்கிறார்
சஞ்சிதா. எதிர் புறமிருந்தும்.. இல்லை… என்றுதான் பதில்வரும் என் று நினைத்துள்ளார். மாறாக லட்சுமி மேனன் அருவியாக பேச்சை கொட்டியுள்ளார்.
திக்குமுக்காடிப் போன சஞ்சிதா லட்சுமி மேனனுடனான தனது பேச் சையும் நட்பையும் நாள்தோறும் தொடர்ந்து கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளத்தில் லட்சுமிமேனனை தனது பெஸ்ட் ஃப்ரெண்ட் என்று போட்டோவுடன் பதிவிட்டுள்ளார். வாழ்க என்னுயிர் தோழி கள்.