அது என்னது மேக் இன் இந்தியா!
‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் உற் பத்தி செய்வோம்!) என்கிற புதிய கருத் தாக்கத்தை முன்வைத்து, உலகளவில் நம் நாட்டை ஒரு பெரிய உற்பத்திக் கேந் திரமாக ஆக்கி, அதன் மூலம் வேலை வாய்ப்பை பெருக்கி, பொருளாதார வள ர்ச்சியைக் காண வைக்கும் முயற்சியை வெற்றிகரமாக விதைத்திருக்கிறார் பிர தமர் நரேந்திர மோடி. முந்தைய காங்கி ரஸ் அரசாங்கம், நாட்டில் தொழில் வள ர்ச்சியைப் பெருக்க முக்கிய நடவடிக் கைகளை எடுக்காதபோது, இந்த அரசாங்கமாவது
உற்பத்தித் துறையில் முத்தி ரை பதிக்க முடி வெடுத்திரு ப்பது வரவேற்கத்தக்கதே.
உற்பத்தித் துறையை வளர்த் தெடுப்பதன் மூலம் பொருளா தாரத்தை வெகுவாக உயர்த் த முடியும் என்பதை கடந்த அறுபது ஆண்டுகளில் நாம் உணரத் தவறினோம். ஐம்பதுகளில் ஜப்பான் செய்ததை, எழுபதுகளி ல் தென் கொரியாவும் சிங்கப்பூரும் செய்ததை, எண்பதுகளில் சீனா செய்ததைத்தான் இன்றைக்கு நாம் செய்ய நினைக்கிறோம். இனியாவது சேவைத் துறையை மட்டும் வளர்த்தால் போதும் என்று நினைக்காமல், உற்பத்தித் துறை யில் கவனம் செலுத்தினால் தான் வேலை வாய்ப்புகள் பெருகும்.
கேட்பதற்கு சிறப்பாக இருக்கும் இந்த கரு த்தாக்கத்தை நடைமுறையில் செயல்படு த்த அடிப்படையான பல மாற்றங்களை நாம் செய்தாக வேண்டும். தொழிற்சாலை களுக்குத் தேவையான மின்சாரத்தைத் தருவதில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். புதிய மின் உற்பத் தி த் திட்டங்களை உருவாக்கி, தடை யில்லா மின்சாரம்தருவதுடன், சா லை, தண்ணீர், கட்டுமான வசதிக ளையும் தந்தால்தான், புதிதாக பலரு ம் தொழில் தொடங்க முன்வருவார் கள்.
தொழிற்சாலைகளைத் தொடங்கத் தேவையான நிலங்களை கையகப்ப டுத்து வதிலும் பெரும் சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கி றது. தவிர, திறமையான தொழிலாளர்களை அதிக அளவில் உரு வாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக் கிறோம். இதற்கு தொழிலாளர் தொடர்பான பல சட்டங்கள் இ ன்றைய தேவைக்கேற்ப மாற்ற ம் காணப்படவேண்டும். தொழி ல்
தொடங்கத் தேவையான நிதியையும் பெரிய அளவில் உருவாக்கியாக வே ண்டும்.
இது தொடர்பாக மத்திய அரசு செய்ய நினைக்கும் ஒவ்வொரு செயலையும் மாநில அரசின் உதவி யோடு நிறைவேற்ற வேண்டும். எல் லா மாநிலங்களும் ஒன்று கூடி செயல்பட்டால்தான், உலக உற்பத்திக் கேந்திரமாக இந்தியா மாறும் . பிரதமர் மோடி இதை எப்படி செய்யப்போகிறார்?