Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தானா? – ஒரு பார்வை

இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகளா? – ஒரு பார்வை: ஒட்டு மொத்த‍ இஸ்லாமியர்கள், தீவிரவாதிகளாக தோற்றம் ஏற்படு வதற்கான‌ காரணங்கள் – அவசியான அலசல்

இஸ்லாமும்-இஸ்லாமிய தீவிரவாதிகளும் முழுமையான பார்வை

இன்று உலகம் முழுவதும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றது. இவ்வாறான தோற்ற ம் ஏற்படுவதற்கு காரணம் (அல்லாஹு அக்பர் – இறைவனே மிகப் பெரியவன்) எனும் ஒரு வாசகம். பொரும்பாலும் வக்கிரமான கொ லைகளையும், குண்டு வெடிப்புக்களையும் செய்யு முன்னும் செய்த பினரும் இவர்கள் அல்லாஹு அக்பர் என இறைவனை அளை  பதாலேயே இஸ்லாமியர்கள் பற்றிய இவ்வா றான பார்வை ஏற்படக் காரணமாக அமைந் துள்ளது. அது மட்டுமின்றி இஸ்லாம் உலகில் கிறிஸ்தவ மதத்திற்கு அடுத்தபடியாக ஆதிகம் மக்களால் பின்பற்றப்படுவதும்

இஸ்லாத்தில் 1.சுன்னி 2.ஷியா 3.சூபித்துவம் 4.அகமதியா 5. குரானி சம் என பல உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இஸ்லாத்தில் உள்ள அனைத்து உட்பிரிவுகளும் அல் லாஹுவையே ஏற்றுக் கொண் டுள்ளது. இஸ்லாம் மததிற்குள் உள்ள உட் பிரிவுகளிற்கிடையில் இஸ்லாமியர்கள் வாழும் நாடுக ளில் பல நூற்றாண்டுகளாக கொ ண்டுள்ள முரண்பாடுகளால் சண்டை இட்டுக்கொள்கின்றனர். ஒரு இஸ் லாமியப் பிரிவு மற்ற இஸ்லாமியப் பிரிவை கொண்றா லும் அல்லா ஹு அக்பர் எறே கோசம் எழுப்புகின்றனர். இதைப் பயன்படுத்தி உலக வர்த்தக அரசி யல் இஸ்லாத்தின் மீது தீவிரவா த பிம்பத்தைத் தோற்றுவிக்க இலகுவாக அமைந்துவிட்டது.

இஸ்லாத்தின் மீது அமெரிக்க கொண்டுள்ள எதிர்ப்பும், பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் உள்ள எண்ணை வளத்தில் அமெரிக்கா கொண்டுள்ள மோகமும். இஸ்லாம் மதத்தில் உள்ள உட்பிரிவுகளுக்குள் இடையிலான மோத ல்களை பயன்படுத்தி தீவிரவாத எதிர்ப்பு எனும் போர்வையில் போர் நடத்துகின்றனர். இதில் புனிதப் போர் என்ற பெயரில் ஒரு சில இஸ் லாமிய குழுக்கழும் பல நாடுக ளில் மீது தாக்குதல் நடத்துவதும் உலகி ற்கு இஸ்லாமியர்கள் கொடுமையா ன தீவிரவாதிகள்போல் தோற்றத் தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாம் மதம் உலகில் 1.57 பில்லி யன் மக்களால் பின்பற்றப்பட்டு வருவதுடன் அதிவேகமாக வளர்ந் து வரும் மதமாகவுள்ளது. இஸ்லாத்தில் உள்ள பல உட்பிரிவுகள் உலகில் உள்ள பிரபலங்களை அவர்களின் உட்பிரிவு இஸ்லாத்தி ற்கு மாற்றி அவர்களின் உட்பிரிவு களை பரப்பி வருகின்றனர்.

இஸ்லாம் மதம் பற்றிய மேலோட்ட மான பார்வையும் இவர்களுக் குள் உள்ள உட்பிரிவுகளையும் இஸ்லமிய தீவிரவாத அமைப்புக் கள் பற்றி ஒரு பார்வையும்…

அல்லாஹ் = கடவுள்

“கடவுள் ஒருவனே. அவனே அல்லாஹ். அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்பது இசுலாமின் அடிப்படை நம்பிக்கை ஆகும். அல்லாஹ் என்பது கடவுள் என்ற பொருள் கொண்ட பால்வேறுபாடு காட்டாத ஒரு படர்க்கைச் சொல். இது அரேபிய நாடோடிக் குழுக் கள், தங்கள் தெய்வத்தை குறிக்க பயன்படுத்திய சொல் ஆகும்.

அல்லாஹ் ஒருவனே இருக்கிறா ன். படைத்துப் பரிபாலிக்கும் ஆற்ற ல் அவனுக்குரியது. அவனுக்கு நி கராகவோ, துணையாகவோ யாரு ம் இல்லை. வணக்கத்துக்குத் தகு தியானவன் அவன் ஒருவன் தான். அவனுக்குச் சொந்தமான திரு நாமங்கள் பண்பாடுகள் உள்ளன (என்ற இறைநம்பிக்கை) எனும் பிரதான நுழைவாயில் ஊடாக இஸ்லாத்தின்பால் பிரவேசிக்க வே ண்டும். அவனைப் பற்றி அல்குர்ஆன் பல இடங்களில் மிகச்சிறந்த அறிமுகம் தருகின்றது.

இஸ்லாம்

இஸ்லாம் என்பது ஒரிறைக் கொ ள்கையை கொண்ட ஒரு ஆபிரகா மிய மதமாகும். உலகம் முழுவ தும் 1.57 பில்லியன் மக்கள் இம் மதத் தை பின்பற்றுகிறார்கள். இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 23 சதவீதமாகும். இசுலாம், கிறித்தவத்துக்கு அடுத் தபடியாக உலகில் இரண்டாவது பெரிய மற்றும் அதிவேகமாக வள ர்ந்து வரும் மதங்களில் ஒன்றாகும். இது இறைவனால் முகம்மது நபிக்கு சொல்லப்பட்ட செய்திகளின் தொகுப்பான குர் ஆன் எனப் படும் வேத த்தின் அடிப்படையில் இயங்குகின்றது. இறப்பிற்கு பிற கான மறு மை வாழ்வை இது குறிக்கோளாக கொ ண்டது. இறைவனை நம்பு வது, அவ னது கட்டளைப் படி நடப்பது என்பதன் மூலம் முடிவற்ற மறு மை வாழ்வின் சுகங்களை பெற முடியும் என்பது இசுலாமி ன் நம்பிக்கை. இறை நம் பிக்கை, இறை வணக்கம், நோன்பு, கட்டாய பொருள்தானம், மெக்கா வை நோக்கிய புனிதப் பயணம் ஆகிய ஐந்தும் இசுலாமின் கட்டாயக் கடமைகளாகும்.

இஸ்லாம் இரண்டு அடிப்படை மூலாதாரங்களை மட்டும் கொண்டு அமைந்தது.

1. அல்லாஹ்வின் வேதம். (குர் ஆன்)

2. அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மார்க்கம் என்ற ரீதியில் அமுல்படுத்தியவைகள். (ஹதீஸ்)

ஏழாம் நூற்றாண்டில் முகம்மது நபி இந்த மார்க்கத்தை மெக்கா நகரில் பரப்பத் தொடங்கினார். இவர் இறைவனின் தூதர் என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. இசுலாமின் மூலமான குர்ஆன் இவரை முதல் மனிதர் ஆதாம் முதல் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக அடை யாளப்படுத்துகிறது.

ஆதம் (அலை), நூஹ் (அலை) (நோவா), இப்ராகிம் (அலை) (ஆபிரகாம்), இஸ்மாயில் ( அலை), தாவூத் (அலை), மூசா (அலை) (மோ சே) மற்றும் ஈசா (அலை) போன்ற முன் சென்ற நபிமார்களுக்கும் இ றைவனின் கட்டளைகள் சொ ல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் முகம்மது (ஸல்) அவர்களுக்கு வழங்கிய திருமறை அல் குர்ஆன் இஸ்லாத்திற்க்கு ஒரு முழு வடிவம் தருவதாகவும் இதற்கு முன் சென்ற நபிமார்களின் வாழ்க்கையை உறுதி செய்வதாகவும் ருக்கிறது.

இஸ்லாம் : இஸ்லாம் என்ற சொல்லின் மூலம் குர்ஆன் ஆகும். இது ஸ்-ல்-ம் என்ற மூன்று அரபி வேரெழுத்துகளிலிருந்து உரு வான ஒரு வினைப்பெயர் சொல். ஏற்றுக் கொள்ளுதல், ஒப்படைத்தல் , கீழ்படி தல் ஆகிய பொருள்களில் இது ஒலிக்கும். இத ன் அர்த்தம் கடவுளை ஏற்றுக் கொண்டு, தம்மை அவனிடம் ஒப் படைத்து, அவனை வழிபடு வது என்பதாகும்.

இஸ்லாமியப் பிரிவுகள்

இஸ்லாமியர்கள் பொதுவாக சுன்னி மற்றும் ஷியா என்ற இர ண்டு பெரும் பிரிவினராக உள் ளார்கள். இதை தவிர சூபிசம், அகமதியா போன்ற சில பிரிவு களும் உள்ளன.

1. சுன்னி இஸ்லாம்

சுன்னி இஸ்லாம் என்பது இஸ்லாமிய பிரிவுகளில் ஒரு முக்கியமா ன உட்பிரிவாகும். இதுவே மிகப் பெரிய பிரிவும் ஆகும். சுன்னி என்ற வார்த்தை சுன்னா என்ற அரபு வார் த்தையில் இருந்து வந்ததாகும். இத ற்கு முகம்மது நபியின் வழி முறை என்பது அர்த்தமாகும்.

இசுலாம் மதத்தை மக்களிடையே பரப்பிய முகம்மது நபி, அதன் பொ ருட்டு இன்றைய சவூதி அரேபியா வில் உள்ள மதீனா நகரை தலை நகராக கொண்டு ஒரு இஸ்லாமிய பேரரசை நிறுவினார். அந்த பேரரசை மிக திறம்பட ஆட்சி செய்த அவர்கள் 632-ம் ஆண்டு கால மானார். அதன் பிறகு அந்த அரசை யார் நிர்வகிப்பது என்ற கே ள்வி எழுந்தது. அப்போது அபூபக்கர் என்பவர், மற்ற முஸ்லிம்களா ல் முழுமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார். இவர் முகம்மது நபிக்கு மிகவும் பிரியமான நண்பரும், பெண் கொடுத்த மாமனாரும் ஆ வார். மேலும் முகம்மது நபியின் வாழ்நாளிலேயே, அனைத்து இ டங்களிலும் அவருக்கு அடுத்த அதிகாரத்தில் இருந்தது இவரே ஆகும். இவரே முஸ்லிம்களின் முத ல் கலீபா ஆவார். இவருக்கு பிறகு மற் றொரு மாமனாரான உமர் என்பவர் இரண்டாவது கலீபாவாக தேர்ந் தெடுக்கப்பட்டார்.

634-ம் ஆண்டு கலீபாவாக தேர்ந்தெ டுக்கப்பட்ட உமர் அவர்கள், ஒன்பது ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த நி லையில் 644-ம் ஆண்டு ஆபு லுலுவா என்ற பாரசீகனால் கொல்லப்பட்டார். இதற்கு இடை ப்பட்ட அவரது ஆட்சி காலத்தில், அவர் கடைப்பிடித்த கடு மையான சட்டங்களால் அதிருப்தி அ டைந்த ஒரு கூட்டத்தினர் இவருக்கு பிறகு முகம்மது நபியின் மரு மகன்களில் ஒருவரான அலீ என்பவர் ஆட்சிக்கு வரவேண்டும் என் று விரும்பினர். இவர்கள் ஷீஆ அல்-அலி கூட்டத்தார் என அழைக் கப்படுகின்றனர். ஆனால் அலி யைவிட மூத் தவரான முகம் மது நபியின் மற்றொரு மரும கன் உதுமான் என்பவர் அடு த்த கலீபாவாக வரவேண்டும் என்று பெரும்பான்மையான முஸ்லிம்கள் விரும்பினர். இ தன் பேரில் சிலர் கூடி அலியி ன் சம்மத த்தோடு உதுமானை மூன்றாவது கலிபாவாக தேர்ந்தெடுத்தனர். பின்பு கடைசியாக உது மானின் மறைவுக்கு பிறகு அலி நான்காவது கலீபாவாக தேர்ந்தெ டுக்கப்பட்டார்.

இவரது ஆட்சி காலத்தில் இவருக்கு எதிராக மிகப்பெரிய அதிருப் திக் கூட்டம் ஒன்று உருவாகியது. இவர்கள் காரிஜிய்யா கூட்டத்தார் என அழைக்கப்படுகின்றனர். இவ ர்கள் உதுமான், முகம்மது நபி அவர்களுக்கு எதிரானவர் என்ற தோற்றத்தை மக்களிடையே பரப் பினார். மேலும் முகம்மது நபி மிகவும் அதிகமாக உயர்த்தி இறை வனுக்கு சமமானவர் என்றும் கூற த்தொடங்கினர். இதனால் அதிரு ப்தி அடைந்த ஷீஆ அல்-அலி கூட்டத்தார் பதிலுக்கு அலியை மிகவு ம் அதிகமாக உயர்த்தி இறைவனுக்கு சமமானவர் என்றும் கூறத் தொடங்கினர். மேலும் முகம்மது நபியினை திட்டவும் தொடங்கி னர். இதனால் கோபமுற்ற மற்ற, காரிஜிய்யா கூட்டத்தார் அல்லாத வர்களும் ஷீஆ அல்-அலி கூட்டத் ததாரை வெறுக்க தொடங்கினர். இவர்கள் தங்களை காரிஜிய்யா மற்றும் ஷீஆ அல்-அலி கூட்டத் தாரிடம் இருந்து வேறுபடுத்தி உதாரண நபிவழி கூட்டம் என பொரு ள்படும்படி சுன்னி முஸ்லிம் என அழைத்துக்கொண்டனர். இவ்வா றே சுனி இஸ்லாம் பிரிவு தொடங்கியது.

நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள்.

சுனி முஸ்லிம்கள் திருமறை மற் றும் முகம்மது நபியின் வழியை மட்டும் பின்பற்றுகின்றனர். திரு மறையில் அல்லா கூறிய வாழ்க் கை, வழிபாட்டு, சட்ட முறைகள் மற்றும் முகம்மது நபியின் வழி காட்டுதல் ஆகியவற்றை மற்றும் தங்கள் வாழ்க்கையில் மேற்கொ ள்கின்றனர். இவர்களின் நம்பிக் கைப் படி முகம்மதே நபி. அலி ஒரு ஸஹாபி (நபி தோழர்) மட்டுமே அன்றி வேறு எந்த தெய்வ சக்தியும் கொண்டவர் அல்லர். மேலும் முகம்மது நபி குடும்பத்தாருக்கும் தெய்வ சக்தி கிடையாது.

2. ஷியா இஸ்லாம்

இஸ்லாம் மதத்தின் முக்கியமா ன உட்பிரிவு. இது இஸ்லாமிய மத ப்பிரிவுகளுள் சன்னி இஸ் லாமிற்கு அடுத்தபடியாக அதிக  மானோர் பின்பற்றும் பிரிவாகு ம். ஷியா என்ற சொல் “அலியை பின்பற்று வோர்” என்ற பொருள் படும் அரபு மொழி சொல்லில் இருந்து தோன் றியது. ஷியாக்கள் முகமது நபியின் மருமகன்களில் ஒருவரான அலியே அவரின் உண்மையான வாரிசு என்று நம்புகி றார்கள்.

இந்திய முஸ்லிம்களில் 35 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள். பத்து சதவீதத்தினர் ஷியா முஸ்லிம்க ள் ஆவர். ஷியா முசுலிம்கள் உலக முசுலிம் மக்கள் தொகை யில் 10-20% உள்ளனர், மத்திய கிழக்கு நாடுகளின் மக்கள் தொ கையில் இவர்கள் 38% ஆகும். ஷியா பிரிவினர் அதிகம் வாழும் முஸ்லிம் நாடு ஈரான் ஆகும். சன்னி, ஷியா க்களுக்கு இடை யே பல நூறாண்டுகள் சண்டையும் சச்சரவும் இரு ந்து வந்துள்ளன. ஷியாக்களின் ஆட்சி நடைபெறும் நாடுகள் ஈராக் மற்றும் ஈரான். ஈரானுக்கு அடுத்தபடியாக, இராக், லெபனான், பாகி ஸ்தான் என பல நாடுகளில் ஷியாக்கள் உள்ளனர்.

அல்லாஹ் ஒருவனே ஏக இறை வன், அவனால் அருளப்பட்டது குர் ஆன், அவனது இறுதித் தூதர் மு ஹம்மது நபி என்ற இஸ்லாத்தின் அடிப்படையை எல்லா பிரிவுகளு ம் ஏற்றுக் கொள்கின்றன. சன்னிக ளும் ஷியாக்களும் அல்லாஹ் ஒருவனே; குர்ஆனும் ஒன்றே; இறு தித் தூதரும் ஒருவரே மக்கா இறையில்லமும் (கஅபா) ஒன்றே.

முஹம்மது நபிகளாருக்குப் பிறகு, இஸ்லாமிய ஆட்சியாளராக (கலீபா) யாரை ஏற்பது என்பதில்தான் வேறுபாடு ஏற்பட்டது. முஹ ம்மது நபிகளாரின் நெருங்கிய தோழரும் மாமனாருமான அபுபக் கரை, முதல் கலீபாவாக சன்னிகள் ஏற்கின்றனர். ஷியா பிரிவின ரோ, முஹம்மது நபிகளின் மற்றொரு தோழரும் மருமகன்களில் ஒருவ ரான அலியே நபிகளாரின் வாரிசு என்கின்றனர். இதில் தொட ங்கிய சர்ச்சை பல நூற்றாண்டுகளுக்கு நீடித்தது.

தொழுகைக்கான அழைப்பில் (பாங்கு) சிறிய வித்தியாசம். “அல்லா ஹு அக்பர்’ என்று தொடங்கும் பாங்கின் பொருள், “இறைவன் மிகப் பெரியவன்! வணக்கத்துக்குரியவன் இறைவனைத் தவிர வேறெவ ரும் இல்லை. முஹம்மது இ றைவனின் தூதர். தொழ வாரு ங்கள். வெற்றி பெற வாருங்க ள்’ என்பது. இதில், ஷியாக்கள் மேலும் ஒரு வரியைச் சேர்த்து க் கொள்கிறார்கள். “முஹம்ம து நபி அல்லாஹ் வின் இறுதித் தூதர்; அவரது வாரிசு அலி’ என்பதே அவ்வாசகம்.

தொழுகையில் கொஞ்சம் வித்தியாசம். ஐந்து வேளைத் தொழுகை யை, மூன்று வேளைகளில் (இரண்டை ஒரே வேளையில்) தொழுது விடுகின்றனர் ஷியாக்கள். தொழுகை யில், ஸஜ்தா எனும் சிரம் பணியும் நிலையில், “காகே ஷிபா’ எனப்படும் புனித கர்பலாவின் மண்ணால் செய்ய ப்பட்ட “சில்’ (ஓடு) ஒன்றை வைக்கி றார்கள். சன்னிகள் இவ்வாறு செய்வ தில்லை.

3. சூபித்துவம் இஸ்லாம்

சூபித்துவம் அல்லது தஸவ்வுப் என்பது இஸ்லாம் மார்க்கத்தின் ஒரு கிளையாகும். இது சுன்னி இஸ்லாத்தின் வரலாற்றிலிருந்து பெறப் பட்டுள்ளது. இறைவனை அடை யும் வழியைக் கூறும் இஸ்லாத் தின் உள்ளார்ந்த பரிமாணம் என ச் சொல்லப்படுகிறது. இந்த மர பைப் பின்பற்றுபவர்கள் சூபிகள் என அழைக்கப்படுகின்றனர். இ வர்கள் வேறுபட்ட சூபி கட்டளை களுக்கு அல்லது தரீக்காக்களு க்கு சொந் தக்காரர்களாவர், தரீக்காக்கள் ஒரு ஆத்மீக தலைவ ரைக் கொண் டு உருவாக்கப்பட்ட சபையாகும். சூபிகள் ஆத்மீக அம ர்வுகளுக்காக கூடும் இடங்கள் ஸாவியா மற்றும் தக்கியா என அழைக்கப்படுகி ன்றது. சூபி தரீக்காக்கள் அல்லது கட்டளைகள் என்பவற்றின் மூல கோட்பாடுகள் பெரு ம்பாலும் இஸ்லாத்தின் நபிகள் நாயகத்தின் மைத்துனர் மற்றும் மருமகனான அலி அவ ர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தோன் றியிருக்கலாம். நக்சபந்தி சூபி கட்டளை இதற்கு குறிப்பிடத்தக்க விதிவிலக்காக, முதலாவது கலீபா அபூபக்கர் அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி தோற்றம் பெற்று ள்ளது. பிரபலமான சூபி கட்டளைகளாக காதிரிய்யா, பாஅலவிய்யா, சிஸ் திய்யா, ரிபாயி, கல்வதி, மெவ்ளவி, நக்சபந்தி, நியும துல்லாயி, காதி ரய்யா புத்சிசிய்யா, உவைஸி, ஷாதுலிய்யா, கலந்த ரிய்யா, ஸுவாரி காதிரி மற்றும் சுஹரவர்திய்யா என்பன காணப் படுகின்றன.

சூபிகள், தாங்கள் இஹ்ஸானை (முழுமையான வணக்கம்) பயிற்சி செய்வதாக நம்புகின்றனர். இது வானவர் ஜிப்ரீலால் முஹம்மது நபிக்கு வெளிப்படுத்தப்பட்டது: அல்லாஹ்வை வணக்கும் போது அவனை பார்ப்பது போன்ற எண்ணத்துடன் வணங்கவேண்டும். அப் படியில்லை எனி ல், அவன் உன்னைப் பார்த்துக் கொண்டி ருக்கிறான் என்ற எண்ணத்துடன் வணங் கவேண்டும்”. சூபி அறிஞர்கள் சூபி சத்து க்கான வரைவிலக்கணத்தைக் கூறியுள் ளனர். “இறைவனின் எண்ணத்தைத் தவி ர மற்ற எல்லாவற்றிலிருந்தும் விலகுவ தற்கு மனதைத் தயார்படுத்துவதை நோக் கமாகக் கொண்ட ஒரு அறிவிய ல் என வரையறுத்துள்ளனர்”. தர்காவி சூபி ஆசி ரியரான அகமது இபின் அசிபா என்பவர், “சூபிசம் என்பது, இறைவனை அடையும் வழியைத் தெரிந்து கொள்வதற்கும், ஒரு வர் தனது உள்ளத்தைத் தூய்மைப்படுத் திக் கொள்வதற்கும், அதனைப் போற்றத்தக்க பண்புகளால் அழகு படுத்துவதற்குமான ஒரு அறிவியல் என்கிறார்”.

பாரம்பரிய சூபிகளை அவர்கள் திக்ர் (இறைவனின் பெயர்களை பல முறை உச்சரிக்கும் ஒரு பயிற்சி, பொது வாக தொழுகையின் பின்னர் மேற்கொள் ளப்படுகின்றது), துறவறம் உடன் தொடர்பு கொண்டி ருந்ததை வைத்து பண்பிட்டிட முடியும். சூபிசமானது பல முஸ்லிம்களி டையே ஆதரவைப் பெற்றது, முக்கியமாக ஆரம்பகால உமை யாக்களின் உலகப் பற் றுக்கு எதிராக ஆதரவாளர்களை பெற்றுக் கொண்டது (கி.பி.661-750). ஓராயிரம் வரு டங்களுக்கு மேலாக சூபிகள் பல கண்டங் கள் மற்றும் கலாச்சாரங்களிடையே பரவியிருக்கின்றது. ஆரம்பத்  தில் அவர்களின் நம்பிக்கைகள் பாரசீகம், துருக் கி, இந்தியமொழி மற்றும் பல மொழிகளிடையே பரவ முன்னர் அரபுமொழியில் தெரிவிக்கப்பட்டது.

4. அகமதியா இஸ்லாம்

அகமதியா என்பது 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் பிரித்தா னிய இந்தியாவில் தோற்றம் பெற்ற ஓர் இஸ்லாமிய சீர்திருத்த இயக்கம். பஞ் சாப் மாகாணத்தில் வாழ்ந்த மிர்சா கு லாம் அகமது (1835-1908) இந்த இய க்கத்தின் முன்னோடி ஆவார். முகம் மது நபிக்குப் பிறகு வந்த இறைத்தூத ராகத் தன்னை இவர் அறிவித்தார். மிர் சாவை இறைத்தூதர் என நம்புவதால் முகம்மது நபியே இறுதி இறைத் தூதர் என்ற பெரும்பான்மை முகம்மதியர் களின் கருத்தில் இருந்து அகமதியர்கள் மாறுபடுகின்றனர். இதனா ல் பல இஸ்லாமிய நாடுக ளில் அகமதியர்கள் அடக்கு முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள் ளாகின்றனர்.

பாகிஸ்தான்: உலகில் அதிகள விலான அகம்மதியர்கள் வாழு ம் நாடு பாகிஸ்தான். ஏறத்தாழ இரண்டு முதல் ஐந்து மில்லியன் அகம் மதியர்கள் வாழ்கின்ற போதிலும் அந்நாடு அவர்களை இசுலாமியர் என ஏற்றுக் கொள் வதில்லை. அகம்மதியர்களை இசுலாமியர் அல் லாதோர் எனக் குறிக்க அந்நாட்டு அரசியலமை ப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய ப்பட்டது. நோபெல் பரிசு பெற்ற இயற்பியலாளர் அப்துஸ் சலாம் அக மதியர் என்பதால் அவரது கல்லறையில் இருந்து முஸ்லீம் என்ற வார்த்தை நீக்கப்பட்டது. 28.05.2010 அன்று லாகூரில் உள்ள அகம்ம தியர்களின் தொழுகையிடத்தில் இசுலாமிய அடிப் படைவாதிகள் நடத்திய தாக்குதலில் 95 பேர் மரணமடைந்தனர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

பங்களாதேசம்: வங்காள தேசத்தி லும் அகமதியர்கள் முஸ்லீம்க ளாக கருதப்படுவதில்லை. அகம தியா இயக்கத்தினரின் ஊடக வெ ளியீடுகள் அனைத்தும் தடை செ ய்யப்பட்டுள்ளன. அகமதியர்கள் இறைமறுப்பாளர்களாகவே கருதப்படுகின்றனர்.

இந்தியா: இந்தியாவில் அகமதிய இயக்கத்தினர் இந்தியச் சட்டத்தி ன் அடிப்படையில் முஸ்லீம்களா கவே கருதப்படுகின்றனர். கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றும் அகமதியரை முஸ்லீம் என உறுதி செய்துள்ளது. அகமதியர்களின் வழிபாட்டு உரிமைக்கு எந்தவிதத் தடையும் இந்தியாவில் இல்லை.

ஜீகாத்

ஜீகாத் – அரபு ழொழியில் தொடர்ந்து முயற்சி செய்தல், போராட்டம் என பொருள்படும் இஸ்லாமி யர்களின் கடமையாகும்.

சுன்னி இஸ்லாமில் அதிகார பட்சமாக இடமில்லாதப் போ தும் சில வேலைகளில் ஜிகாத் இசுலாமின் ஆறாவது தூணா கவும் அழைக் கப்படுவதுண்டு.

ஷியா இஸ்லாமில் ஜிகாத் ( புனிதப் போராட்டம்) 10 முக்கி ய கடமைகளில் ஒன்றாகும்.

ஏழாம் நூற்றாண்டு முதல் 21 ஆம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய மதத்தின் எழுச்சியானது இஸ்லாமியர்களால் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மீது ஜிகாத் எனும் பெய ரால் நடத்தப்படும் வன் முறையின் மூல மாகவே பெறப்படுகிறது. இஸ்லாமிய மத ம் அடிப் படையில் அமைதி வழி மார்க்கம் அல்லது வன்முறை வழி மார்க்கம் அல் லது இரண்டும் கலந்த வழிமுறைகளைக் கொண்ட மார்க்கம் என விவாதிக்கப்படு கிறது. இஸ்லாமியர்களின் புனித நூலான கு ரானின் சில வசனங்கள் ஜிகாத்தை இ ஸ்லாமியர்களின் முக்கியக் கடமை என் று குறிப்பிடுகிறது. இத்தகைய வசனங்க ளை அடிப்படை வாதிகள் செயல்படுத்துவ தன் மூலமாக தீவிரவாதத்தை நியாயப்ப டுத்துகின்றனர்.

சில அமைப்புக்களும் அதுபற்றிய தகவல்களும்

ISIS

தலைவர்: அபூ பக்கர் அல்-பக்தாதி

தொடக்கம்: 2013

இசுலாமியப் பிரிவு: சுன்னி

இசிஸ் எனும் தீவிரவாத அமைப்பு 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் தியதி அபூ பக்கர் அல்-பக்தா தியால் உருவாக்கப்பட்டது. இது முதலில் அல்-காயிதா அமைப்பி ன் ஈராக்கியப் பிரிவாகச் செயற் பட்டது.

இராக்கிலும் சாமிலும் இஸ்லாமிய அரசு Islamic State in Iraq and the Levant சுருக்கமாக ISIL அல்லது இசிஸ் (ISIS) என்று அழைக் கப்படுகிறது. இசிஸ் இயக்கம் ஓர் ஆயுதம் தாங்கிய தீவிரவாதக் குழு ஆகும். இது சிரியா மற்று ம் ஈராக்கில் இயங்குகிறது. இசிஸ் இயக்கத்தின் நோக்கம் ஈரான் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இஸ்லாமிய ஆட்சியை உருவா க்க வேண்டும் என் பதாகும். இக்குழுவானது ஈராக் போரின் போது உருவாக்கப்பட்டது. பின் னர் 2004 ஆம் ஆண்டில் இசிஸ் இயக்கம் அல் காயிதாவுடன் இ ணைந்து செயல்பட்டது. இது சுணி இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள ஈராக் பகுதிகளில் கலீபா ஆட்சியை நிறுவி பின்னர் அவ்வாட்சியை சிரியாவுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயற் பட்டு வருகின்றது. 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அல் காயி தா இசிஸ் உடனான தனது தொடர்பை முறித்துக் கொண்டது. இக்குழு வானது அல் காயிதாவை வி டவும் அபாயகரமான குழு என நிபுணர்கள் கருதுகின்ற னர்.

ஈராக்கியப் போரின் உச்சத்தி ன் போது இக்குழுவானது ஈராக்கின் அல் அன்பார் (Al Anbar), நைனவா (Ninawa), கிர்குக் (Kirkuk) மற்று ம் சலாஹுத்தீன் (Salah ad Din) பகுதியில் பெரும்பான்மையையும் மேலும் பாபில் (Babil), தியாலா (Diyala), பக்தாதின் பெரும்பான் மையான பகுதிகள் என்பவற்றிலும் தாக்குத லில் ஈடுபட்டது. இது பகுபாவைத் தனது தலைநகராக அறிவித்துக் கொண்டது. சிரிய மக்கள் போர் தொடக்க காலத்தில் இக்குழுவா னது சிரியாவின் அர்-ரக்கா (Ar -Raqqa), அலெப்போ (Aleppo) ஆ கிய பகுதிகளில் தாக்குதல் நடத்தி யது. அரசு இராணுவ வீரர்களைக் கொன்றது மட்டுமல்லாமல் ஆயிர க்கணக்கான பொது மக்களைக் கொன்றதாகவும் இசிஸ் குழு பொ றுப்பேற்றுக் கொண்டுள்ளது. அ மெரிக்கக் கூட்டுப் படைகள் இப் பகுதியில் இருந்த காலகட்டதில் இக்குழுவானது பின் னடைவைச் சந்தித்தது. 2012 ஆம் ஆண்டின் பிறபகுதியில் இக்குழு தனது உறுப்பினர்களின் எண்ணிகையை 2,500 என இரட்டிப்பாக்கி யது. சிரியாவின் வட பகுதியில் குறிப் பிடத்தக்க வெற்றிகளை இக் குழு பெற்றுள்ளது.

இந்த அமைப்பினர் ஷியா இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்க ளையும், கிறிஸ்தவத்திற்கு மாறும் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களை நடாத்துவதுண்டு.

அல் காயிதா

தலைவர்: அய்மன் அல் ழவாகிரி

தொடக்கம்: 1988

சுலாமியப் பிரிவு: சுன்னி

ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிசுத்தான், சோமாலியா, ஏமன் மற்றும் உலக முழு வதும்

அல்-காய்தா ஜிகாத் கொள்கையுடைய பன்னாட்டு சுணி முஸ்லிம் ஆயுதக்குழு க்களின் ஒன்றியமாகும். இவ்வியக்கம் 1989 ஆம் ஆண்டில் அப்கானிதானில் இருந்து சோவியத் படைகள் வாபஸ் பெற்ற காலத்தில் ஒசாமா பின் லாடன் மற்றும் சிலரால் பாகிஸ்தா னின் பெ ஷாவரில் 1988 ஆகஸ்ட்-க்கும் 1989 ன் வருடக்கடைசிக்கும் இடையில் தொடக்கப்பட்டதாகும். முஸ்லிம் நாடுகள் மீதான வெளி நாட்டு பாதிப்புகளைக் இல்லாதொழித்து மு கமது நபியின் காலத் தை ஒத்த ஒரு தலைவருக்குக் கீழான இசு லாமிய இராச்சியத்தை உருவாகுதல் அல்-காய்தாவின் முக்கியக் கொள்கைகளில் ஒன்ற கும். உலகின் பல்வேறு நாடுகளில் மக்களி ன் மீதும் ராணுவத்தின் மீதும் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது.

அல்-காய்தா பல உலக நாடுகளிலும் பன்னாடு நிறுவனங்களாலும் பயங்கரவாத அமைப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. இவற்றுள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை, நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அமெரிக்க நாடுகள், அவுஸ்திரேலியா, கனடா, இசுரேல், யப்பான், நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, சுவீடன், சுவிட் சர்லாந்து என்பவை முக்கியமானவையாகும். அல்-காய்தா உறுப்பி னர்கள் உலகின் பல நாடுகளிலும் தாக்குதல்களை மேற்கொண்டு ள்ளனர். இவற்றுள் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் முக்கியமான வையாகும். செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு ஐக்கிய அமெரி க்க அரசு அல் கைடாவுக்கு எதிராக பாரிய புலனாய்வு மற்றும் இரா ணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஒசாமா பின் லேடன் அல் கைதாவைத் தோற்றுவித்தவர்

தாலிபான்

தலைவர்: முல்லா முகமது ஓமார்

இசுலாமியப் பிரிவு: சுன்னி

தலிபான் எனப்படுவோர் ஆப்கானிஸ்தா னை 1996 முதல் 2001 வரை ஆட்சி செய்த சுன்னி இஸ்லாமிய தேசியவாத அமைப்பா கும். 2001 இல் ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மற்றும் ஐக்கிய இராச்சிய ம் ஆகிய நாடுகளின் உதவியுடன் இவ்வமை ப்பின் தலைவ ர்கள் பதவியில் இருந்து அகற்றப்பட்டனர். அடிப்படைவாத தீவிரவா த அமைப்பாகக் கருதப்படும் “தலிபான்” பாகிஸ்தானின் பழங்குடியி னரின் பகுதிக ளில் தோற்றம் பெற்றது. தற்போது ஆப்கானிஸ்தானி ன் அரசுக்கெ திராகவும் நேட்டோ படைகளுக்கெதிராகவும் கெரில்லா முறையி ல் போரிட்டு வருகிறது.

தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முகமது ஓமார் ஆவார். தலிபானின் படைகளில் பெரும்பாலா னோர் தெற்கு ஆப்கானிஸ்தானிலு ம் மேற்கு பாகிஸ்தானிலும் உள்ள பாஷ்டன் மக்கள் ஆவார். இவர்க ளைவிட சிறிய அளவில் ஐரோப்பா மற்றும் சீனாவைச் சேர்ந்த தீவிரவா திகளும் இவ்வமைப்பில் உள்ளனர். தலிபான் பாகிஸ் தான் அரசிடம் இருந்து இராணுவப் பயிற்சிகளை யும் பெருமளவு இராணுவத் தளவாடங்களையும் பெற்றனர்.

மேல் சொன்ன அமைப்புக்களை விடவும் பல அமைப்புக்கள் பல நாடுகளில் இஸ்லாமிய பிரிவுகளுக்கு எதிராகவும் மற்ற மதத்தவர் களிற்கு எதிராகவும் வன்முறைகளும் போராட்டங்களும் செய்து வருகின்றது. இவர்களின் வன்முறை போராட்டத்திற்கு பின்னணி யில் உலக வர்த்தகம் துணை நிற்பதை மறைப்பதற்கு இஸ்லாமிய தீவிரவாதம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: