Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது ஏன்? அது அவசியமானதா?

ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது ஏன்? அது அவசியமானதா?

பாலினுள்ளே நெய் மறைந்திருப் பதைப் போல், எல்லா இடங்களி லும் இறைவன் நிறைந்து மறைந் திருக்கிறான். கடைந்த தயிரில் வெண்ணெய் திரண்டு வருவது போல, ஞானிகள் உள்ளத்திலும், திருக்கோயிலிலும் இறைவன் விளங்கிக் காட்சி அளிக்கிறான்.

மற்ற இடங்களில் இறைவனை

நினைத்துத் தியானிப்பதாலும், துதிப்பத னாலும், வழிபடுவதினாலும், வினைக ள் வெதும்புகின்றன. கோயிலில் இறை வனை வழிபட் டால், வினைகள் வெந்து, எரிந்து, கருகி, நீறாகி விடுகின்றன.

கொடிய வெயிலில் ஒரு துணியை வை த்தால், அத்துணி வெதும்புமேயன்றி, வெ ந்த சாம்பலாகாது. சூரியகாந்தக் கண் ணாடியை (லென்ஸ்) வெயிலில் வைத்து, அதன் கீழே குவிந்து வரு ம் சூடான கதிரில் துணியை வைத்தா ல், அது கருகிச் சாம்பலாகி விடுகிற து. நேர்வெயிலுக்கு இல்லாத ஆற்ற ல், சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வரும் வெயிலுக் கு உண்டு.

பரந்து விரிந்திருக்கின்ற கதிரவனு டைய கதிர்களின் வெப்பத்தை ஒன்று படுத்தி, தன் கீழேயுள்ள இடத்திற்குச் சூரியகாந்தி கண்ணாடி பாய்ச் சுகிறது. பிற இடங்களில் இறைவனை வழிபடுவது நமது பாவங்களை எரிக்க, சூரிய காந்தக் கண்ணாடியின்கீழ் வைப்பது போ லாகும். ஆகையால் மற்ற எல்லா இடங்க ளிலும் வழிபட்டாலும், திருக்கோயிலில் வழிபாடு செய்வது இன்றியமையாததாகும்

“மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயந்தானும் அரன் எனத் தொழுமே”

என்பது சிவஞானபோதம்.

நமது திருக்கோயில்களில் உள்ள திரு உருவ ங்கள், தேவர்களாலும், முனிவர்களாலும், நால்வர்கள், ஆழ்வார்கள் போன்றவர்களால் நிறுவப்பட்டு, துதிக்கப்பட்ட காரணத்தால் மே ன்மை பெற்று, வழிபடுவோருடைய வல்வினைகளை அகற்றி வரங் களை அளிக்கின்றன. இத்தகைய தனிச்சிறப்பைப் பெற ஆலயத்து க்குச் சென்று வழிபடுவதே மிக உயர்ந்ததாகும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: