Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நிமிர்ந்தது நீதி!

நிமிர்ந்தது நீதி!

2014,  அக்டோபர் (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்

வருமானத்திற்கு  அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பு, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு வரலாற்றுத் தீர்ப்பு. சட்ட‍த்தின் முன் அனைவரும் சமம், என்பதற்கும் ஜனநாயகத்தின் நம்பிக்கையான காவல் தூண் நீதித் துறை என்பதற்கும் இதை விட

முன் னுதாரணத்தை இனி எவரும் காட்டவியலாது.

தன்முன் நிற்பவர் ஒரு மாநிலத்தின் முதல்வர்… இந்திய அரசியலில் வலுவான சக்தி.. 37 நாடாளுமன் ற உறுப்பினர்களையும் கோடிக்கணக் கானத் தொண்டர்களையு ம் கொண்ட ஒரு அகில இந்தியகட்சியின்மாபெரும் தலைவர் என்பதை யெல்லாம் நினை த்து சஞ்சலப்படாமல், சட்ட‍த்தின் முன் அவரையும் சாதாரண பிரஜையாகவே மதித்துத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவின் தைரியமும் நேர்மையும் பாராட்டு க்குரியது.

தண்டனைக்குரிய காலம் அதிக பட்சமானது… அபாரதத் தொகை எவருமே நினைத்துப் பார்க்காதது .. இதற்கு இவருக்கு அதிகாரம்உள்ள‍தா? இந்தத்தீர்ப்பு சரியானதுதானா? போன்ற விவாதங்கள், விமர்சனங்கள் ஒரு பக்க‍ம் இருந்த போதிலும்.. இத்தீர்ப்பு இந்திய அரசியல்களத்தை அதிர வைக்கிறது. ஊழலிலேயே ஊறி ஊரை நாறடித்துக் கொண்டிருக்கும் பல கேடிகளை மன்னிக்க‍வும் பலகோடிக ளை ஏப்ப‍ம்விட்ட‍ ஊழல்வாதிகளை வாயடைத்துப்போக வைத்திருக்கிறது.

அரசு பேருந்தில் பயணித்த கக்கன், நாலு வேட்டிக்கூடசேர்க்க‍ இயலாது இறந்து போன காமராஜர், எளிமை யாகவே வாழ்ந்து மறைந்து போன பேரறிஞர் அண்ணா போன்ற தலை வர்களால் தலை நிமிர்ந்து இருந்த தமிழ்நாட்டில் அரசியல் பெருமை இன்று இந்த தீர்ப்பால் களங்கப்பட்டு நிற்கிறது.

தீர்ப்பினை கேட்ட‍பிறகு தொண்டர்களுக் கு வருத்த‍ம்பானே வரவேண்டும். கோபம் என்ற பெயரில் இத்த‍னை வன்முறை தேவைதானா? இவையெல்லாம் கண்டிப் புக்கும், தண்டிப்புக்கும் உரியவை.

30 நாட்குக்கு ள் அப்போதே முடித்திருக்க‍வேண்டிய இவ்வ‍ழக்கை வாய்தா.. வாய்தா… என்று வம்படித்து நீதி மன்றத்தை அலைபாய வைத்த‍தற்காக இன்றைய கடுமையாக விழிப்புணர்வு ள்ள‍ சட்ட‍த்தின் பிடியில் தனக்குத் தானே சிக்கிக் கொண்டுள்ளார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் தெய்வ பக்தியும்கொண்ட செல்வி ஜெய லலிதா இதிலிருந்து மீண்டு வர வாய்ப்பு கள் இல்லாமலில்லை. அதுவரை தன் தொண்டர்களை அமைதிக் காக்கவேண்டி க் கொள்ள‍வேண்டும். தான் மீண்டும் பதவிக்கு வரும்வரை தற்போதுள்ள‍ அழு வாச்சி அமைச்சர்களை சுதந்திரமாய், தைரியமாய், திறம்பட ஆட்சி நடத்த‍ ஆணை யிட வேண்டும்.

பிரதமராய் இருந்த வல்ல‍மைப்படைத்த‍ இந்திராவையே கூண்டிலேற்றிய வலிமை மிக்க‍சட்ட‍ம் நம்முடைய சட்ட‍ம். 66கோடிக்கே 4வருட தண்டனை 100கோடி ரூபாய் அபராதம் என்றால்… 2ஜி, 3ஜி ஆதார்ஷ் நிலக்கரி போன்றவற்றில் சிக்கியவர்களுக் கு எவ்வ‍ளவு தண்டனை என்று இந்தியாவே நீதி மன்றத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

பெங்களூரில் நிமிர்ந்த நீதி, எங்களூரி லும் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதே உரத்த‍ சிந்தனை உள்ள‍ ஒவ்வொரு வருடைய எதிர்பார்ப்பு.


+|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|+

இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர் 

உதயம் ராம் (நம் உரத்த‍ சிந்தனை)

தொடர்புக்கு கைபேசி 94440 11105

+|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|:|+

3 Comments

  • Priyan

    தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் தெய்வ பக்தியும்கொண்ட செல்வி ஜெயலலிதா இதிலிருந்து மீண்டு வர வாய்ப்புகள் இல்லாம லில்லை….
    இப்படி சொல்வதற்கு பதிலாக,
    தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் தெய்வ பக்தியும்கொண்ட செல்வி ஜெயலலிதா, தவறு செய்தால் முதல்வராக இருந்தாலும் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என்றும் கூட சொல்லலாம்…

  • As usual, excellent editorial by Udhayam Sir. All the journalists should be courageous to expose the corruptions of political leaders irrespective of their influence and power.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: