Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒருவர் இறந்த பின் 3 நிமிடங்கள் வரை அவருக்கு நினைவுகள்! – மரண ஆய்வில் ஆச்சரிய தகவல்

ஒருவர் இறந்த பின் 3 நிமிடங்கள் வரை அவருக்கு நினைவுகள்! – ஆய்வில் ஆச்சரிய தகவல்

ஒருவர் இறந்தபின் 3 நிமிடங்கள் வரை அவருக்கு நினைவுகள் இருக்கு ம் என இங்கிலாந்தை சேர்ந்த  சவுத் தாம்ப்டன் பல்கலை கழக விஞ்ஞானி களிகளால் ஆய்வில் கண்டறியப்பட்டு ள்ளது. இது மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவக்குழு இங் கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரியாவில் உள்ள

15 மருத்துவமனைகளில் உள்ள 2060 நோயாளிகளிடம் கடந்த 4 ஆண்டுக ளாக ஆய்வு மேற்கொண்டது.

இதில், ஒருமனிதனின் இதய துடிப்பு நின்ற 20முதல் 30விநாடிகளில் அவ னின் மூளையும் செயல்பாட்டை இழ ந்துவிடும் எனவும், அதன்பிறகு 3 நிமிடங்கள் வரை அவனைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் குறித்த நினைவு கள் அவனுக்கு இருக்கும் எனவும் ஆய்வில் கண்டறிய ப்பட்டுள்ளது.

உயிரிழக்கும் தருவாயில் இருக்கும் ஒரு நோயாளியிடம் நினைவு கள் க ண்டறியும் கருவிபொருத்தப்பட்டதில் , அவர் உயிரிழந்தபிறகு அவரை உயி ர்பிழைக்க வைப்பதற்காக டா க்டர்கள் மற்றும் நர்ஸ்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றி அந்த நோயாளியின் நி னைவுகள் பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.  மரணம் தொடர்பான ஆராய்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு இந்த ஆய் வு எடுத்து செல்லும் என தெரி கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: