Wednesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜெயலலிதாவுக்காக தீக்குளிக்க‍ முயன்ற கவர்ச்சி நடிகை – சென்னையில் பரபரப்பு

ஜெயலலிதாவுக்காக தீக்குளிக்க‍ முயன்ற கவர்ச்சி நடிகை – சென்னையில் பரபரப்பு

இன்று மதியம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த கவர்ச்சி நடிகை ஒருவரை பெண் காவலர் ஒருவர் தடுத்துச் சோதனை செய்தார், அப்போது அந்த கவர்ச்சி நடிகை, ஒரு பாட்டிலில் மண்ணெண் ணெய் வைத்திருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து அதை பறிக்க அந்த பெண் காவலர் முயற்சித்தார், ஆனால்

அதற்குள் அந்த கவர்ச்சி நடிகை, தான் வைத் திருந்த அந்த மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொள்ள‍ முய ற்சி செய்தார். இவரது இந்த செயலை அங்கி ருந்த காவல்ரகள் தடுத்துவிட்டனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெய லலிதாவை விடுதலை செய்யக்கோரி இப்படி ஒரு தற் கொலை முயற்சி செயலில் ஈடுபட்டிருப்ப‍தாக விசார ணையில் தெரியவந்தது. மேலும் அந்த கவர்ச்சி நடிகை , அம்மா வாழ்க என்று கூறியபடி சாலையில் படுத்துக் கொண்டு ஆர்ப்பாட்டமும் செய்தார். அவரை காவலர்க ள் உடனடியாக வந்து அப்புறப்படுத்தினர். அந்த கவர்ச்சி நடிகையுடன் மற்றொரு பெண்ணும் உடன் இருந்தார், அவர் அந்த கவர்ச்சி நடிகையின் மகள் என்று கூறப்படு கிறது. காவல் ஆணையர் அலுவலகத்தில், அந்த கவர் ச்சி நடிகை  தற்கொலைக்கு முயற்சித்தது பெரும் பரபர ப்பை ஏற்படுத்தியது.

தீக்குளிக்க‍ முயன்ற கவர்ச்சி நடிகை யார் என்றால் . . .

எம்.ஜி.ஆர்., நடித்த ‘அமரகாவியம்’, ரஜினி நடி த்த ‘கர்ஜனை’ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த பழம்பெரும்  நடிகை அதுவும் முன்னாள் கவர்ச்சி நடிகை மாயா என்பது தெரியவந்தது

One Comment

  • sam

    நடிகை தீக்குளிப்புக்கு முயற்சி என்பது செய்தியாக வெளிப்படுத்துவது இதனை எதிர்பார்த்து செய்திருக்கலாம். இதற்காக போலீஸ் தரப்பில் வழக்கு பதியப்பட்டதா? அதற்கு தண்டனை தரப்படவேண்டும், ஏனெனில் இது மற்றவர்களுக்கு துாண்டலாக அமையக்கூடாது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: