Saturday, May 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"நானே ஒரு போலீஸ். என்னை ஒன்றும் செய்ய முடியாது!" – போதையில் மிரட்டிய போலீஸ்

அக்டோபர் 16 அன்று இரவு சுமார் 9.45 மணியளவில் சாலிகிராமம் ஆவிச்சி பள்ளிக்கூடம் மற்றும் காமரா ஜர் சாலை சந்திப்பு அருகில் ஒரு சாலை விபத்து ஏற்பட்டது. சுமார் 26 வயது மதிப் புள்ள ஆர்.சுமிதா என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, எதிரேவந்த ராமதாஸ் என்பவரின் இரு சக்கர வாகனம் மோதியது. இதில் நி லைகுலைந்து கீழே விழுந்த சுமிதாவுக் கு தலையில் பலத்த அடி. ரத்தம் சொட்ட சொட்ட அவர் ராமதாசிடம் வாக்கு வாதத் தில் ஈடுபட்டார்.

விபத்துக்கு காரணமான ராமதாஸ் விரு கம்பாக்கம் காவல் நிலையத்தில்

காவலராக பணியாற்றி வருகிறார். விபத்து நடந்த நேரத்தில் அவர் நன்றாக குடித்திருந்தார் என்பதும், போலீ ஸ் யூனிபார்மில் இருந்தார் என்பதும் குறி ப்பிடத்தக்கது. நடந்த விபத்திற்கு வருத்தம் தெரிவிக்காவிட்டால் கூட பரவாயில்லை.

நானே ஒரு போலீஸ். என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று போதையில் மிர ட்டியதுதான் இன்னும் கொடுமை. சம்பவ ம் நடந்த இடமும் விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதி என்பதால், R. சுமிதாவுக்கு நியாயம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வீர்களா Chennai City Traffic Police நீங்கள் செய்வீர்களா ?

முகநூலில் சங்கர் என்பவர் பகிர்ந்த பதிவு இது

https://www.facebook.com/profile.php?id=100007384787541

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: