Sunday, October 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம்-19-10-14- உன் கணவன் விதித்த தடைகளை முழுமையாக பின்பற்று.

அன்புடன் அந்தரங்கம்-19-10-14- உன் கணவன் விதித்த தடைகளை முழுமையாக பின்பற்று.

அன்புள்ள அம்மா,

எனக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. என் வயது, 26; கணவரின் வயது, 28. ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவர் ஒரு கம்பெனியில் நல்ல வேலையில் உள்ளார். பார்க்க அழகு; அன்பான வர். நானும் சுமாராக இருப்பேன்.

என் பிரச்னை என்னவென்றால், என் குடும்பம் ஏழ்மையானது. ஒரு அண்ணன், திருமணமாகி மனை வியுடன் தனியே சென்று விட்டார். நான், என் மாமனார், மாமியார், கணவர், குழந்தை, மாமியாரின் அம்மா – இது என் குடும்பம். ஆரம்பம் முதற்கொண்டே

என் தாய், தந்தையரை என் கணவருக்கு பிடிக்காது. அவர்கள், என் னிடம் போனில் கூப்பிட்டால்கூட என் கணவர், நான் வெளியில் இருக்கிறே ன் என்று பொய் சொல்வார். இல்லை யென்றால் போனை, ‘கட்’ செய்துவிடு வார். என்அம்மா வீட்டிற்குசென்று திரு ம்பும்போது, ‘போய்வருகிறேன்..’ என்று கூட சொல்வது கிடையாது. நான்தான் சொல்ல வேண்டும். குழந்தையை அவ ர்கள் தொடக்கூடாது. சமீபத்தில், ஒரு விருந்தில் என் குழந்தையை என் அம் மா ஆசையாய் தூக்கியபோது, அனை வரின் முன்னிலையில், முகத்தில் அ றைந்தாற்போல், ‘குழந்தையை கீழே விடுங்கள்…’ என்று கூறி விட்டார் என் கணவர். என் அம்மாவிற்கு கண்ணீரே வந்துவிட்டது. இத்தனைக்கும் என் குழந்தையை வளர்த்தவர் அவர்தான். என் அம்மா, அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லை என்றால்கூட நான் பார்க்கப்போகக் கூடாது; என் வீட்டிற்கோ, உறவினர் வீடுகளு க்கோ தனியே செல்லக்கூடாது. போ னில் யாருடனும் பேசக்கூடாது. இப்ப டி சொல்லிக் கொண்டே போகலாம். நானும் பொறுமையாக இருந்து விட் டேன்; என்னால்முடியவில்லை. அன் பா, அழுது சண்டையிட்டும் சொல்லிப் பார்த்து விட்டேன்; திருந்துவதாக இல் லை. என்னைவிட்டு ஒரு நிமிடம் கூட பிரிந்து இருக்க மாட்டார் என் கணவர். என் மேல் அவ் வளவு காதல். எனக்கும் என் கணவர் என்றால் உயிர். என் குடும்பம் கூலி வேலை செய்யும் குடும்பம். என் கணவரிடம் பத்து பைசா கூட எதிர்பார்க்க மாட்டார் கள். கூலிவேலை செய்து, பிளஸ்2 வரை படிக்க வைத்தனர். காதல் வலையில் வீ ழ்ந்து, பெற்றோர் சம்மதத்துடன், இவரை கரம் பிடித்தேன். நான் எதிலும் சுதந்திரம் கேட்கவில் லை. என் தாய், தந்தைக்கு நான் ஒரு மகளாக செய்யும் கடமைக ளை செய்யவிட்டால் போதும். அவர்களி டம் அன்பாய் ஒரு வார்த்தை போனில் பேசினால் கூட நிம்மதி கிடை த்துவிடும். அவரின்தாய், தந்தைக்கு நான் இன்று வரை ஒரு மகளா கத் தான் இருந்திருக்கிறேன்; இது அவருக்கே தெரியும். என் மேல் கு ற்றம் இல்லை அம்மா. இப்படி பெற் றவர்களை நோகடித்து, நமக்கு ஒரு இன்பமான வாழ்க்கை தே வையா என்று, பல சமயம் நினைக் கிறேன். இத னால், என் கணவரை பிரிந்துவிடலாமா என, சில சமயம் தோன்றுகி றது. சரியான முடிவு சொல்லுங்கள் அம்மா.

இப்படிக்கு
உங்கள் மகள்.

அன்புள்ள மகளுக்கு,

வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்து கொண்ட உன் கணவ னுக்கு, உன் பெற்றோரின் வறுமை இளப்பமாக தோன்றுகிறது. எல் லாவற்றையும் மீறி, தான், தம் குடு ம்பம் நன்றாக இருக்க வேண்டும். அடுத்தவர் குடும்பத்துடன் ஒட்டுத லோ, உறவோ தேவையில்லை என்கிற உன் கணவனின் சுயநலமே, உன்னை உன் வீட்டு மனிதர்க ளுடன் ஒட்ட விடாததற்கு காரணம். சில ஆண்களுக்கு, மாமனார் தேவையில்லை; மாமனார் பெற்ற மகள் தேவை.

தனியே போனில் உன்னை உன் பெற்றோரி டம் உன் கணவன் பேச அனுமதிக்காததற் கான காரணம், ஒன்று, கணவனின் குடு ம்பத்தினர்பற்றிய குறைகளை உன் பெற்றோரிடம் கூறிவிடுவாயோ என்ற பயம். இரண்டு – தனியே மணிக்கணக்கில் பேசி, பெற்றோர் மீ தான பாசத்தை பலமடங்கு பெருக்கிக்கொள்வாயோ என்ற சுய நலம் .

பெற்று, வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்கி, பெரும் செலவு செய்து திருமணம் செய்து வைக்கும் பெ ற்றோரை, புகுந்த வீட்டில் காலடி வைத்ததும், லகுவாக மறந்து விடுகின்றனர் சில பெண்கள். தந் தைக்கு, ‘ஹார்ட் அட்டாக்’ என்ற செய்தி வந்தாலும், மரணச் செய்தி வரட்டும் ஒரேயடியாக போய் கொள்ளலாம் என, இரும்பு மனதுடன் இருக்கும் மகள்களும் தமிழகத்தில் உண்டு. பெற்ற தாயை சமைய ல்காரியாகவும், ஆயாவாகவும் பாவிக்கும் பெண்களும் இருக்கின் றனர். அவர்களுக்கிடையே நீ அபூர் வமான பெண் தான்.

பெற்றோரின் மீது பாசத்தைப் பொ ழிய அனுமதிக்காத கணவனுடன், இன்ப வாழ்க்கை தேவையா என்ற குற்ற உணர்வில் மருகியிருக்கிறா ய். இந்த ஒரு பிரச்னைக்காக, கணவனை பிரிய நினைப்பது தவறு.

சிறிது சுயநலத்துடன் உன் பெற்றோர் மீதான அன்பை கொஞ்சமாக சுருக்கிக்கொள். நீ மாமனார், மாமியாரி டம் தனியேபேசி, பெற்றோருடன் மாதம் இருமுறையாவது பேசிக்கொள்ள கண வனை சம்மதிக்க வை. கணவன் நல்ல மூடில் இருக்கும்போது, உன் கணவனு க்கு அவனது பெற்றோர் எவ்வளவு முக் கியமோ, அவ்வளவு முக்கியம் உனக்கு உன் பெற்றோர், என்பதை விளக்கு.

இதற்கும் உன் கணவன், கணவன் வீட்டார் ஒத்துவரவில்லை என் றால், இறுகிய மனதுடன் கணவ ன் விதித்த தடைகளை முழுமை யாக பின்பற்று. நீ, உன் கணவ னை விட்டு பிரிந்து வந்து, தங்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என, உன் பெற்றோர் கனவிலும் விரும்ப மாட்டார்கள். எல்லா உற வுகளும், பிரிவதற்கே என்ற தத்து வார்த்த நிலைக்கு என்றோ வந்தி ருப்பர்.

அனைத்தையும்மீறி, நீ உன் பெற்றோருடன் பேசவேண்டும் என்றால், ரகசியமாக ஒரு கைபேசி வாங்கிக் கொண்டு பேசு. பெற்றோ ரை தலைமுழுகிவிட்டதுபோல நடித்தபடி, அவர்களிடம் அன்புபாராட்டு.

என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத், தினமலர்

One Comment

  • g.munusamy

    Hi, nalla alosanai, ungal alosaniku mikka nandri, ippadium sila angal oru silarum pengalil oru silarum irukattan seigirargal, namum adarku takka padi nadandukulla vendiadu nammidame ullathu. mikka nandri.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: