Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மழைக்காலத்தில் கூந்தல் எளிய முறை பராமரிப்பு வழிமுறைகள்

மழைக்காலத்தில் கூந்தல் எளிய முறை பராமரிப்பு வழிமுறைகள்

கோடைகாலத்தில் அதிகபடியாக வறண்டு பாதிப்பிற்கு உள்ளாகும் கூந்தல் மழைக் காலத்தில் நன்கு குளிர்ந்து எப்போதும் ஈர ப்பதத்துடன் இருப்பதால் வலுவிழந்து இரு க்கும். அதுமட்டுமின்றி, ஈரப்பதத்துடன் எண்ணெய் பசை இருந்தால், கூந்தலிருந் து ஒருவித துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும்.

ஆகவே மழைகாலத்தில் கூந்தலில் இருந் து துர்நாற்றம் ஏற்படாம ல் இருப்பதற்கு, கூந்தலை அன்றாடம் முறையாக பராமரி த்து வர வேண்டும். இப்போது எளிய முறையில்

கூந்தல் பராமரிப்பு வழிமுறைகளை பார்க்கலா ம்…

ஸ்கால்ப்பானது சுத்தமாக இல்லாவிட்டால் மழை காலத்தில் அதிக படியாக ஈரப்பசையினா ல் அரிப்புகளுடன், துர்நாற்றத்தை ஏற்படுத் தும். ஆகவே வாரத்திற்கு மூன்று முறை ஷாம்பு போ ட்டு அலசினால், கூந்தலில் தூசுபடிவதை தவிர் க்கலாம். அப்படி பயன்படுத்தும் ஷாம்பு, மழை காலத்தில் எண்ணெய் பசை அதிகமாக இரு க்கும் ஷாம்புவை பயன் படுத்தக் கூடாது.

ஏனெனில் இவை இன்னும் கூந்தலில் எண்ணெ ய் பசை அதிகரித்து துர்நாற்றத்தை அதிகரிக்கும். எனவே இயல்பாகவே எண்ணெய் பசை கொண் டவர்கள், மைல்டு ஷாம்புவை பயன்படுத்த வே ண்டும். அதிலும் ஷாம்புவிற்கு பதிலாக நெல்லி காய், சீகைக்காயை போன் றவற்றை கொண்டு கூந்தலை பராமரிப்பது இன்னும் சிறந்தது.

மேலும் கூந்தலில் துர்நாற்ற ம் வீசாமல் இருக்க வேண்டுமானால், கூந்தலுக்கு ஹேர் கண்டிஷ னர் பயன்படுத்தவேண்டும். அதிலும் கண்டகண் ட ஹேர் கண்டிஷனர்களை பயன்படுத்தாமல் விலை அதிகமாக இருந்தாலும் நல்ல தரமான ஹேர் கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டு ம்.

அல்லது இயற்கை ஹேர் கண்டிஷனர்களையே எப்போதும் தேர்வு செய்யுங்கள். அதிலும் எலுமி ச்சை சாறு, பேக்கிங் சோடா அல்லது ஆப்பிள் சீட் வினிகர் போ ன்றவற்றை பயன்படுத்தி கூந்தலை அலசு வது இன்னும் சிறந்தது.

மழைக்காலங்களில், ஹேர் ஸ்ட்ரைனின், ஹேர் கலரிங் போன்றவ ற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது கூந்தலில் பாதி ப்பை அதிகப்படுத்துவதுடன், ஸ்கால்ப்பை யும் அதிக பாதிப்புக்குள்ளாகும். எனவே இந்த செயல்களை தவிர்ப்பது நல்லது.

=> சுகாசினி வரதப்ப‍ன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: