Wednesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாம்பு கடித்ததால் விபரீதம்- மரக்கட்டையாக மாறிய சிறுமியின் கால். அதிர்ச்சியான நேரடி காட்சி – வீடியோ

இங்கிலாந்தில் உள்ள 13 வயது சிறுமி ஒருவரை விஷ பாம்பு ஒன்று அவருடைய காலில் கடித்ததால் பாம்பின் விஷத்தால் அந்த சிறுமி யின் கால் கருப்பாக மரக்கட்டை போல மாறிவிட்டது. தற்போது அந்த

சிறுமியின் உயிருக்கே அது ஆபத்தாக மாறியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள லிவர்புல் என்ற பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விஷத்தன்மை கொண்ட பாம்பு ஒன்று காலில் கடித்துவிட்டது. முதலில் அந்த சிறுமி அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் இரண்டு நாட்களில் காலில் உணர்வு இல்லாததால் அந்த சிறுமியின் பெற்றோர் அவரை உள்ளூர் மருத்துவர் ஒருவரிடம் காட்டி சிகிச்சை பெற்றனர். சில நாட்களில் சரியாகிவிடும் என்று கவனக்குறைவாக அவருடைய பெற்றோர் விட்டுவிட்டதால் சில நாட்களில் சிறுமியின் கால் மிகவும் மோசமடைந்தது.

அதன்பின்னர் லிவர்புல் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்த போதும் அவருடைய கால் குணமடையவில்லை. மாறாக அவர் கால் கொஞ்சம் கொஞ்சமாக கருப்பு நிறத்தில் மரக்கட்டை போல மாறிவிட்டது. அந்த சிறுமிக்கு என்ன வகை சிகிச்சை கொடுப்பது என்பது தெரியாமல் மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.
பாம்பின் விஷம் சில நாட்களில் சிறுமியின் காலில் உள்ள திசுக்க ளை முழுவதுமாக அழித்து வருவதாகவும் இதற்கு Necrosis என்ற பெயர் என்றும் கூறிய மருத்துவர்கள் சிறுமியின் காலை அகற்றாவி ட்டால் அவருடைய உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று கூறியுள்ள னர். இன்னும் அந்த சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Snake bite causes girl’s leg to rot away with severe necrosis

 

Girl’s leg rot, mummified after venomous snake bite | WARNING: GRAPHIC CONTENT

Horrific Snake Bite Causes Girl’s Leg to Shrivel and Turn Black after Venom Causes Necrosis!!!

Snake bite causes girl’s leg to rot away with severe necrosis

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: