Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கவர்ச்சியான லெனோவா யோகா 2 டேப்லெட்! அதி நவீன தொழில்நுட்பத்துடன் . . .

கவர்ச்சியான லெனோவா யோகா 2 டேப்லெட்! அதி நவீன தொழில் நுட்பத்துடன் . . .

டிஸ்ப்ளே:

இந்த டேப்லெட், முழு ஹெச்டி டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இந்த 8 இன்ச் IPS டிஸ்ப்ளே ஒரே நேரத்தில் பத்து விரல்களை செ ன்ஸ் செய்யும் விதத்தில் அதிநவீன

தொழில் நுட்பத்தைக் கொண் டுள்ளது. 1920×1200 பிக்ஸல் ரெஸ ல்யூஷன் வாடிக்கையாளர்களுக் குத் தெளிவான மற்றும் கூர்மை யான டிஸ்ப்ளேயாக அமையும்.

வடிவமைப்பு:

கவர்ச்சியான லெனோவா யோகா 2 டேப்லெட், ஒரு மெட்டாலிக் லுக்கை கொண்டது. சில இடங்க ளில் மெட்டலால் செய்யப்பட்டா லும், சிறிது பிளாஸ்டிக்கும் இந்த டேப்லெட்டின் வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வடிவ மைப்பைப் பொறுத்தவரை, எந்தக் குறையும் இல்லை. அனைத்தும் பிளஸ்தான். மேலும், ‘கிக்-ஸ்டா ண்ட்’ என்ற துணைக் கருவியை டேப்லேட்டின் பின்புறத்தில் காண லாம். இது டேப்லேட்டை பல ஆங் கிள்களில் பயன்படுத்த உபயோக மாக இருக்கும். தவிர, இந்த கிக்- ஸ்டாண்ட் மூலம் டேப்லெட்டை தொங்கவிட்டும் பயன்படுத்தலாம்.

சேமிப்பு:

3G மற்றும் 4G வசதியோடு வரும் இந்த லெனோவா யோகா 2 டேப்லெட், லேட் டஸ்ட் ஆண்ட்ராய்டு இயங்குதளமான 4.4கிட்கேட் தளத்தைக்கொண்டு இயங் குகிறது. ‘Dolby Audio’ ஸ்பீக்கர்களை க் கொண்டுள்ள இந்த டேப்லெட், 16GB இன்டர்னல் மெமரியைக் கொண்டுள்ள து. 64GBவரை SDமூலம் விரிவுபடுத்தியும் கொள்ளலாம். லெனோ வா யோகா 2 டேப் லெட், ‘Flipkart’ இணையதளத்தில் ரூ. 20,990 என்ற விலையில் வாடிக்கையாளர்களுக்கு க் கிடைக்கிற து.

கேமரா:

8 மெகா பிக்ஸல் பின்புற கேமராவும் 1.6 மெகா பிக்ஸல் முன்புற கேமராவு ம் கொண்டுள்ள இந்த யோகா 2 டேப் லெட், f2.2 ‘wide aperture’ லென்ஸ்களைக் கொண்டுள்ளது. இந்த லென்ஸ் அதிகத் தொழில் நுட்ப ஸ்மார்ட்போன்களில் மட்டுமே பயன் படுத்தப்பட்டு வந்த நிலையில், சில  டேப்லெட் களிலும் தற்போது பயன்ப டுத்தப் படுவது சிறப்பம்சம்.

பிராசஸர்:

தற்சமயம் பலரும் குவால்காம் பிராசஸர்களையே பயன்படுத்தினா லும், லெனோவா யோகா 2 டேப்லெட் ‘இன்டெல்’ நிறுவனத்தின் பிராசஸரையே பயன்படுத்துகிறது. 1.86GHz குவாட்-கோர் பிராசஸ ரான இது சாதாரணமான டேப்லேட்களை விட நிச்சயமாக வேகமாக இயங்கு ம். இந்த வேகத்துக்கு பேட்டரி எந்த அளவுக்கு ஈடுகொடுக்கும் என்கிற கேள்வியும் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்து ள்ளது.

பேட்டரி:

6400 mAh லித்தியம் – ஐயான் பேட்டரியைக் கொண்டுள்ள யோகா 2 டேப்லெட்டானது, சாதார ண டேப்லெட்களைவிட சக்திவாய்ந்தது. கிட்டத்த ட்ட 18மணிநேரம் வரை உழைக்கும் என்று லெனோவா நிறுவனம் உறுதியளித்துள்ளது. ஒரு நா ள் (8 மணி நேரம்) சராசரி கேமிங், பிரெளஸிங் மற்றும் பயன் பாட்டுக்கு இந்த பேட்ட ரி போது மானதாக இருக்கும் என்று நம்பலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: