Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விபச்சாரத்தை சட்டப்பூர்வ தொழிலாக அங்கீகரிக்கலாமா ?

விபச்சாரத்தை சட்டப்பூர்வ தொழிலாக அங்கீகரிக்கலாமா ?

விபச்சாரத் தொழிலை சட்டப்பூர்வ தொழிலாக

Smt. Lalitha Kumaramangalam

அங்கீகரித்து விடலாம்’ என, தேசியமகளிர் ஆணையத்தின் தலைவர், லலிதா குமாரமங்க லம், சமீபத்தில் கருத்து தெரிவித்தநிலையில், மகளிர் அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித் துள்ளன.

பெண்கள் பாதிப்பு:

விபசாரத்தில் ஈடுபடுவது சட்ட விரோதம்; அது, தண்டனைக்குரிய குற்றம். இதனால், அந்த தொ ழிலில் மறைமுகமாக ஈடுபடுவோர், போலீஸ் மற்றும் பிற துறையினரால் துன்புறுத்தலுக்கு ஆளாகுகின்றனர்; இதனால், அப்பாவி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின்நலனை கருத்தில்கொண்டு, விப சாரத்தை சட்டப்பூர்வ தொழிலாக அறிவித்துவிடலாம் என, தே சிய மகளிர் ஆணையத்தின் தலை வர், தமிழகத்தை சேர்ந்த லலிதா குமாரமங்கலம், சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விபசாரத்தை சட்டப் பூர்வ தொழிலாக அங்கீகரிக்கலா மா என்பது குறித்து முடிவெடுக்கக் கோரி, மூன்றாண்டுகளுக்கு முன், சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட், ஒரு கமிட்டியை அமைத்துள்ளது.அந்த கமிட்டி, அனைத்து தரப்பினரிட மும் கருத்து கேட்டு வருகிறது. அதில், வரும் 8ம் தேதி, மகளிர் தேசிய கமிஷன், தன் தரப்பு கரு த்தை வைக்க உள்ளது. அதில், விபசாரத்தை சட்டப்பூர்வ தொ ழிலாக அங்கீகரிக்கலாம் என, தெரிவிக் க உள்ளது. அந்த குழு அளிக்கும் பரிந்துரையை ஆராயும் சுப்ரீம் கோர்ட், இதற்கான உத் தரவை பின்னர் வெளியிட உள்ளது.

இந்நிலையில், பெண்கள் நல அமைப்புகள், மகளிர் ஆணைய த்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரி வித்துள்ளன.

ஏ.ஐ.பி.டபிள்யு.ஏ., என்ற அமை ப்பின் தலைவி, கவிதா கிருஷ் ணன் கூறும் போது, ”விபசாரம் சட்டப்பூர்வமான தொழில் என அங்கீகரிக் கப்பட்டால், அதில் ஈடுபடுவது தவறில்லை என்ற மனநிலை பெண்களுக்கு ஏற்பட்டு வி டும்; எனவே, அந்த உத்தரவை கவனமாக வெளியிடவேண்டும். விப சாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக் கு மட்டும், அந்த அங்கீகாரம் பாது காப்பு அளிக்க வேண்டும்,” என்றார்.

கொடுமை:

அதுபோல, சி.எஸ்.ஆர்.என்ற அமை ப்பின் தலைவி, ரஞ்சனா குமாரி, ”விபசாரத்திற்கு அங்கீகாரம் அளித்தால், தொழிலாளர் சட்டங்களி ல் திருத்தம் செய்ய வேண்டும். நேர்மையான, கண்ணியமான தொழில்கள் தான், தொழில்களாக கருதப்படும். இது போன்ற கொடுமைகளுக்கு, தொழில் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக் கிடும் போது, விபசாரம்மூலம் கிடைக்கும் வருமானமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா என்ப தை அரசு விளக்க வேண்டும்,” என்றார்.

மகிழ்ச்சி இல்லை:

சக்தி வாஹினி என்ற அமைப்பி ன் நிர்வாகி, ரவிகாந்த் கூறும் போது, ”விபசார தொழிலில் ஈடு படும் பெண்கள், அதை மகிழ்ச்சி யாக செய்வதில்லை; ஏதாவது ஒரு நிர்பந்தத்தால் அவ்வாறு செ ய்கின்றனர். அத்தகையவர்கள், போலீஸ் மற்றும் பிற துறையினரி ன் கெடுபிடிகளுக்கு ஆளாகும்போது, தங்கள் தொழி லும் சட்டப் பூர்  வமாக அறிவிக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர். அவர்கள் ஒரு போதும், இந்த மோச மான தொழிலுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வேண்டு ம் என விரும்புவதில்லை,” என்றார்.
 
=> தினமலர் நாளிதழிலிருந்து

One Comment

  • லலிதா குமாரமங்கலம் அவர்கலே இதர்க்கும் மோடி சேவை வரி விதிப்பார்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: