Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களுக்கோர் சவால்!

உங்களுக்கோர் சவால்! – உங்களுக்கோர் சவால்! – உங்களுக்கோர் சவால்!

சில ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதி, இதே விதை2விருட்சம் இணையத்தில் வெளயிட்ட எனது புதிர்க் கவிதைக்கு உங்களால் சரியான விளக்கத் தைச் சொல்ல முடியுமா? உங்களுக்கு

நான் விடுக்கும் சவால் இது.

கீழே நான் எழுதிய புதிர்க்கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளேன். அந்த கவிதைக்கு சரியான விளக்க‍த்தினைச் சொல்லுங்கள் பார்க்கலாம் . உங்களது அறிவுத்திறத்தை இங்கு காட்டுங்கள்.


இதோ எனது புதிர்க்கவிதை

 
வேரில்லா
கொடியின்
காம்பில்லா
ம‌லரின்
இதழை
கைபடாது
பறித்திடவா
எனக் கேட்க‌
க‌னம் இல்லா
தலைக்கேட்டு
த‌னமில்லா
த‌னவானும் இணங்க‌
நீரில்லா
குளத்தின்
நடுவே
அனல்காற்றை
முன்னிறுத்தி
வாய் இல்லாத
ஊமைகள் வாழ்த்த‍
கண் இல்லாத‌
குருடர்கள் பார்க்க‍
செவி கேளா
செவிடர்கள் கேட்க‌
அறுபடா
நூலெடுத்து
முடிகள்
மூன்று
சூடும் வேளையில்
பறித்திடுவாய்
என்றே பதில் வந்தது.
=>=>=>=> எழுதியவர் ராசகவி ரா சத்தியமூர்த்தி

உங்களது விளக்கத்தினைக் கருத்துக்களாகத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்களது விளக்க‍ம், ஒரே வரியில் இல்லாமல் வரிக்கு வரி இருத்த‍ல் அவசிய‌ம்

8 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: