Wednesday, May 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தேனீர் (டீ): பலே வகைகளும், தயாரிக்கும் முறைகளும்! – இவ்வ‍ளவு வகைகளா? – அய்யோடா

தேனீர் (டீ): பலே வகைகளும், தயாரிக்கும் முறைகளும்! – தேனீரில் (டீயில்) இவ்வ‍ளவு வகைகளா? – அய்யோடா

சிறுவர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் சுறுசுறுப்பும், புத்து ணர்வும், உற்சாகமும் அளிக்கவல்ல ஒரு சுவையான

பானம் தேநீர். சுவையான தேநீர் தயாரிப்பதும் ஒரு கலை தான். 

சில வித்தியாசமான சுவையான தேநீர் தயாரிக்கும் முறைகளை பார்ப்போம்.

சாதாரண டீ

1/2 லிட்டர்பாலுக்கு , 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, நன்றாக கொதிக்க வைக்க‍வேண்டும். அடுப்பில் கொதித்துக் கொ ண்டிருக்கும்  போதே அதில், டீத்தூள், சர்க்கரை சேர்த்து, அடுப்பில் வைத்து இன்னும் ஒரு  10 நிமிடம் கொதிக்க விடவும். பொங்கி வரும்போ தெல்லாம் கலக்கி, கலக்கி, திரும்ப வைக்க வேண்டும். பொங்கி வழிந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும். சிறிதுநேரம் கழித்து அதை அப்ப‍டியே எடுத்து வடி கட்டுங்கள்.

டீ டிக்காஷன்

1/2 லிட்டர் பச்சை தண்ணீரில் 2 டேபிள்ஸ்பூன் டீ தூளை கலந்து 12 மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின்பு வடிகட்டினால் டீ டிக்காஷன் ரெடி.

ஐஸ் மின்ட் டீ

ஒரு தம்ளரில் உடைத்து வைத்துள்ள ஐஸ் கட்டி யில் டீ டிக்காசனை ஊற்றவும். அதில் எலுமிச்சை மற்றும் ஆரஞ்ச்துண்டுகளை போடவும். சிறிது புதினா இலை களை தண்ணீர் கலந்து மிக்ஸ்யில் அடித்து அதில் போடவும், பின்னர் பரிமாறினால் சுவையாக அருந்த லாம்.

கிரீன் டீ

ஒருடம்ளர் தண்ணீரை கொதிக்கவைத்து, அதே கொதிநிலையிலே யே இறக்கிவிட்டு பின், ஒரு தேக்கரண்டி அளவு கிரீன் டீ போட்டு நன்றாக மூடி வைக்கவும். 2 நிமிடம் கழித்து பார்த்தால், குருணை போல் நாம் போட்ட கிரீன் டீ இலை இலையாக இருக்கும். வடிகட்டி ஓரிருசொட்டுகள் எலுமிச்சை சாறு கல ந்து சர்க்கரைசேர்க்காமல் அப்படியேகுடிக்கலாம். சர்க்கரை சேர்க் காமல் குடிப்பது ரொம்ப நல்லது. குடிக்க கஷ்டமாக இருந்தால், தேன் கலந்தோ, சிறிதளவு சர்க்கரை சேர்த்தோ குடிக்கலாம். ரொம்ப துவர்ப்பதுபோல் இருந்தா ல், தூளைக்கொஞ்சம் குறைத்துக்கொள்ளலாம் .

ஆப்பிள் அபரிடிஃப் டீ

ரு தம்ளரில் டீ டிகாஷன் மற்றும் ஆப்பிள் ஜூஸ் இரண்டும் சம அளவில் ஊற்றவும். அதி ல் சிறிது ஐஸ் கட்டிகளை உடைத்து போடவும். அதில் ஒரு டீஸ்பூன் சீனி மாற்று மேலுமிச்சை பழ சாறுகளை ஊற்றவும். நன்றாக கலந்த பின் பரிமாறினால் நன்றாக இருக்கும்.

மசாலா டீ:

ஏலக்காய் 6, கிராம்பு-6, சோம்பு 1 டீஸ்பூன், தனியா 1/2 ஸ்பூன் ஜாதிக்காய் சிறு துண்டு சுக்கு சிறு துண்டு, பட்டை சிறிது இவற்றை நைஸாக பொடிசெய்யவும். தேநீருக்கு தண்ணீர்கொதித்து ம் இந்த பொடியையும் தேயிலையுடன் சேர்த்துப் போட்டு கொதித்ததும் சீனி, பால், சேர்த்து வடிகட்டி அருந்தவும். இது குளிர்காலத்திற்கு சூடு கொடுக் கும் அருமையான தேநீர்.

ரோஸ் டீ:

தேநீர் கொதிக்கும் போது புத்தம் புது ரோஜா இதழ்கள் சிலவற்றை போட்டு தேநீர் தயாரிக்க வும். ரோஜா பூ இதழ்களை ஒரு டப்பாவில் போ ட்டு வைத்தும் தேவையான போது உபயோகிக் கலாம்.

கோகோ டீ:

 குழந்தைகள் சாக்லேட் மணம் கொண்ட கோ கோ டீயை மிக விரும்புவர். டீ தயாரிக்கும் போ து தேவையான கோகோ பவுடர் சேர்த்து கொ திக்க விட்டு பரிமாறவும்.

இஞ்சி டீ:  

அஜீரணம் வயிற்று கோளாறுகளை நீக்க வல் லது இஞ்சி டீ. இஞ்சியை தோலை சீவி விட்டு நன்கு நசுக்கி டீ கொதிக்கும் போது சேர்த்து தேநீர் தயாரிக்கவும்.

ஏலக்காய் டீ:

ஏலக்காய்களை தோலுடன் பொடி செய்து தே நீரில் சேர்த்து கொதிக்க விடவும். இனிப்புகள் செய்ய ஏலப்பொடி செய்யும்போது ஏலக்காய் தோலை எரியாமல் சேகரித்து வைத்த உப யோகப்படுத்தலாம்.

எலுமிச்சை டீ:

நீரை கொதிக்கவிட்டு தேயிலைப்போட்டு நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டவும். ஆறியதும் அதில்தேவையான எலுமிச்சைசாறு பிழியவும். தேவையான சர்க்கரை சேர்த்து சில ஐஸ் கட்டி களைப் போட்டு பால் இல்லாமல் குடிக்கவும்.

புதினா டீ:

சில புதினா இலைகள், துளசி இலைகள், இவ ற்றுடன் சிறுதுண்டு இஞ்சியை நசுக்கி போட்டு 4,5 மிளகைப்பொடி செய்துபோட்டு நீரில் கொதி த்ததும் தேயிலை, சீனி, பால், கலந்து வடிகட்டி அருந்தவும். இதுஜலதோஷம் இருமல் இவற்றிற் கு உடனடிநிவாரணம் அளிக்கும்.

சிறு குறிப்பு

தேநீர் நம் இதயத்திற்கும் நுரையீரலுக்கும் பலமளிக்கும் டானிக். நரம்பு, தசை, மண் டலங்களை சுறுசுறுப்பாக்கி புத்துணர்வு தருகிறது. காபி அருந்துவதைவிட தேநீர் அருந்துவது நல்லதே! அளவோடு அருந்த வேண்டும். அளவுக்குமீறினால் நரம்புக ளையும் வயிற்றையும்  பாதிக்கும். மிக சூடாக அருந்தும் தேநீர் வயிற்றின் உட் சுவர்களை புண்ணாக்கும்.

தொகுப்பு – விதை2விருட்சம் இணையம்

One Comment

Leave a Reply

%d bloggers like this: