Friday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மழை- குளிர்க்காலத்தில் ஏற்படும் நோய்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க…

மழை-குளிர்க்காலத்தில் ஏற்படும் நோய்களிடமிருந்து குழந்தைக ளைப் பாதுகாக்க பயனுள்ள குறிப்புக்கள்..
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், மழை-குளிர்க் கால நோய்கள் எளிதில் தாக்கும். நோய் பாதிக்கப் பட்ட குழந்தைகள், சிகிச்சைகளை எதிர்கொண்டு மீண்டு வருவதற் குள் அதிக சிரமங்களை

சந்திக்க வேண்டியிருக்கும். பெற்றோர் கொஞ்சம் பாதுகாப்பாக இருப்பதன் மூலம் குழந்தைகளை இந்த நோய்களில் இருந்து காப்பாற்ற முடியும்.

குழந்தைக்கு மெல்லிய ஆடைகளை அணிவிக் காமல் கதகதப்பான ஆடைகளை  அணிவிக்க வேண்டும். தேவைப்பட்டால் ஸ்வர்ட்ட‍ர் அணிவி க் க‍லாம்.

பகல் நேரத்தில்தான் கடிக்கும் கொசுதான் டெங்கு வைப் பரப்புகின்ற ன‌. எனவே, அந்த கொசு கடிக்காத வகையில் கை, கால் முழுவதும் மூடிய ஆடைகளை அணிவிக்க வேண்டும்.

கொசு குழந்தைகளை கடிக்காதவாறு கொசுவிரட்டி கிரீம்களை (Repellent Cream)பயன்படுத்தலாம். ஆனால் பெரியவர்கள்பயன்படுத்தும் ஸ்ட்ராங் கிரீம் களை குழந்தைகளின் மெல்லியசருமத்துக்குபயன்படுத்தக்கூடாது.

கொசுவலைகளைப் பயன்படுத்தலாம்.

என்னதான் மழை பெய்தாலும் தினமும் குழந் தையைக் குளிப்பாட்ட வேண்டும்.

நன்கு கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீ ரையே குடிக்கக் கொடுக்க வேண்டும்.

அவ்வப்போது சமைத்த சூடான உணவையே கொடுக்கவேண்டும்.

கைகளை சோப் (அ) கிருமிநாசினி போட்டு அடிக்கடி கழுவவேண்டும். குழந்தைகளையு ம் அவ்வாறே செய்யத் தூண்ட வேண்டும்.

குழந்தைகளைத் தூக்குவதற்கு முன்பு கைகளைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

பெரியவர்களுக்குச்சளிகாய்ச்சல் இருந்தால்சரியா கும் வரை குழந்தையைத் தூக்குவதையோ, குழந் தை அருகில் செல்வதையோ தவிர்க்க வேண்டும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply